ஜனவரி 26, 1966
ரமதா இன்,
போனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா
ரமதா இன்,
போனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா
பில்லி பால் பிரான்ஹாமின் விளக்கவுரை
நான் என்னுடைய தகப்பனாரின் ஞாபகார்த்த ஆராதனையில் பேசும்படி எனக்கு வாய்ப்பளித்த சகோ.வில்லியம்ஸ் அவர்களுக்காகவும், இங்கே போனிக்ஸில் உள்ள முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களின் சங்கத்தினருக்காகவும், அதன் சர்வதேச மேலாளர்களுக்காகவும் நன்றி செலுத்த விரும்புகிறேன்.
உங்களில் அனேகர் அறிந்துள்ளபடி, எனக்கு பேசிப் பழக்கமில்லை. நான் கடந்த பன்னிரண்டு அல்லது பதினான்கு வருடங்களாக என்னுடைய தகப்பனாரின் கூட்டங்களில் அவருடன் உடனிருக்குபடிக்கு தேவன் என்னைத் தெரிந்து கொண்டார். என் அறிவுக்கு எட்டினவரை, சகோதரன் பிரான்ஹாம், கூடார கூட்டங்களை நடத்தும் சமயத்தில், இங்கே போனிக்ஸில் நடந்த ஒரு கூட்டத்தில் தான் நான் முதல் தடவையாக ஜெப அட்டைகளைக் கொடுக்கத் துவங்கினேன். அது இங்கே வெஸ்ட் பக்கி ரோட்டில் நடந்த கூட்டம் என்று நான் நம்புகிறேன். அது 1950-ம் வருஷம் என்று நினைக்கிறேன். அந்த நேர முதற்கொண்டு, நான் வேதாகமப் பள்ளியில் இருந்த அந்த ஒரு வருஷத்தைத் தவிர நான் என் தகப்பனாருடன் தொடர்ச்சியாக பிரயாணம் செய்தேன்.
நீங்கள் பேசுவீர்களா என்று சகோ.வில்லியம்ஸ் என்னிடம் கேட்டுக்கொண்டார். நான், ‘பேசவில்லை’ என்றேன். ஆனால் இந்த காரியங்களெல்லாம் எவ்வாறு சம்பவித்தனவென்று அறியும்படி அனேக ஜனங்கள் விரும்புவதாக அவர் என்னிடம் கூறினார். என்னால் இதைச் செய்ய முடியுமா முடியாதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னால் முடிந்த சிறந்ததை செய்வேன்.
சகோதரன் பிரான்ஹாமும் நானும் இரண்டு இரவுகள் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியானாவுக்குத் திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தோம். அவர், ‘சர்ப்பத்தின் அடிச்சுவடு’ என்ற பொருளில் பேச விரும்பினார். இந்த ஆராதனையை நடத்தும்படிக்கு பள்ளியின் அரங்கத்தை பெற்றுக் கொள்வதைக் குறித்து கவனித்துக் கொள்ள எங்கள் சபையின் தருமகர்த்தாக்களில் ஒருவரும், சகோதரன் பிரான்ஹாமின் மிக நெருங்கிய நண்பருமான சகோ.உட்டிடம் தொடர்பு கொள்ளும்படி என்னிடம் கூறினார். நான் அப்படியே செய்தேன்.
சகோதரன் உட் அதை உறுதிப்படுத்துவதற்காக என்னை அழைக்கும் முன்பு, தகப்பனார் என்னை அழைத்து, ‘நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. நாம் விடுமுறையை கழிக்கும்படி சற்று வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று என்னிடம் கூறினார்.
இவ்வாறாக நாங்கள் டிசம்பர் 18-ம் தேதி திரும்பிச் செல்ல ஆரம்பித்தோம். அவர் அன்று காலையில் வழக்கம் போல என்னுடைய வீட்டிற்கு வந்தார். நாங்கள் எப்படிப்பட்ட சீதோஷ்ண நிலையை கொண்டிருந்தோம் என்று டூசானிலும் போனிக்ஸிலும் உள்ள உள்ளூர் ஜனங்களாகிய நீங்கள் அறிவீர்கள். அதற்கு பல தினங்களுக்கு முன்பிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. எனவே நாங்கள் வீட்டிற்குத் திரும்பும் போது வேட்டை உடைகளை அணிய செய்ய வேண்டும், ஏனெனில் வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் மோசமான சீதோஷ்ண நிலை இருக்கும் என்று அவர் எண்ணுவதாக முந்தின இரவே என்னிடம் கூறினார். அவர் அன்று காலையில் சுமார் 6 மணியளவில் வந்தார்.
நான் (என் குடும்பமும் நானும்) அவருடைய குடும்பத்துடன் டூசானுக்குத் திரும்பினோம். அவர் வழக்கம் போல தம்முடைய ஸ்டேஷன் வாகன் காரில் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். நாங்கள் சுமார் 6 மணியளவில் திரும்பி, பென்சன் என்னுமிடத்தில் எங்களுடைய காலை உணவைக் கொண்டிருந்தோம். பிறகு நாங்கள் அலமோகார்டோ, நியூமெக்ஸிகோவுக்கு காரோட்டிச் சென்று எங்கள் மதிய உணவைக் கொண்டிருந்தோம். என்னுடைய மகனாகிய பால் என் சகோதரன் ஜோசப்பினிமித்தம் பெரும்பாலான நாட்களில் தன்னுடைய பாட்டி (மேடா)-யுடன் பிரயாணம் பண்ணுவான்.
இடமிருந்து வலம்: லாய்ஸ்(சகோ.பில்லி பாலின் மனைவி), பால், டேவிட், பில்லி பால் பிரான்ஹாம்
நாங்கள் மதிய உணவை முடித்த பிறகு, அந்த உணவகத்தை விட்டுத் திரும்பினோம். என்னுடைய மகனாகிய பால் சிறிது தூங்கவேண்டும் என்று நான் விரும்பிய காரணத்தால் அவனை என்னுடைய காரில் என்னுடன் வைத்துக்கொண்டேன். தகப்பனாரும் என்னுடன் பேசி, ‘அது சரி. அவனை உன் காரில் வைத்துக்கொண்டு காரோட்டு’ என்றார். அதன்பிறகு நாங்கள் குளோலிஸ், நியூமெக்ஸிகோவிற்குச் சென்று ஒரு சிறிய இடத்தில் இரவுணவைக் கொண்டிந்தோம். அது டென்னியின் உணவு விடுதி என்று நான் எண்ணுகிறேன். அதன்பிறகு நாங்கள் வெளியே சென்றோம், சீதோஷ்ண நிலை மிகவும் குளிராக மாறியிருந்தது. அன்றிரவு அமரில்லோ பகுதியைச் சுற்றிலும் பனியாயிருக்கப் போகிறது என்று எண்ணினோம். எனவே நாங்கள் அந்த உணவு விடுதியை விட்டுச் செல்வதற்கு முன்னால், தகப்பனார் என்னிடம், ‘பால், நாம் கட்டாயம் போக வேண்டுமென்று நீ நினைக்கிறாயா?’ என்றார்.
