Monday, 15 January 2018

விசுவாசம் என்பது சுயநினைவற்றதாகும் Faith is unconscious



101. கவனியுங்கள். நான் ஒரு காரியத்தைக் கூறப்போகிறேன். கவனியுங்கள். விசுவாசம் என்பது சுயநினைவற்றதாகும் (Faith is unconscious). (unconscious என்ற வார்த்தைக்கு ‘சுயநினைவற்றது’, ‘தன்னுணர்வற்றது’, ‘மயக்கமாக’ என்ற அர்த்தங்களும் உண்டு – மொழிபெயர்ப்பாளர்.) ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உலகத்தைச் சுற்றிலும் பிரயாணம் பண்ணி, எல்லா வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட ஜனங்களைச் சந்தித்த வருடங்களில் நான் அதைக் கற்றுக் கொண்டேன். ஆனால் விசுவாசமானது சுயநினைவற்றதாகும். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றும் அதை அறியவும் கூட இல்லை. அது உண்மை.

102. இயேசு கிறிஸ்து ஒரு புயலில் இருந்தாலும், கடும் புயல்காற்றானது அந்தப் படகில் மோதி ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரையில் தாக்கினாலும், அல்லது ஒரு கூட்டம் பிசாசுகளின் முன்னால் அவர் நின்று கொண்டிருந்தாலும் அது ஒரு காரியமில்லை; அவர் எவ்விடத்தில் தொங்கிக் கொண்டிருந்தாலும், அது அவரை ஒருபோதும் அசைக்கவேயில்லை. அவர் அதனூடாக அமைதியாக நடந்து அவரால் கூடுமானவரை அமைதியாகவே இருந்தார். ஏன்? அவர் பயத்தைக் குறித்தும், அவரைச் சுற்றியுள்ள எதையும் குறித்தும் வெறுமனே சுயநினைவற்றிருந்தார். அது உண்மை. அது சம்பவித்தாலும் சம்பவிக்காமல் போனாலும் அவர் சுயநினைவற்றவராயிருந்தார்; அது சம்பவிக்கப்போகிறது என்று அவருக்குத் தெரியும், ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறினார். அவர், ‘ஓ, நான் முற்றிலுமாக ஜெபித்து விட்டேனா என்று வியப்படைகிறேன்? நான் போதுமான நீண்டகாலம் உபவாசம் இருந்து விட்டேனா என்று வியப்படைகிறேன்? நான் இதை செய்து விட்டேனா என்று வியப்படைகிறேன்?’  என்று கூறவில்லை. அவர் வெறுமனே சுயநினைவற்று நடந்து சென்றார். அது சரியே. தேவன் சொன்னது சத்தியம் என்பதை அவர் விசுவாசித்தார். அந்த வார்த்தைகள் நிறைவேறியாக வேண்டும், அவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவருடைய ஜீவியம் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது சரியே.

103. நீங்களும் கூட அதை நிறைவேற்றுவதற்காகவே இங்கிருக்கிறீர்கள். பயத்தைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடந்து செல்லுங்கள். குற்றம் கண்டுபிடிக்கப்படுவதைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடவுங்கள். உலகத்தைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடவுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் நடப்பது போல நடவுங்கள். வலது புறமோ இடது புறமோ எந்த கவனமும் செலுத்தாமல் அப்படியே தொடர்ந்து அவரோடு நடந்து செல்லுங்கள். சபையில் ஏதோவொன்று எழும்புமானால், தேவனோடு நடவுங்கள். அல்லேலூயா. வியாதி உங்களைத் தாக்கினால், தேவனோடு நடவுங்கள். அண்டை வீட்டுக்காரனுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், தேவனோடு நடவுங்கள். அப்படியே தொடர்ந்து தேவனோடு நடந்து கொண்டேயிருங்கள்.

104. ஏனோக்கு ஒருநாள் அவ்விதமாகவே நடந்து சென்றான். அவன் என்ன செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் வீடு வரைக்கும் வழியெல்லாம் தேவனோடே நடந்து சென்றான்; இச்சமயத்திலோ அவன் மேலேயுள்ள பாதையை அடைந்தான், அவன் அதற்கு மேலும் திரும்பி வர விரும்பவில்லை. ஆமென்.

105. தேவனோடு நடவுங்கள். நீங்கள் மரிக்கப்போகிறீர்கள் என்று மருத்துவர் கூறலாம்; தேவனோடு நடவுங்கள். ஆமாம். உங்களால் முடியாது என்று மருத்துவர் கூறலாம்... நல்லது; தேவனோடு நடவுங்கள். அப்படியே தேவனோடு நடந்து செல்லுங்கள்; அவ்வளவு தான். ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருப்பேன்’ என்று தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அவர் உங்களுக்குக் கொடுத்து, உறுதிப்படுத்தியிருக்கிற அந்த உடன்படிக்கையின் மூலமாக அவர் ஆணையிட்டுள்ளார். அப்படியானால் அப்படியே தேவனோடு நடவுங்கள்.

