Monday, 15 January 2018

விசுவாசம் என்பது சுயநினைவற்றதாகும் Faith is unconscious



101. கவனியுங்கள். நான் ஒரு காரியத்தைக் கூறப்போகிறேன். கவனியுங்கள். விசுவாசம் என்பது சுயநினைவற்றதாகும் (Faith is unconscious). (unconscious என்ற வார்த்தைக்கு ‘சுயநினைவற்றது’, ‘தன்னுணர்வற்றது’, ‘மயக்கமாக’ என்ற அர்த்தங்களும் உண்டு – மொழிபெயர்ப்பாளர்.) ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உலகத்தைச் சுற்றிலும் பிரயாணம் பண்ணி, எல்லா வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட ஜனங்களைச் சந்தித்த வருடங்களில் நான் அதைக் கற்றுக் கொண்டேன். ஆனால் விசுவாசமானது சுயநினைவற்றதாகும். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றும் அதை அறியவும் கூட இல்லை. அது உண்மை.

102. இயேசு கிறிஸ்து ஒரு புயலில் இருந்தாலும், கடும் புயல்காற்றானது அந்தப் படகில் மோதி ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரையில் தாக்கினாலும், அல்லது ஒரு கூட்டம் பிசாசுகளின் முன்னால் அவர் நின்று கொண்டிருந்தாலும் அது ஒரு காரியமில்லை; அவர் எவ்விடத்தில் தொங்கிக் கொண்டிருந்தாலும், அது அவரை ஒருபோதும் அசைக்கவேயில்லை. அவர் அதனூடாக அமைதியாக நடந்து அவரால் கூடுமானவரை அமைதியாகவே இருந்தார். ஏன்? அவர் பயத்தைக் குறித்தும், அவரைச் சுற்றியுள்ள எதையும் குறித்தும் வெறுமனே சுயநினைவற்றிருந்தார். அது உண்மை. அது சம்பவித்தாலும் சம்பவிக்காமல் போனாலும் அவர் சுயநினைவற்றவராயிருந்தார்; அது சம்பவிக்கப்போகிறது என்று அவருக்குத் தெரியும், ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறினார். அவர், ‘ஓ, நான் முற்றிலுமாக ஜெபித்து விட்டேனா என்று வியப்படைகிறேன்? நான் போதுமான நீண்டகாலம் உபவாசம் இருந்து விட்டேனா என்று வியப்படைகிறேன்? நான் இதை செய்து விட்டேனா என்று வியப்படைகிறேன்?’  என்று கூறவில்லை. அவர் வெறுமனே சுயநினைவற்று நடந்து சென்றார். அது சரியே. தேவன் சொன்னது சத்தியம் என்பதை அவர் விசுவாசித்தார். அந்த வார்த்தைகள் நிறைவேறியாக வேண்டும், அவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவருடைய ஜீவியம் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது சரியே.

103. நீங்களும் கூட அதை நிறைவேற்றுவதற்காகவே இங்கிருக்கிறீர்கள். பயத்தைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடந்து செல்லுங்கள். குற்றம் கண்டுபிடிக்கப்படுவதைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடவுங்கள். உலகத்தைக் குறித்து சுயநினைவற்றவர்களாய் நடவுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் நடப்பது போல நடவுங்கள். வலது புறமோ இடது புறமோ எந்த கவனமும் செலுத்தாமல் அப்படியே தொடர்ந்து அவரோடு நடந்து செல்லுங்கள். சபையில் ஏதோவொன்று எழும்புமானால், தேவனோடு நடவுங்கள். அல்லேலூயா. வியாதி உங்களைத் தாக்கினால், தேவனோடு நடவுங்கள். அண்டை வீட்டுக்காரனுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், தேவனோடு நடவுங்கள். அப்படியே தொடர்ந்து தேவனோடு நடந்து கொண்டேயிருங்கள்.

104. ஏனோக்கு ஒருநாள் அவ்விதமாகவே நடந்து சென்றான். அவன் என்ன செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் வீடு வரைக்கும் வழியெல்லாம் தேவனோடே நடந்து சென்றான்; இச்சமயத்திலோ அவன் மேலேயுள்ள பாதையை அடைந்தான், அவன் அதற்கு மேலும் திரும்பி வர விரும்பவில்லை. ஆமென்.

105. தேவனோடு நடவுங்கள். நீங்கள் மரிக்கப்போகிறீர்கள் என்று மருத்துவர் கூறலாம்; தேவனோடு நடவுங்கள். ஆமாம். உங்களால் முடியாது என்று மருத்துவர் கூறலாம்... நல்லது; தேவனோடு நடவுங்கள். அப்படியே தேவனோடு நடந்து செல்லுங்கள்; அவ்வளவு தான். ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருப்பேன்’ என்று தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அவர் உங்களுக்குக் கொடுத்து, உறுதிப்படுத்தியிருக்கிற அந்த உடன்படிக்கையின் மூலமாக அவர் ஆணையிட்டுள்ளார். அப்படியானால் அப்படியே தேவனோடு நடவுங்கள்.