நான், ‘ஓ, எனக்கு ஆட்சேபனையில்லை, லாய்ஸ் (பில்லி பால் அவர்களின் மனைவி) உடல்நலக்குறைவாக இருக்கிறாள், எனவே அமரில்லோவில் தங்குவது நலமென்று நான் யூகிக்கிறேன்’ என்று கூறினேன்.
அவர், ‘அது அருமையானது’ என்றார். எனவே அவர் தம்முடைய காரில் ஏறினார். என்ன காரணமோ தெரியவில்லை, என்னுடைய சிறிய சகோதரன் ஜோசப் என்னுடைய காரில் ஏறினான். நீங்கள் பிள்ளைகளுடன் பிரயாணம் பண்ணும்போது அது எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். காரினுள் முழுவதும் கூட்ட நெரிசலாக இருந்தது. வழக்கமாக அவன் என்னுடைய காரில் வர அனுமதித்திருக்க மாட்டேன். என்னுடைய மனைவியோ, தாயாரோ, தகப்பனாரோ நிச்சயமாக அனுமதித்திருக்க மாட்டார்கள், ஆனால் அவ்வாறு செய்வது தேவனுடைய தெய்வீக சித்தமாயிருந்தது. எனவே அவன் என்னுடன் என் காரில் ஏறினான்.
இடமிருந்து வலம்: சாரா, மேடா பிரான்ஹாம், ஜோசப், ரெபேக்கா ஸ்மித்
நாங்கள் டெக்ஸôஸின் எல்லைக்குள் தாண்டிச் சென்றிருந்தோம், அமரில்லோவிலிருந்து எண்பது அல்லது தொண்ணூறு மைல்களுக்குள் இருந்தோம். அப்போது ஒரு கார் வந்து கொண்டிருப்பதை நான் கண்டேன், எங்களை நெருங்கி வந்து கொண்டிருந்த அந்த காரின் ஓட்டுனர் பக்கமுள்ள முகப்பு விளக்கு எரியவில்லை. நான் முதலில் அது ஒரு மோட்டார் சைக்கிள் என்று எண்ணினேன், ஏனெனில் அது சரியாக நடுவழியில் வந்து கொண்டிருந்தது. நான் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை. அது சற்று இருட்டின பிறகு, சுமார் ஏழரை மணி இருக்கும் என்று நான் கூறுகிறேன்.
அது அருகில் வந்தபோது தான் அது ஒரு கார் என என்னால் காண முடிந்தது. அதன் முகப்பு விளக்குகளில் ஒன்று எரியவில்லை. நான் சொன்னபடி, டிரைவரின் பக்கமுள்ள முகப்பு விளக்கு போய்விட்டிருந்தது. நான் கண்ட முகப்பு விளக்கு சரியாக வழியின் நடுவில் இருந்தது. எனவே முழு வாகனமும் சாலையில் என்னுடைய பக்கத்தில் இருந்தது. நான் ஒரு கண நேரத்தில் என்னுடைய கண்ணாடியில் அதைக் கண்டு, என்னுடைய காரின் ஒலிப்பானால் ஒலி எழுப்பி காரை வலப்பக்கத்திற்கு சட்டென்று திருப்பினேன். அந்த காரானது சாலையின் வலது பக்கம் செல்வதைக் கண்டேன். நான் மீண்டும் பார்த்தபோது இரண்டு கார்கள் மோதிக்கொண்டிருந்தன. அந்த காரானது தகப்பனார் வந்த பாதையின் திசையில் நேரடியாக திருப்பப்பட்டிருந்தது. என்னால் பார்க்க முடிந்ததெல்லாம் இரண்டு திசைகளில் போய்க் கொண்டிருந்த இரண்டு கார்களைத் தான். தகப்பனாருடைய கார் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
என் மனைவி உரக்க கத்தினாள். அவள், ‘அது உங்களுடைய தகப்பன்!’ என்றாள். நான் நான், ‘எனக்கும் தகப்பனாருக்குமிடையில் நான் கடந்து வந்த ஒரு காரை காணவில்லை’ என்றேன். தகப்பனார் அவர்களுக்கு பிறகே மற்றொரு காரில் இன்னும் இருப்பதாக நான் எண்ணினேன். எனவே என் காரை பிரேக் போட்டு நிறுத்தி அவர்களுக்கு உதவுவதற்காகப் பின்னால் சென்றேன்.
அந்த சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நான் பின்னால் சென்றபோது, அந்தப் பையன்களில் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்தான். நான் நெடுஞ்சாலையில் சென்றேன். அங்கே பீர் பாட்டில்களும் சாராய பாட்டில்களும், சாலையில் சிதறிக் கிடந்தன. இந்தக் காரானது என் இடது பக்கத்திலுள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து கிடப்பதை நான் கண்டேன். நான் சாலையிலிருந்து விலகி, என்னுடைய முகப்பு விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது, அது அது என்னுடைய தகப்பனாராக இருந்தது. நான் காண முடிந்ததெல்லாம் அவருடைய தலை வெளியே தள்ளி நீட்டிக் கொண்டிருந்தது. நான் நினைத்ததை அப்படியே உங்களிடம் கூறுகிறேன். அவர் போய் விட்டதாக (மரித்து விட்டதாக) நான் எண்ணினேன். நான் என்னுடைய மனைவியிடம், ‘அவர் மரித்து விட்டார்’ என்று கூறினேன். எனவே அவள் காரிலிருந்து வெளியே குதித்து அங்கே ஓடினாள். சரக்கு இரயில் அதன் மீது மோதியதைப் போன்று அந்த கார் காணப்பட்டது. அப்படிப்பட்ட சின்னாபின்னமாக்கப்பட்ட நிலை.
விபத்து நடந்த சகோ. பிரான்ஹாமின் கார்
நான் காரிலிருந்த ஜோசப்பிடமும் என் மகனாகிய பாலிடமும் திரும்பிச் சென்று, கார் கதவுகளைப் பூட்டி விட்டு, அங்கேயே உட்காரும்படி அவர்களிடம் கூறினேன்.
தகப்பனாரும் நானும் அனேக மைல்கள் ஒன்றாகப் பிரயாணம் செய்துள்ளோம். நாங்கள் அனேக காரியங்கûüயும், அனேக விபத்துகûüயும், அனேக ஜனங்கள் மரிப்பதையும் கண்டிருக்கிறோம். அனேக ஜனங்கள் சாலையில் ஒரு கண நேரத்தில் மரித்துப் போவதை நான் கண்டிருக்கிறேன். நான் முன்னர் கண்டிருந்த ஒரு காட்சியாக அது இருந்தது. எனவே என்னுடைய உள்மனதில் அவர் மரித்து விட்டார் என்று எண்ணினேன், ஏனெனில் அவருடைய கண்கள் திறந்திருந்தன, அவருடைய முகம் வீங்கிப் போய் காணப்பட்டது. நம்மில் அனேகர் அறிந்துள்ளபடி அது காணப்பட்டது.
நான் காரிலிருந்து வெளியேறி அவரிடம் ஓடினேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஜோசப் அலறிச் சத்தமிடத் தொடங்கினான். அவன் அவ்வாறு செய்தபோது, அவருடைய தலை விழுந்தது. நான் என்னுடைய கரத்தால் அவருடைய தலையை மேலே உயர்த்தினேன். அப்போது அவர், ‘அது யார்?’ என்றார். நான், ‘அப்பா, அது ஜோசப்’ என்றேன்.
நான், ‘நீர் நன்றாக இருக்கிறீரா?’ என்றேன். அவர் அப்படியே என்னை நோக்கிப் பார்த்தார். அவர் எதையும் கூறவில்லை.
அவர், 'ஐயன்மீர், இதுவா சமயம்?' என்ற ஒலி நாடாவில் அவர் பேசிய காரியங்களின் விசேஷித்த அர்த்தமாக இது எனக்கு காணப்பட்டது. இது உண்மையா என்று என்னால் கூற இயலாது, ஆனால் ஜோசப் தன்னுடைய தகப்பனுக்காக அழுதது வரை அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஜோசப் அழுத போது தகப்பனார் என்னிடம், ‘ஜோசப் சுகமாயிருக்கிறானா என்று சொல்’ என்றார்.
என்னுடைய மனைவி, தாயாரிடம் பேசிப் பார்த்து, அவர்களை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் உரக்க கத்தி, ‘பில்லி, உம்முடைய தாயார் மரித்து விட்டார்’ என்றாள்.
நான் அங்கு ஓடிச்சென்றேன், கடைசியாக ஹீட்டர் இருக்கும் இடத்திற்கு கீழே அடியில் அவர்களை கண்டுபிடித்தேன். நான் என்னுடைய கரத்தை அவர்கள் மீது வைத்தேன். நான் அவர்களுடைய கரத்தைப் பிடித்துப் பார்த்தேன். நாடித்துடிப்பை என்னால் உணர முடியவில்லை.
பின் இருக்கையை நான் பார்த்தேன். அங்கே என்னுடைய சகோதரி சாரா வேதனையால் முனகிக் கொண்டே கிடந்தாள். அப்படியே என் தகப்பனாரிடம் திரும்பிச் சென்றேன். அவரால் அசையவே முடியாத நிலையில் அவர் காருக்குள் இருந்தார். அவருடைய இடது தோள் கார் கதவுக்குள் இருந்தது. அந்த உலோகமானது அதன் மீது அப்படியே இறுக்கி நெருக்கிக்கொண்டிருந்தது. அவருடைய இடது காலானது காரை திருப்ப உதவும் சக்கரத்தை சுற்றிலும் மாட்டியிருந்தது. அவருடைய சரீரத்தின் பெரும்பாலான பகுதிகள், அவருடைய தலையும் தோளும் முன்பக்க காற்றுத்தடுப்பு கண்ணாடியின் வழியாக துரித்துக்கொண்டு, வண்டியின் முன்பக்க மடிப்பு முகடில் விழுந்து கிடந்தது.
நான் ஒரு சிறு காரியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். டூசானைச் சேர்ந்த எங்கள் நண்பரான ஜீன் நார்மனும், டான் வீட்ஸ்-ம், நானும் சகோதரன் பிரிவருடன் (அவர் இங்கே இருக்கிறாரா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை) ஒரு சில வாரங்களுக்கு முன் வேட்டையாடுவதற்காகச் சென்றோம், நாங்கள் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது நான் வியாதிப்பட்டேன். நான் ஒரு வகையான மனக்கலக்கமான நிலையில்- மனச்சோர்வான நிலையில் இருந்தேன் என்று என்னால் கூற முடியும். எனக்குத் தெரியவில்லை – நான் மலையின் மேல் ஏறிச் சென்றேன். அது இரவு நேரம். நான் இரவில் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தேன். மனச்சோர்வான ஒரு நிலை என்று யூசிக்கிறேன். நான் திரும்ப கீழே இறங்கி வந்தேன். தகப்பனார் தொப்பியை கழற்றி தம்முடைய தலையைத் தாழ்த்தியவாறு நெருப்பினருகில் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். ஒரு சில நிமிடங்களில் அதெல்லாம் போய்விட்டது.
அவர் நெருப்பைச் சுற்றி நின்றுகொண்டிருந்த போது, அவரால் தம்முடைய இரவு ஆகாரத்தை உண்ண முடியவில்லை. ‘கொஞ்சம் சூப் பானமோ அல்லது ஏதோவொன்று நான் தயார் செய்யட்டுமா?’ என்று அவரிடம் கேட்டேன்.
அவர், ‘வேண்டாம்’ என்று கூறி விட்டு, அவர் எழும்பி சாலையில் நடக்கத் தொடங்கினார். அவர் திரும்பி வந்தபோது அந்த கண்களில் கண்ணீர் இருப்பதை என்னால் காண முடிந்தது. நான் சகோதரர்களிடம், அவர், ‘எதனூடாக போய்க்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியவில்லை!’ என்று கூறினேன்.
அவர் நெருப்பினருகில் திரும்பி வந்த போது, நான் அவரிடம் நடந்து சென்றேன். அதற்குப் பிறகு சகோதரர்கள் பார்த்துக்கொண்டிருந்தனரா என்பதை நான் சிந்திக்கவில்லை. (அவர்கள் அங்கிருந்தனரா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை)
நான் தகப்பனாரிடம், ‘நீங்கள் சுகமாயிருப்பதாக உணருகிறீர்களா?’ என்று கேட்டேன். அவர், ‘அது சரியாகி விட்டது’ என்று கூறினார்.