செய்தியின் தலைப்பு: அவர் தமது பேரிலே தானே ஆணையிட்டார், 54-1212
~~~~~~~~~~~~~

Sunday, 14 January 2018

சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சகோதரி ஹோப் (பிரம்பாக்) பிரன்ஹாம்



சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சகோதரன் பிரம்பாக் (சகோதரி ஹோப்புடைய தந்தை)



சகோதரி பிரம்பாக் (சகோதரி ஹோப்புடைய தாய்)



சகோதரி ஹோப்



சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சகோதரி ஹோப் (தேனிலவின் போது)


சகோதரி ஹோப் (பிரம்பாக்) பிரன்ஹாம்

கீழ்வரும் படத்தில் இருப்பது சகோதரன் பிரன்ஹாமும் அவருடைய முதல் மனைவியான சகோதரி ஹோப்பும் தான், சகோதரி ஹோப் அவர்கள் பில்லி பால் மற்றும் ஷாரோன் ரோஸ் ஆகியோரின் தாய் ஆவார்கள்.


1937ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, சகோதரி ஹோப் அவர்கள் காசநோயினால் (TB) நலிந்து போனார்கள். இதன் காரணமாக அதே வருடம் ஜøலை மாதம் 22ம் தேதி, வியாழக்கிழமையன்று மரித்து, ஜøலை மாதம் 24ம் தேதி சனிக்கிழமையில் அடக்கம் பண்ணப்பட்டார்கள். அவர்களுடைய சிறிய மகள் ஷாரோன் ரோஸ் சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு காலையில் ஏதோவொரு நேரத்தில் மரித்து, திங்கட்கிழமை அடக்கம் பண்ணப்பட்டாள்.



அவர்கள் இருவரும் வால்நட் ரிட்ஜ் கல்லறை தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டார்கள். அந்த இடம் சகோதரி ஹோப்பின் பெற்றோர்களால் சகோதரன் பிரன்ஹாமுக்குக் கொடுக்கப்பட்டதாகும். ஏனெனில் ஒரு அடக்கம் பண்ணும் இடத்தை வாங்க சகோதரன் பிரன்ஹாமுக்கு பணம் இல்லாதிருந்தது. அந்தக் கல்லறையில் ‘அமீலியா எச். பிரன்ஹாம்’ (Amelia H. Branham) என்று குறிக்கப்பட்டிருந்தது, இங்கு ‘H’ என்ற எழுத்து ‘ஹோப்’பைக் (Hope) குறிக்கிறது. ஷாரோன் ரோஸிற்காக, அவர்கள் ‘மகள்’ (Daughter) என்று எழுதி வைத்தனர்.


ஷாரோன் ரோஸ் மரித்த போது, சகோதரன் பிரன்ஹாம், ‘நான் உன்னை உன் தாயின் கரங்களில் கிடத்துவேன்’ என்றார். கார்டன் லின்ட்சே எழுதிய தேவனால் அனுப்பப்பட்ட மனிதன் என்ற புத்தகத்தில், ஷாரோன் ரோஸ் சவப்பெட்டியில் (casket) தன்னுடைய தாயின் கரங்களின் மேல் கிடத்தப்பட்டாள் என்று எழுதியிருந்ததை நான் எப்போதுமே நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் சகோதரி ஹோப்பின் தாயாரான திருமதி. பிரம்பாக் அவர்களின் குடும்ப வேதாகமத்தை நான் வாசித்த போது, அதில் சகோதரி ஹோப் வியாழக்கிழமை மரித்து, சனிக்கிழமை அடக்கம் பண்ணப்பட்டார்கள் என்றும், ஷாரோன் ரோஸ் சனிக்கிழமை இரவில் ஏதோவொரு நேரத்தில் மரித்து திங்கட்கிழமை அடக்கம் பண்ணப்பட்டாள் என்றும் இருந்தது. எனவே அவர்கள் அதை எப்படி செய்தனர் என்று நான் திருமதி. பிரம்பாக் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஹோப்பின் கல்லறையை திரும்பவும் திறந்ததாகவும், குழந்தையின் சிறு சவப்பெட்டியை சரியாக சகோதரி ஹோப்பின் சவப்பெட்டியின் மேல் வைத்ததாகவும் திருமதி. பிரம்பாக் என்னிடம் கூறினார்கள். இவ்விதமாக, சகோதரன் பிரன்ஹாம் சிறு ஷாரோன் ரோûஸ அவளுடைய தாயின் கரங்களில் வைத்தார்.


வால்நட் ரிட்ஜ் கல்லறைத் தோட்டம்






~~~~~~~~~~~~~~~~~