செய்தியின் தலைப்பு: அவர் தமது பேரிலே தானே ஆணையிட்டார், 54-1212
~~~~~~~~~~~~~

Sunday, 14 January 2018

சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சகோதரி ஹோப் (பிரம்பாக்) பிரன்ஹாம்



சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சகோதரன் பிரம்பாக் (சகோதரி ஹோப்புடைய தந்தை)



சகோதரி பிரம்பாக் (சகோதரி ஹோப்புடைய தாய்)



சகோதரி ஹோப்



சகோதரன் பிரன்ஹாம் மற்றும் சகோதரி ஹோப் (தேனிலவின் போது)


சகோதரி ஹோப் (பிரம்பாக்) பிரன்ஹாம்

கீழ்வரும் படத்தில் இருப்பது சகோதரன் பிரன்ஹாமும் அவருடைய முதல் மனைவியான சகோதரி ஹோப்பும் தான், சகோதரி ஹோப் அவர்கள் பில்லி பால் மற்றும் ஷாரோன் ரோஸ் ஆகியோரின் தாய் ஆவார்கள்.


1937ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, சகோதரி ஹோப் அவர்கள் காசநோயினால் (TB) நலிந்து போனார்கள். இதன் காரணமாக அதே வருடம் ஜøலை மாதம் 22ம் தேதி, வியாழக்கிழமையன்று மரித்து, ஜøலை மாதம் 24ம் தேதி சனிக்கிழமையில் அடக்கம் பண்ணப்பட்டார்கள். அவர்களுடைய சிறிய மகள் ஷாரோன் ரோஸ் சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு காலையில் ஏதோவொரு நேரத்தில் மரித்து, திங்கட்கிழமை அடக்கம் பண்ணப்பட்டாள்.



அவர்கள் இருவரும் வால்நட் ரிட்ஜ் கல்லறை தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டார்கள். அந்த இடம் சகோதரி ஹோப்பின் பெற்றோர்களால் சகோதரன் பிரன்ஹாமுக்குக் கொடுக்கப்பட்டதாகும். ஏனெனில் ஒரு அடக்கம் பண்ணும் இடத்தை வாங்க சகோதரன் பிரன்ஹாமுக்கு பணம் இல்லாதிருந்தது. அந்தக் கல்லறையில் ‘அமீலியா எச். பிரன்ஹாம்’ (Amelia H. Branham) என்று குறிக்கப்பட்டிருந்தது, இங்கு ‘H’ என்ற எழுத்து ‘ஹோப்’பைக் (Hope) குறிக்கிறது. ஷாரோன் ரோஸிற்காக, அவர்கள் ‘மகள்’ (Daughter) என்று எழுதி வைத்தனர்.


ஷாரோன் ரோஸ் மரித்த போது, சகோதரன் பிரன்ஹாம், ‘நான் உன்னை உன் தாயின் கரங்களில் கிடத்துவேன்’ என்றார். கார்டன் லின்ட்சே எழுதிய தேவனால் அனுப்பப்பட்ட மனிதன் என்ற புத்தகத்தில், ஷாரோன் ரோஸ் சவப்பெட்டியில் (casket) தன்னுடைய தாயின் கரங்களின் மேல் கிடத்தப்பட்டாள் என்று எழுதியிருந்ததை நான் எப்போதுமே நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் சகோதரி ஹோப்பின் தாயாரான திருமதி. பிரம்பாக் அவர்களின் குடும்ப வேதாகமத்தை நான் வாசித்த போது, அதில் சகோதரி ஹோப் வியாழக்கிழமை மரித்து, சனிக்கிழமை அடக்கம் பண்ணப்பட்டார்கள் என்றும், ஷாரோன் ரோஸ் சனிக்கிழமை இரவில் ஏதோவொரு நேரத்தில் மரித்து திங்கட்கிழமை அடக்கம் பண்ணப்பட்டாள் என்றும் இருந்தது. எனவே அவர்கள் அதை எப்படி செய்தனர் என்று நான் திருமதி. பிரம்பாக் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஹோப்பின் கல்லறையை திரும்பவும் திறந்ததாகவும், குழந்தையின் சிறு சவப்பெட்டியை சரியாக சகோதரி ஹோப்பின் சவப்பெட்டியின் மேல் வைத்ததாகவும் திருமதி. பிரம்பாக் என்னிடம் கூறினார்கள். இவ்விதமாக, சகோதரன் பிரன்ஹாம் சிறு ஷாரோன் ரோûஸ அவளுடைய தாயின் கரங்களில் வைத்தார்.


வால்நட் ரிட்ஜ் கல்லறைத் தோட்டம்