அன்றிரவு நாங்கள் படுக்கைக்கு செல்வதற்கு சிறிது முன்னால், இதற்கு முன்பு அவர் சொன்னதாக நான் கேட்டிராத ஏதோவொன்றை அவர் கூறினார். என்னால் அதை நினைவுகூர முடிகிறது. டூசானைச் சேர்ந்த எங்களுடைய நண்பரான சகோதரன் நார்மனிடம் அவர் இவ்வாறு பேசினார்:
‘நீங்களெல்லாரும் சிறிது நேரத்திற்கு முன்னால், பில்லி மலையின் மேல் ஏறிச் சென்றதைக் கண்டீர்களா?’
அவர்களெல்லாரும், ‘ஆம்’ என்றனர்.
அவர், ‘நீங்கள் பாருங்கள், இதன் காரணமாகத் தான் பில்லி எப்பொழுதும் என்னுடன் இருக்க விரும்புகிறான். நான் அவனுக்காக ஜெபித்தால், அதெல்லாம் சரியாகி விடும் என்பதை அவன் அறிவான்’ என்று கூறினார்.
அவர், ‘சகோதரன் நார்மன், ஒரு சில வாரங்களுக்கு முன்னால் நாம் வேட்டையாடிக்கொண்டிருந்த போது, நீங்கள் அந்த கம்பி வேலிரியில் விழுந்த போது, உங்கள் கணுக்கால், துண்டு துண்டாக கிழிக்கப்பட்டதை ஞாபகம் கொண்டுள்ளீர்களா? அனேக அனேக நாட்களாக உங்களால் நடக்க முடியாது என்று எண்ணினீர், நான் உங்கள் மீது என் கரத்தை வைத்து உங்களுக்காக ஜெபித்தேன், இரண்டு நாட்களில் நீங்கள் வேலைக்குத் திரும்பினீர்’ என்றார். சகோதரன் நார்மன் அது உண்மையென்று ஒப்புக்கொண்டார்.
அவர் (சகோ.பிரான்ஹாம்), ‘சில மாதங்களுக்கு முன் நான் வேட்டையாடிக்கொண்டிருந்தேன், என்னுடைய கணுக்காலிரில் ஒரு சிறிய சுளுக்கு ஏற்பட்டது’ என்றார்.
அப்போது அவர் தன்னுடைய காலணியை அவிழ்க்கத் தொடங்கினார், அவர், ‘இதோ பாரும்’ என்றார். அது இன்னும் கறுப்பாகவும், நீல நிறத்திலும் காணப்பட்டது.
அவர், ‘பில்ரிலி அதை செய்ய முடியும் என்று எண்ணாமல் அவன் மிகவும் சோர்ந்து போனான்’ என்றார்.
அவர், ‘நீ இப்பொழுது சுகமாய் இருக்கிறாய், இல்லையா, பால்’ என்றார்.
நான், ‘ஆம்’ என்றேன்.
அவர், ‘அது அப்படியே சிறு தொடுதல். நான் என்னுடைய இந்த கணுக்காலுக்காக ஜெபித்திருந்தேன், அது இன்னும் அப்படியே இருந்தது. நான் என்னுடைய இந்த மனக்கலக்கமான சோர்வு நிலைக்காக ஜெபித்தேன். அது இன்னும் அப்படியே இருக்கிறது. அது எனக்காக அல்ல, அது உனக்காக அனுப்பப்பட்டது’ என்றார்.
நான் அப்போது அதை புரிந்து கொள்ளவில்லை. அப்போது எனக்கான வார்த்தைகளாக அது இருந்தது. ஆனால் விபத்து நடந்த அன்றிரவில், அவர் என்னைப் பார்த்து, ‘நீ என்னை காரைவிட்டு வெளியே கொண்டு வரக் கூடுமா?’ என்று கேட்டார்.
நல்லது, நான் முயற்சித்தேன், நான் உண்மையாகவே முயற்சித்தேன். நான், ‘இல்லை அப்பா, என்னால் முடியவில்லை’ என்றேன்.
நான், ‘அப்பா, என்னைப் பாருங்கள்’ என்றேன். அவர் தம்முடைய கண்களைத் திறந்தார். நான், ‘நீர் அந்த வார்த்தையைப் பேசும், நீர் அங்கிருந்து வெளியே வந்துவிடுவீர்’ என்றேன். நான் அவருடைய தலையை இதைப்போன்று என் கையால் பிடித்திருந்தேன். அவர் தம்முடைய தலையை வலப்புறமாக திருப்பினார், ஒரு வார்த்தையும் பேசவில்லை, ஆனால் அப்படியே இதைப்போன்று தம்முடைய தலையை என்னிடமிருந்து திருப்பினார். அது அவருக்காக அல்ல, அது நமக்காக என்று அவர் சொன்னதின் கருத்தை அப்போது நான் அறிந்துகொண்டேன்.
நான் இதை உங்களுக்கு அழுத்தமாக கூற வேண்டும், அதற்குப் பிறகு காயமடைந்தவர்களை ஏற்றிச்செல்லும் நோயாளி விரைவு ஊர்தி வந்து சேருவதற்கு முன்னால் நான் சென்று தாயாரைப் பார்த்தேன், நான் திரும்பவும் அவரிடம் வந்து, ‘அப்பா, நீர் மோசமாக காயப்பட்டுள்ளீர் என்பதை நான் அறிந்திருக்கிறேன், ஆனால் தாயார் மரித்து விட்டார் என்று நான் நினைக்கிறேன்’ என்றேன்.
நான், ‘சாரா நன்றாக இருக்கிறாள், ஆனால் தாயார் மரித்து விட்டார் என்று நான் எண்ணுகிறேன்’ என்றேன். நான் அதை மறக்கவே மாட்டேன்.
அவர், ‘அவள் எங்கே?’ என்று கேட்டார்.
நான், ‘அவர்கள் உம்முடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்கள்’ என்றேன். எனவே எப்படியோ, அது எப்படியென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் தம்முடைய வலக்கரத்தை அசைத்து தாயார் மீது வைத்தார், என் அறிவிற்கு எட்டின வரை அவர் இவ்வாறு கூறினார். "கர்த்தாவே, இந்த வேளையில் எங்களோடிருக்கும் தாயார் மரித்துப் போக விடாதேயும்.’
நான் திரும்பி தாயாரிடம் சென்ற போது, அவர்கள் வேதனையால் முனகிக்கொண்டே அசைகிறதைக் கண்டேன். நான், ‘நான் தாயாரை அசைக்கட்டுமா?’ என்று அவரிடம் கேட்டேன்.
அவர், ‘வேண்டாம், அவளை அப்படியே விட்டுவிடு’ என்றார். நான் சாராவைக் குறித்து அவரிடம் கேட்டேன். அவர், ‘அவளையும் விட்டு விடு’ என்றார்.
ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சாராவையும் அம்மாவையும் கொண்டு சென்றது. ஆனால் தகப்பனாரை காரைவிட்டு வெளியே எடுக்க முடியவில்லை. ஆம்புலன்ஸ் வாகனம் திரும்பி வந்த பிறகும், நாங்கள் தகப்பனாரை வெளியே கொண்டு வர முடியவில்லை. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஆறு மைல்கள் இரண்டு திசைகளிலும் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. கடைசியாக ஒரு நான்கு சக்கர பாரம் ஏற்றிச்செல்லும் வண்டியுடன் ஒரு மனிதன் வந்தார். அவர் தன்னுடைய வண்டியில் மரத்தை வெட்ட உதவும் ஒரு சங்கிரியை வைத்திருந்தார். அவர்கள் அதை கார் கதவைச் சுற்றிலும் கட்டி அதை இழுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அவர்கள் அதை முன்பக்க கண்ணாடியில் சுற்றி இழுத்துக் கட்டி இழுக்க முடியுமா என்று நான் அவர்களிடம் கேட்டேன். ‘நீங்கள் அப்படி செய்வீர்களானால் நான் அங்கே உள்ளே சென்று அவரை வெளியே கொண்டு வந்து விடுவேன்’ என்று அவர்களிடம் கூறினேன். அவர்களும் அப்படியே செய்தனர். அவர்கள் அவ்வாறு இழுத்துக் கொண்டிருந்த போது நான் காரினுள்ளே மெல்ல தவழ்ந்து தகப்பனாரின் வலது தோள்பக்கத்தினூடாக முன்பக்க இருக்கைக்கு கீழே சென்று அவருடைய காலை இழுத்தெடுக்க முடிந்தது.
அவர் என்னிடம், ‘பால், என்னைப் பிடித்துக்கொள்’ என்று கூறினார். அவர் என்னுடைய கையின் மேல் விழுந்தார். நான் அவரை காரை விட்டு இழுத்து வெளியே எடுத்தேன்.
நாங்கள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். நாங்கள் அங்கு சென்றடைந்த போது, அவர்கள் மற்றவர்களையும் அங்கு கொண்டு வந்திருந்தனர். அவரை இடித்த அந்தப் பையன் மரித்துப்போயிருந்தான். தாயாரும் சாராவும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன்பிறகு தகப்பனாரையும் அவசர சிகிச்சை அறைக்குள் கொண்டு சென்றனர். அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மருத்துவர் என்னிடம், ‘அது உங்கள் தகப்பனா?’ என்று கேட்டார்.
நான், ‘ஆம், ஐயா’ என்றேன்.
அவர், ‘நல்லது, அவர் பிழைக்க அதிக வாய்ப்பில்லை மகனே’ என்றார்.
நான், ‘சரி ஐயா’ என்றேன்.
உதவிக்காக அழைக்க வேண்டுமா அல்லது என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. எனவே நான் அங்கேயே உட்கார்ந்து ஜெபிக்க முயற்சித்தேன். அவர் எனக்கு போதித்ததை பற்றிக்கொண்டிருந்தேன்.
அவர்கள் நிழற்படம் எடுப்பதற்காக அவரைக் கொண்டு சென்றனர். அவர், ‘நாங்கள் அவரை அமரில்லோவுக்கு கொண்டு செல்லப் போகிறோம். ஏனெனில் அவருக்கு சிறப்பு சிகிட்சை தேவைப்படுகிறது. அவர்களெல்லாரும் அங்கு போக வேண்டியது தான், ஆனால் உன்னுடைய தகப்பன் முதலாவது போக வேண்டும், ஏனெனில் அவர் பிழைக்க அதிக வாய்ப்பில்லை’ என்றார்.
நான் வெளியே வந்தபோது மருத்துவர் என்னிடம், ‘நீங்கள் எந்த வகையான இரத்தத்தைக் கொண்டுள்ளீர்கள்?’ என்று கேட்டார்.
நான், ‘எனக்குத் தெரியாது, ஐயா’ என்றேன்.
அவர், ‘நாம் அவருக்கு உடனடியாக இரத்தத்தை செலுத்தியாக வேண்டும். அவர் மிகவும் பெலவீனமாக உள்ளார்’ என்றார்.
நான், ‘நல்லது, நாம் போய் இரத்த வகையை பரிசோதிக்கலாம்’ என்றார்.
என்னுடைய இரத்த வகை அவருக்கு ஒத்துப்போகவில்லை. அவர்கள் இரத்த வங்கியில் சென்று பார்த்தார்கள், அவர்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. எனவே அவர்கள் அமரில்லோவுக்கு அனுப்பி அங்கிருந்து இரத்தத்தை கொண்டு வரும்படி கூறினர். அங்கிருந்து கொண்டு வரப்பட்டது மூன்று பைண்டுகள் அளவு இரத்தம் என்று நினைக்கிறேன். உள்ளாட்சி பகுதியின் சட்ட அதிகாரியை அவர்கள் அணுகினர், ஏனெனில் அவருடைய இரத்தம், தகப்பனாரின் அதே இரத்த வகையாகும். அவர்கள் அவருக்கு இரத்தம் அடைத்தனர்.
அதன்பிறகு அவர்கள் என்னிடம், ‘அவர் எவ்வாறு ஜீவனோடிருக்கிறார் என்றே தெரியவில்லை’ என்றனர். அந்த மருத்துவரின் பெயர் மறந்து விட்டது, ஆனால் அவர் என்னிடம், ‘நான் அவருக்கு முதல் சொட்டு இரத்தம் கொடுக்க வந்தபோது, அவருடைய இரத்த அழுத்தம் பூஜ்ஜியமாக இருந்தது, இப்பொழுது அவருடைய இரத்த அழுத்தம் ஏறி விட்டது’ என்று கூறினார். நான் அவர்களுடன் அமரில்லோவுக்கு ஆம்புலன்ஸில் போக முடியுமா என்று என்னிடம் அவர் கேட்டார்.
நான், ‘நிச்சயமாக’ என்றேன்.
