101. கவனியுங்கள். நான் ஒரு காரியத்தைக் கூறப்போகிறேன். கவனியுங்கள். விசுவாசம் என்பது சுயநினைவற்றதாகும் (Faith is unconscious). (unconscious என்ற வார்த்தைக்கு ‘சுயநினைவற்றது’,
‘தன்னுணர்வற்றது’, ‘மயக்கமாக’ என்ற அர்த்தங்களும் உண்டு – மொழிபெயர்ப்பாளர்.) ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உலகத்தைச் சுற்றிலும் பிரயாணம் பண்ணி, எல்லா வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட ஜனங்களைச் சந்தித்த வருடங்களில் நான் அதைக் கற்றுக் கொண்டேன். ஆனால் விசுவாசமானது சுயநினைவற்றதாகும். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றும் அதை அறியவும் கூட இல்லை. அது உண்மை.
102. இயேசு கிறிஸ்து ஒரு புயலில் இருந்தாலும், கடும் புயல்காற்றானது அந்தப் படகில் மோதி ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரையில் தாக்கினாலும், அல்லது ஒரு கூட்டம் பிசாசுகளின் முன்னால் அவர் நின்று கொண்டிருந்தாலும் அது ஒரு காரியமில்லை; அவர் எவ்விடத்தில் தொங்கிக் கொண்டிருந்தாலும், அது அவரை ஒருபோதும் அசைக்கவேயில்லை. அவர் அதனூடாக அமைதியாக நடந்து அவரால் கூடுமானவரை அமைதியாகவே இருந்தார். ஏன்? அவர் பயத்தைக் குறித்தும், அவரைச் சுற்றியுள்ள எதையும் குறித்தும் வெறுமனே சுயநினைவற்றிருந்தார்.
அது உண்மை. அது சம்பவித்தாலும் சம்பவிக்காமல் போனாலும் அவர் சுயநினைவற்றவராயிருந்தார்; அது சம்பவிக்கப்போகிறது என்று அவருக்குத் தெரியும், ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறினார். அவர், ‘ஓ, நான் முற்றிலுமாக ஜெபித்து விட்டேனா என்று வியப்படைகிறேன்? நான் போதுமான நீண்டகாலம் உபவாசம் இருந்து விட்டேனா என்று வியப்படைகிறேன்? நான் இதை செய்து விட்டேனா என்று வியப்படைகிறேன்?’ என்று கூறவில்லை. அவர் வெறுமனே சுயநினைவற்று நடந்து சென்றார். அது சரியே. தேவன் சொன்னது சத்தியம் என்பதை அவர் விசுவாசித்தார். அந்த வார்த்தைகள் நிறைவேறியாக வேண்டும், அவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவருடைய ஜீவியம் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது சரியே.
103. நீங்களும் கூட அதை நிறைவேற்றுவதற்காகவே
இங்கிருக்கிறீர்கள். பயத்தைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடந்து செல்லுங்கள். குற்றம் கண்டுபிடிக்கப்படுவதைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடவுங்கள். உலகத்தைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடவுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் நடப்பது போல நடவுங்கள். வலது புறமோ இடது புறமோ எந்த கவனமும் செலுத்தாமல் அப்படியே தொடர்ந்து அவரோடு நடந்து செல்லுங்கள். சபையில் ஏதோவொன்று எழும்புமானால், தேவனோடு நடவுங்கள். அல்லேலூயா. வியாதி உங்களைத் தாக்கினால், தேவனோடு நடவுங்கள். அண்டை வீட்டுக்காரனுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், தேவனோடு நடவுங்கள். அப்படியே தொடர்ந்து தேவனோடு நடந்து கொண்டேயிருங்கள்.
104. ஏனோக்கு ஒருநாள் அவ்விதமாகவே நடந்து சென்றான். அவன் என்ன செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் வீடு வரைக்கும் வழியெல்லாம் தேவனோடே நடந்து சென்றான்; இச்சமயத்திலோ அவன் மேலேயுள்ள பாதையை அடைந்தான், அவன் அதற்கு மேலும் திரும்பி வர விரும்பவில்லை. ஆமென்.
105. தேவனோடு நடவுங்கள். நீங்கள் மரிக்கப்போகிறீர்கள்
என்று மருத்துவர் கூறலாம்; தேவனோடு நடவுங்கள். ஆமாம். உங்களால் முடியாது என்று மருத்துவர் கூறலாம்... நல்லது; தேவனோடு நடவுங்கள். அப்படியே தேவனோடு நடந்து செல்லுங்கள்; அவ்வளவு தான். ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருப்பேன்’ என்று தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அவர் உங்களுக்குக் கொடுத்து, உறுதிப்படுத்தியிருக்கிற அந்த உடன்படிக்கையின் மூலமாக அவர் ஆணையிட்டுள்ளார். அப்படியானால் அப்படியே தேவனோடு நடவுங்கள்.
செய்தியின் தலைப்பு: அவர்
தமது
பேரிலே
தானே
ஆணையிட்டார், 54-1212
~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment