Thursday, 10 April 2014

வில்லியம் உப்சா அவர்களின் சாட்சி



            வில்லியம் டேவிட் உப்சா அவர்கள் அமெரிக்காவில் ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவிற்கு அருகில் 1866-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். அவர் 1910-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உழைத்தார். 1932-ல் ஜனாதிபதி அலுவலகத்தில் பணி செய்தார். உப்சா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 66 வருஷங்கள் கழிந்த  பிறகு, அவருடைய 84-வது வயதில், சகோ. வில்லியம் பிரான்ஹாம் அவர்கள் உப்சா சுகமடைந்து நடந்து செல்வதாக தரிசனம் கண்டார். அவர் உடனடியாக குணமடைந்து, தம்முடைய எஞ்சிய நாட்களில் முழுவதுமாக தம்முடைய கால்களைக் கொண்டே நடந்தார். 

       அவர் தம்முடைய 86-வது வயதில் தாம் மரிப்பதற்கு முன்பாக தாம் அற்புதமாக குணமடைந்ததை குறித்த தம்முடைய சாட்சியை ஒவ்வொரு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களுக்கும், பிரதிநிதிகளின் சட்டசபை குழு உறுப்பினருக்கு, ஜனாதிபதி ட்ரூமனுக்கும், வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும், இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ்-க்கும், ஜோசப் ஸ்டாலினுக்கும் அனுப்பினார். 

காங்கிரஸ்காரர் உப்சா தம்முடைய சாட்சியை 
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் விவரிக்கிறார்


           நான் தற்போது எண்பத்து நான்கு வயதான வாலிபன். என்னை இரட்சித்து,  ஏழு வருஷங்களாக படுக்கையில் கிடந்த என்னை எழுந்து நடக்கப் பண்ணினவரும், ஐம்பத்தொன்பது வருஷங்களாக நான் பயன்படுத்திய ஊன்றுகோல்களை என்னை விட்டு விலக்கி என்னை களிகூரப் பண்ணினவருமான கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவைகள் பேசுகிறேன். என்னை நடக்கப்பண்ணிய தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்! (சபையோர் கைதட்டி களிகூருகின்றனர்) 
 நான் என்னுடைய சாட்சியை குறித்த இந்த துண்டுபிரதியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினருக்கும், ஜனாதிபதிக்கும், அவருடைய மனைவிக்கும், மேலும் இப்பொழுது இவ்வாரத்தில் இங்கிலாந்தின் இராஜாவுக்கும், வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும் அனுப்பவிருக்கிறேன். மேலும் இதில் ஒன்றை ஜோசப் ஸ்டாலின் அவர்களுக்கும் அனுப்பப்போகிறேன். தேவன் அவருடைய ஆத்துமாவின் மேல் இரக்கமாயிருப்பாராக! 
      செய்தி :- சாட்சி,  லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, மே 9, 1951 

வில்லியம் உப்சா அவர்களின் வாழ்க்கை வரலாறு


    வில்லியம் உப்சா அவர்கள் தம்முடைய 18-வது வயதில் பண்ணையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் தம்முடைய இரு கால்களையும் இழந்தார். இதன் காரணமாக அடுத்த 7 வருடங்கள் படுத்த படுக்கையானார். இந்த விபத்து நடப்பதற்கு சிறிது முன்பாக, அவர் தம்முடைய இருதயத்தை கர்த்தராகிய இயேசுவுக்கு கொடுத்திருந்தார். அவருடைய வியாதிப் படுக்கையில் இருந்தவாறே செய்யுள்களையும்,  எழுச்சியூட்டும் கடிதங்களையும் சன்னி சவுத் (Sunny South) என்று அழைக்கப்படும் பத்திரிகையில் எழுதத் துவங்கினார். தம்முடைய திறமையான எழுத்தின் மூலம் அனேக வாசகர்களின் பிரியத்திற்கு உரியவரானார். 
இவ்வாறு கிடைத்த தொகையைக்  கொண்டு, வில்லியம் உப்ஷா அவர்கள் மெர்ஷர் பல்கலைக்கழகத்தில் 1895-ல் சேர்ந்தார். அவர் 1918-ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் ஜனநாயக கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீண்டும் 1920, 1922 மற்றும் 1924-ஆம் வருஷங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வில்லியம் உப்ஷா அவர்கள் 1932-ஆம் வருஷம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி  பதவிக்கு போட்டியிட்டார், ஆனால், அதில் தோல்வியடைந்தார். 

உப்ஷா அவர்கள் அற்புத சுகம் பெறுதல்


      அமெரிக்காவின் தெற்கத்திய பாப்டிஸ்ட் கன்வென்ஷன் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், வில்லியம் உப்ஷா அவர்கள், சங்கை. ராய் டேவிஸ் மூலம் வில்லியம் பிரான்ஹாம் அவர்களின் ஊழியத்தைக் குறித்து கேள்விபட்டிருந்தார். 1951-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸில், கல்வாரி டெம்பிளில் பிப்ரவரி 8-ம் தேதி வியாதியஸ்தருக்காக வில்லியம் பிரான்ஹாம் அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்த போது, அவர் சபையோர் முன்பு திரும்பி பின்வருமாறு கூறினார்: 
வைக்கோல் போரிலிருந்து (குவியல்) விழுந்து தம்முடைய முதுகு உடைக்கப்பட்ட நிலையிருக்கும் ஒரு வாலிப மனிதரை நான் காண்கிறேன். நரைத்த மீசையும் கீழ்பகுதி மூக்கில் கண்ணாடியை அணிந்திருப்பவருமான ஒரு மருத்துவர் இந்த வாலிபருக்கு மருத்துவம் செய்கிறார், ஆனால் அதனால் பயனில்லை. இந்த இளைஞர் புத்தகங்கள் எழுதும் ஒரு பிரபலமான மனிதராக வளர்ந்திருக்கிறார். ஜனங்கள் அவரைப் பார்த்து கைதட்டுகின்றனர். 
வில்லியம் உப்ஷா தாம் சகோதரன் பிரான்ஹாமிடம் பேச விரும்புவதாக அங்கிருந்த ஒரு உதவியாளரிடம் கூறினார், எனவே ஒரு ஒலிப்பெருக்கி அவரிடம் தரப்பட்டது. அவர், “என் மகனே, நான் ஒரு பையனாக இருந்த போதே விழுந்து காயப்பட்டேன் என்பது உனக்கு எப்படி தெரியும்?” என்று சகோ. பிரான்ஹாமிடம் கேட்டார். 
சகோ. பிரான்ஹாம், “ஐயா, அதை என்னால் உம்மிடம் கூற முடியாது, நான் கண்டதை மட்டும் என்னால் கூற முடியும்” என்று பதிலளித்தார். 
இருப்பினும் வில்லியம் உப்ஷா சுகமடையவில்லை. வில்லியம் உப்ஷா முன்வரிசையில் அமர்ந்துகொண்டிருக்க, ஜெப வரிசை தொடர்ந்து நடத்தப்பட்டது. 


   இறுதியாக ஜனங்கள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்து ஒரு பொதுவான ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. 
சகோ. பிரான்ஹாம் வார்த்தையை போதித்து, வியாதியஸ்தருக்காக ஜெபித்து விட்டு மேடையை விட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் கட்டிடத்தை விட்டு செல்லும் முன்பு, வில்லியம் உப்ஷா ஊன்றுகோலின்றி நடந்து செல்வதாக சகோ. பிரான்ஹாம் ஒரு தரிசனம் கண்டார். இத்தரிசனத்தை கேட்ட உடனே கல்வாரி டெம்பிள் சபையின் மேய்ப்பரான லிராய் கோப், “சகோதரன் பிரான்ஹாம், காங்கிரஸ்காரர் (வில்லியம் உப்ஷா) சுகமடைந்து விட்டார் என்று கூறுகிறார்” என மேடையில் துரிதமாக சென்று கூறினார். 
உடனடியாக, 66 வருடங்களாக நடக்க முடியாமல் இருந்த உப்ஷா எழுந்து ஊன்றுகோல் எதுவுமின்றி நடக்கத் தொடங்கினார். அவர் தம்முடைய எஞ்சிய வாழ்நாளெல்லாம் தம்முடைய சொந்த கால்களாலேயே நடந்து தாம் அற்புத சுகமடைந்ததைக் குறித்து தேசமுழுவதும்  சாட்சி கூறினார். அவர் 1952-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாள் மரித்தார். 
சகோ. பிரான்ஹாம்  1951-ம் வருஷம் ஜூலை மாதம் 19-ம் தேதி பிரசங்கித்த, “எங்கள் மூலமாய் கேள்விபட்டதை விசுவாசித்தவன் யார்? (Who Hath Believed Our Report?)” என்ற செய்தியில், காங்கிரஸ்காரர் உப்ஷா அவர்கள் சுகமடைந்ததைக் குறித்து பின்வருமாறு கூறினார்: 
“கர்த்தருடைய தூதன் என்னை சந்தித்து என்னிடம். ‘நீ மகத்தான மனிதர்களுக்கும். அரசியல்வாதிகளுக்கும் (Statesmen). பூமியின் இராஜாக்களுக்காகவும் ஜெபிப்பாய்’ என்று கூறின மனிதர்களில் அவரும் ஒருவர் என்று நான் உணருகிறேன்” 
Only Believe” பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது.    

************





No comments:

Post a Comment