இப்படியாக ஒரு செவிரிலியும் நானும் அவரை அமரில்லோவுக்குக் கொண்டு சென்றோம், அது பிரியோனா, டெக்ஸôஸிரிருந்து எண்பது அல்லது தொண்ணூறு மைல்கள் தூரத்தில் இருந்தது. நாங்கள் அன்று காலை சுமார் ஆறு மணியளவில் கிளம்பி, சுமார் ஏழரை மணிக்கு அங்கு சென்றடைந்தோம். மருத்துவர் எங்களை சந்திக்கும்படி அங்கு வந்தார். அவர் தகப்பனாரை பரிசோதித்தார். தகப்பனார் இன்னும் சுயநினைவற்ற நிலையிலேயே இருந்தார். மருத்துவர் அவருடைய நிழற்படத்தையும் மற்றவைகளையும் பரிசோதித்த பின் அவர் என்னிடம், ‘இது உங்கள் தகப்பனா?’ என்றார்.
நான், ‘ஆம் ஐயா’ என்றேன்.
அவர், ‘நீங்கள் அவருக்காக ஜெபித்துக்கொண்டிருந்ததை நான் கண்டேன்’ என்றார்.
நான், ‘ஆம் ஐயா’ என்றேன்.
அவர், ‘நான் இதை உங்களிடம் சொல்ல வெறுக்கிறேன், நீங்கள் உங்கள் தகப்பனார் மரிக்க வேண்டும் என்று ஜெபியுங்கள்’ என்றார்.
நான், ‘இல்லை ஐயா. என்னால் அதைச் செய்ய முடியாது, ஐயா’ என்றேன்.
அவர், ‘இப்படிப்பட்ட படுகாயங்களுடன் ஒரு மனிதனால் பிழைக்க முடியாது’ என்றார்.
நான், ‘அவரால் பிழைக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன்’ என்றேன்.
அவர் மருத்துவமனையில் ஆறு நாட்கள் ஜீவனோடு இருந்தார். அவர் சுயநினைவோடு இருந்தாரா சுயநினைவற்ற நிலையில் இருந்தாரா என்பதை என்னால் கூற இயலாது, ஏனெனில் அவர் என்னிடமும், அவரைக் காணவந்திருந்த சகோதரர்களிடமும் அசைவைக் காணமுடிந்தது. நாங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தோம். தேவ மனுஷர்களும் ஜெபித்தனர். ‘தேவனுக்கு வெளியே எந்த நம்பிக்கையும் கிடையாது’ என்று தகப்பனார் கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மையான காரியம்!
நான்காவது நாள் அவர்கள், ‘நாங்கள் அவருக்கு ஒரு பரிசோதனையை செய்யப் போகிறோம். நீங்கள் அவரை கவனித்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்று நான் ஊகிக்கிறேன். நாங்கள் கடந்த நாற்பத்தெட்டு மணி நேரமாக அவரை கவனித்தோம். அவருடைய இடது கண் செயலிழந்து கொண்டிருக்கிறது’ என்றார். மருத்துவர்கள் அவ்வாறு கூறினர் (அது அவ்வாறு தானா என்பது எனக்குத் தெரியாது) அவர் ஒரு இரத்த உறைதலையோ அல்லது மூளை இரத்தக் குழாய் வெடிப்பையோ கொண்டிருக்கலாம்.
அவர், ‘அவர் இன்றிரவு மரித்து விடுவார் என்று நான் நம்புகிறேன். நாங்கள் ஒரு பரிசோதனையை செய்யப் போகிறோம்’ என்றார். அவர்கள் இப்பொழுது அதை என்னவென்று அழைக்கின்றனர் என்பதை மறந்து விட்டேன். அவர்கள் சாயம் போன்ற ஒன்றை இருதயத்தின் பிரதான குருதிகுழாயில் செலுத்தி, அது அங்கிருந்து எங்கு செல்கிறது என்பதை கவனிக்கின்றனர். அது மூளைக்கு எப்படி செல்கிறது என்பதை கவனிக்கின்றனர். அவர், ‘அது மூளையில் இரத்த உறைதலாக இருந்தால், நாம் அங்கு சென்று அதை வெளியே எடுக்க வேண்டியதாக இருக்கும்’ என்று கூறினார்.
அவர்கள் அவரை மேலே கொண்டு சென்று, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, திரும்ப கொண்டு வந்தனர். அவர்கள் எங்களை அறைக்குள் வரும்படி அழைத்தனர். அவர், ‘எந்த இரத்த உறைதலையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை’ என்றார். நான் தவறாக இருக்கலாம், ஆனால் என்னுடைய அறிவுக்கு எட்டினவரை, அவர், ‘இரத்தமானது கழுத்து அல்லது தொண்டையின் இரத்த நாளம் வழியாக போகவில்லை’ என்றார்.
அவர், ‘உங்கள் தகப்பனாரின் மூளை வீங்கிப்போயுள்ளது. மூளையானது மண்டையோட்டைத் தொடும்போது, அவ்வளவுதான்’ என்றார். மேலும் அவர், ‘அந்த வீக்கத்தைக் குறைக்க கொஞ்சம் மருந்து கொடுக்கிறேன். சில சமயம் அது வேலை செய்யும், சிலநேரம் அது வேலை செய்யாமல் இருக்கலாம். அவைகள் வேலை செய்யுமானால், அவர் இன்னும் இரண்டு நாட்கள் கூட உயிர் பிழைத்திருப்பார் என்று நான் எதிர்ப்பார்க்கிறேன்’ என்றார்.
அவர் மரிப்பதற்கு முந்தின இரவு, நாங்கள் அவசர சிகிட்சைப் பிரிவின் காத்திருக்கும் அறையில் பாடிக்கொண்டிருந்தோம். நாங்களனைவரும் வெளியே உட்கார்ந்து, பாடிக்கொண்டும், ஜெபித்துக்கொண்டும் இருந்தோம். அது மிகவும் இருளாக இருந்தது. என் அறிவிற்கு எட்டின வரை நாங்கள், ‘சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்’ என்று பாடிக்கொண்டிருந்தோம், ஏனெனில் தகப்பனார் அந்த பாடலை மிக அதிகமாக நேசித்தார் என்பதை நாம் அறிவோம்.
நாங்கள் பாடிக்கொண்டிருந்த போது, சூரியன் மேகங்களால் மறைக்கப்பட்டு, சூரியனானது கூட்டங்களில் அனேக தடவைகள் நாம் கண்டிருக்கிற இந்த அக்கினி ஸ்தம்பத்தைப் போன்று தோற்றமளித்தது. நான் அப்போது காலம் முடிந்து விட்டது என்பதை அறிந்தேன்.
டிசம்பர் இருபத்தி நாலாந் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகை நேரம், நான் கீழ்த்தளத்தில் இருந்தேன். சகோதரன் பியரி கிரீன் வந்து, ‘டாக்டர் ஹைட் உங்களை காண விரும்புகிறார்’ என்றார். ஏனெனில் அவர் தான் தகப்பனாரின் பிரதான மருத்துவர். அவர் எலும்பிற்கான சிறப்பு மருத்துவர். எனவே நான் மேலே சென்றேன், அவர், ‘திரு. பிரான்ஹாம்’ என்றார். நான், ‘ஆம் ஐயா’ என்றேன்.
அவர், ‘நான் உங்களிடம் கூற துக்க செய்தியை வைத்திருக்கிறேன். உங்கள் தகப்பனார் 5:49 மணிக்கு கடந்து சென்று விட்டார்’ என்றார்.
நல்லது, நீங்கள் அப்படியே... நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நான் வெளியே வந்து, அங்கு நின்று கொண்டிருந்த சகோதரர்களிடம் அவைகளைக் கூறினேன். நான், ‘ஒரு காரியத்தை நான் ஞாபகப்படுத்துகிறேன், அவர், 'நான் போய் விட்டதாக நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் ஒரு நிமிடம் நின்று உங்கள் தொப்பியை கழற்றி, நம்பிடுவாய் பாடலின் ஒரு கோரûஸ பாடுங்கள்' என்று கூறியிருக்கிறார்’ என்றேன். நாங்கள் அவ்வாறே செய்தோம்.
சகோதரன் பியரி கிரீன் தாம் தகப்பனாரின் சரீரத்தை ஜெபர்ஸன்வில்லுக்கு கொண்டு சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்றார். நான் தாயாரிடமும் சாராவிடமும் சொல்ல வேண்டியதாயிருந்தது, அவர்கள் இன்னும் மருத்துவமனையிலேயே இருந்தனர். நான் அவர்களுடைய காயங்களைக் குறித்து உங்களிடம் கூறவில்லை. தாயாரின் இடது கால் உடைந்து தலை காயப்பட்டிருந்தது, என் சகோதரி சாராவின் முதுகில் அனேக இடங்கள் உடைக்கப்பட்டிருந்தது.
நான் அவர்களிடம் கூறின போது, அவர்கள், ‘நாம் இந்தியானாவுக்குத் திரும்பிச் செல்லலாம்’ என்றனர். அவர்கள் போக விரும்புவதாக நான் மருத்துவரிடம் தெரிவித்தேன். எனவே நாங்கள் செல்ல ஆயத்தப்பட்டோம். போக வேண்டுமென்றால் நோயாளிகளை கொண்டு செல்லும் விமானத்தை அயத்தப்படுத்துவது தான் ஒரே வழி என்று மருத்துவர் தெரிவித்தார். இங்கிருக்கும் சகோதரன் மோஸ்லிரியும் சகோதரர்களும் எங்களுடன் இருந்தனர். அவர்களுக்கு அந்த விமானம் கிடைத்தது. நாங்கள் அவர்களை ஜெபர்ஸன்வில்ரிலிற்கு திரும்பிக்கொண்டு செல்ல இரண்டு விமானங்களை ஒப்பந்தம் மூலம் வாடகைக்கு எடுத்தோம். நாங்கள் சென்றடைந்த போது, அவர்களை மருத்துவமனையில் வைத்திருந்தனர். நாங்கள் சவ அறைக்குச் சென்றோம்.
நான் அந்த சரீரத்தை நோக்கிப் பார்த்த போது, அது என் தகப்பனாரைப் போல் தோற்றமளிக்கவில்லை. அப்போது நான், ‘அவர் அங்கே இல்லை’ என்று எண்ணினேன். நான் அவ்வாறு எண்ணுவதற்கு சில காரியங்கள் இருந்ததை நான் அறிவேன். நாங்கள் ஒரு புதன் கிழமையில் அடக்கத்தை கொண்டிருந்தோம். அனேக அனேக ஜனங்கள் வந்திருந்தனர். வரமுடியாதவர்கள் தங்களுடைய வருத்தத்தையும் அன்பையும் அனுப்பினர். நாங்கள் அதை மிகவும் மெச்சுகிறோம்.
அது கேட்கப்பட்டதென்று நான் அறிவேன், எனவே நான் உங்களுக்கு சொல்ரிலித்தான் ஆகவேண்டும். நாங்கள் முதலில் எங்கள் தகப்பனாரை அடக்கம் செய்யவில்லை. நான், ‘கர்த்தாவே, இந்த அடக்க ஆராதனையினூடாக நான் செல்ல நீர் அனுமதித்தால் நான் செய்ய கூடியது அவ்வளவுதான். அவரை கல்லறையில் வைக்க நான் முடிவெடுக்க முடியாது. தாயார் தான் முடிவெடுக்க வேண்டியதாயுள்ளது’ என்றேன். நான் தாயாரிடம் சென்றேன், அவர்கள், ‘தகப்பனார் நமக்காக ஒரு வீட்டைக் கட்டியிருக்கும் டூசானில் வாழ எனக்கு விருப்பமா என்பது தெரியவில்லை. எங்கே அவரை வைக்க வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் எங்கே இருப்பேனோ அங்கேயே அவரை வைக்க வேண்டும்’ என்றார்கள்.
நான் பிரேத விசாரணை நடத்துபவரிடம் கேட்டேன் (அவர் என்னுடைய மிக நல்ல நண்பர்), என்ன செய்ய வேண்டுமென்று தாயார் தீர்மானிக்கும் வரை தகப்பனாரை அடக்கம் பண்ணாமல் அங்கேயே வைத்திருக்கவோ அல்லது சவ அறையிலோ, ஏதோவொன்றிலோ வைத்திருக்க எனக்கு அனுமதி கிடைக்குமா என்று விசாரித்தேன்.
அவர், ‘நான் அம்மனிதரை மிகவும் நேசிக்கிறேன். நான் அவரை அடக்கம் பண்ணுவதற்கு முன் சவத்தை வைக்கும் இடத்திலேயே வைத்திருப்பேன். நீங்கள் தீர்மானம் பண்ணும் போது அடக்க ஆராதனையைக் கொண்டிருக்கலாம்’ என்றார்.
சகோ. பிரான்ஹாமின் அடக்க ஆராதனை நடந்த அதே நாளில் மாலை 4:30 மணிக்கு ஓஹியோவை சேர்ந்த சகோ. லீ மில்லர் அவர்களால் ùஐபர்ஸன்வில், இண்டியானா, அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம்
என் தாயார் இப்பொழுது ஜெபர்ஸன்வில்லில் மேய்ப்பர் தங்குமிடத்தில் இருக்கிறார்கள். என் சகோதரி இன்னும் மருத்துவமனையிலேயே இருக்கிறாள். அவளால் நடக்க முடிகிறது, ஆனால் உட்கார முடியவில்லை. அவள் உட்கார ஆரம்பித்தவுடன் டூசானிலுள்ள வீட்டிற்கோ அல்லது கர்த்தர் எங்கு நடத்துகிறாரோ அங்கு அவரைக் கொண்டு போக போகிறோம்.
சகோ. பிரான்ஹாமின் கல்லறை
(சகோ.பில்லி பால் ஒரு செய்யுûü வாசிக்கிறார்)
நான் இதற்கு “என் தகப்பன்” என்ற தலைப்பைக் கொடுக்க விரும்புகிறேன்.
நான் தனிமையாயிருக்கிறேன். மிகவும் தனிமையாயிருக்கிறேன்.
என் தகப்பன் என்றழைக்கப்பட்ட மனிதருக்காக.
நான் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே மகத்தான சினேகிதரை இழந்தபோது, உலகமெல்லாம் முடிந்து விட்டது போல் தோன்றியது.
நான் ஏன் துக்கமாயிருக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால் அவர் “என் தகப்பன்” என்பதை தயவு செய்து நினைவுகூருங்கள்.
இந்த மகத்தான ஞாபகார்த்த நாளில் என் தகப்பனார் இங்கே என்னோடில்லை.
அவர் நேரான குறுகலான பாதையைத் தெரிந்து கொண்டார்.
அவர் ஐசுவரியத்தையோ புகழையோ விரும்பவில்லை.
ஆனால் இயேசுவின் நாமத்திற்கே எங்களை சுட்டிக்காட்டினார்.
அவர் பேச்சில் பெரிய மனிதராக இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் அவர் பிரசங்கிப்பதை நீங்கள் எப்பொழுதாவது கேட்டால்,
அவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் என்பதை அறியலாம்.
அவர் சாந்தகுணமுடையவர், அவர் யாரையும் புண்படுத்த விரும்புவதில்லை.,
ஆனால் அவர் பாவத்திற்கு விரோதமாக உரத்த சத்தமிட்டார்.
அவர் “ஐயன்மீர் இதுவா சமயம்?” என்ற மகத்தான செய்தியைப் பிரசங்கித்தார்.
பிறகு தேவனுடைய பதிலைக் காண அவர்
டூசானுக்கு எங்களை கொண்டு சென்றார்.
மேற்குக்கு செல்ல ஏன் தேவன் அவரிடம் சொன்னாரென நான் வியந்தேன்.
ஆனால் நான் எதையுமே கூறவில்லை,
ஏனெனில் அவர் எப்பொழுதும் என்னிடம், ‘பால், தேவன் மேலானதையே அறிவார்’ என்பார்.
ஏழு முத்திரைகளின் இரகசியத்தை தேவன் வெளிப்படுத்தினார்.
அவர் மல்கியா 4:5-ல் உரைக்கப்பட்ட தூதன்.
தேவன் என் தகப்பனை பரலோகத்திற்கு அழைத்த காரியத்திலும்
தேவன் மேலான நோக்கம் கொண்டிருக்கிறார்.
அவர் வார்த்தைக்கு நேராக எங்களை வழி நடத்தினார்.
நான் இந்த தீர்க்கதரிசியை விசுவாசிக்கிறேன்.
இந்த செய்தியை நான் விசுவாசிக்கிறேன்.
தேவனுடைய கிருபையால் என்றாவது ஒரு நாளில் அவரை சந்திப்பேன்.
என் தகப்பன் என்றழைக்கப்பட்ட மனிதருக்காக.
நான் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே மகத்தான சினேகிதரை இழந்தபோது, உலகமெல்லாம் முடிந்து விட்டது போல் தோன்றியது.
நான் ஏன் துக்கமாயிருக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால் அவர் “என் தகப்பன்” என்பதை தயவு செய்து நினைவுகூருங்கள்.
இந்த மகத்தான ஞாபகார்த்த நாளில் என் தகப்பனார் இங்கே என்னோடில்லை.
அவர் நேரான குறுகலான பாதையைத் தெரிந்து கொண்டார்.
அவர் ஐசுவரியத்தையோ புகழையோ விரும்பவில்லை.
ஆனால் இயேசுவின் நாமத்திற்கே எங்களை சுட்டிக்காட்டினார்.
அவர் பேச்சில் பெரிய மனிதராக இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் அவர் பிரசங்கிப்பதை நீங்கள் எப்பொழுதாவது கேட்டால்,
அவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் என்பதை அறியலாம்.
அவர் சாந்தகுணமுடையவர், அவர் யாரையும் புண்படுத்த விரும்புவதில்லை.,
ஆனால் அவர் பாவத்திற்கு விரோதமாக உரத்த சத்தமிட்டார்.
அவர் “ஐயன்மீர் இதுவா சமயம்?” என்ற மகத்தான செய்தியைப் பிரசங்கித்தார்.
பிறகு தேவனுடைய பதிலைக் காண அவர்
டூசானுக்கு எங்களை கொண்டு சென்றார்.
மேற்குக்கு செல்ல ஏன் தேவன் அவரிடம் சொன்னாரென நான் வியந்தேன்.
ஆனால் நான் எதையுமே கூறவில்லை,
ஏனெனில் அவர் எப்பொழுதும் என்னிடம், ‘பால், தேவன் மேலானதையே அறிவார்’ என்பார்.
ஏழு முத்திரைகளின் இரகசியத்தை தேவன் வெளிப்படுத்தினார்.
அவர் மல்கியா 4:5-ல் உரைக்கப்பட்ட தூதன்.
தேவன் என் தகப்பனை பரலோகத்திற்கு அழைத்த காரியத்திலும்
தேவன் மேலான நோக்கம் கொண்டிருக்கிறார்.
அவர் வார்த்தைக்கு நேராக எங்களை வழி நடத்தினார்.
நான் இந்த தீர்க்கதரிசியை விசுவாசிக்கிறேன்.
இந்த செய்தியை நான் விசுவாசிக்கிறேன்.
தேவனுடைய கிருபையால் என்றாவது ஒரு நாளில் அவரை சந்திப்பேன்.
********************
No comments:
Post a Comment