~~~~~~~~~~~~~~~~~

Tuesday, 16 September 2014

சகோதரன் பிரான்ஹாமும் சகோதரி மேடா பிரான்ஹாமும்

சகோதரன் பிரான்ஹாமும் சகோதரி மேடா பிரான்ஹாமும்

சகோதரன் பிரான்ஹாமும் சகோதரி மேடா பிரான்ஹாமும் தேன் நிலவின் போது எடுக்கப்பட்ட படம்


********

சகோதரன் பிரான்ஹாமும் சகோதரி மேடா பிரான்ஹாமும். சகோதரி மேடாவுக்கு அடுத்து பில்லிபால் இருக்கிறார்




சகோதரன் பிரான்ஹாமின் ஊழியங்கள்- புகைப்படங்களுடன்

சகோதரன் பிரான்ஹாம் ஸ்பானிய சகோதர சகோதரிகளுக்கு ஊழியம் செய்கிறார்
Brother Branham ministering to the Spanish brothers and sisters







*******


சகோதரன் பிரான்ஹாம் சான் கார்லோஸ் இந்தியன் ரெசர்வேசனில் ஊழியம் செய்கிறார்
Brother Branham ministering on the San Carlos Indian Reservation





*******

பனிவெண்புறா சிறகுகள் மேல் என்னும் செய்தியை சகோ.பிரான்ஹாம் பிரசங்கிக்கிறார்
Brother Branham preaching the sermon On The Wings of a Snow-white Dove





*******

சகோ.பிரான்ஹாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறார்
Bro.Branham Praying for the sick

மேற்காணும் புகைப்படத்தில் சகோ.பிரான்ஹாம் ஜெபவரிசையில் உள்ளவர்களுக்காக ஜெபிக்கிறார். ஜனங்கள் அவருடைய வலப்பக்கத்திலிருந்து அவரிடம் வருவதை கவனியுங்கள். அவர்கள் அவரிடம் வருவதற்கு முன்பாக முதலில் கர்த்தருடைய தூதனை கடந்து தான் வரவேண்டியிருந்தது. மேலும் வியாதியஸ்தர்கள் அவருக்கு முன்பில் 
படுத்துக் கிடப்பதை கவனியுங்கள்.

********

Voice of Healing பத்திரிகையில் 1949, பிப்ரவரியில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு

*******


பிரான்ஹாம் கூட்டங்கள்











******

Monday, 15 September 2014

மரண நிழல்

   முதலில் ஜனங்கள் அதைப் புரிந்து கொள்ள இயலாமல், அது தவறென்றும், நான் வெறுமனே கூறுகிறேன் என்றும் எண்ணினர். அôனால் அது உண்மையென்பதை நிரூபிக்க, பரிசுத்த ஆவியானவர் விஞ்ஞான கருவிகளின் மூலம் அநேக முறை அதைப் புகைப்படம் எடுக்கச் செய்தார்.

    நான், ‘ஒரு ஸ்திரீ மரண நிழலினால் மூடப்பட்டிருக்கிறாள்’ என்று உரைத்தேன். அவள் புகைப்படத்தை எடுத்த போது, ஒரு கறுத்த நிழல் அவளை மூடியிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஒரு பட்டணத்தில் நான் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். பிரசங்கம் நடந்து கொண்டிருக்கும்போது, நாங்கள் பிரசங்கிக்கையில், நீங்கள்-நீங்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியும், பிரசங்கம் செய்கையில் இந்த புகைப்படம் எடுத்த போதும், அதே நியதி கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் யாரோ ஒருவர் ஒரு புகைப்படக் கருவியை, காமிராவை வைத்திருந்தார்.

   ஆகவே நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த, அந்நியராகிய ஸ்திரீயை நோக்கி கூறினேன்... நான்-நான் சதர்ன் பைன்ஸில் இருந்தபோது, நான், செல்வி இன்னார்-இன்னார் அவர்கள் மீது ஒரு நிழல் காணப்படுகின்றது’ என்றேன். என் வாழ்க்கையில் நான் முன்பு கண்டிராத ஒரு ஸ்திரீ. ‘நீங்கள் இப்பொழுது தான் வைத்தியரைக் கண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் இரு மார்பகங்களிலும் புற்று நோய் பரவியுள்ளது. நீங்கள் வைத்தியரால் கைவிடப்பட்டீர்கள். மரணத்திற்கேதுவான ஒரு கறுத்த முகமூடி உங்களை நிழலிட்டிருக்கிறது’ என்றேன்.

     அப்பொழுது காமிராவை வைத்துக் கொண்டிருந்த சகோதரியிடம், ‘அந்த ஸ்திரீயை புகைப்படம் எடு’ என்று ஏதோ ஒன்று கூறினது. புகைப்படம் எடுக்க அந்த சகோதரிக்கு விருப்பமில்லை. ஆனால் மேலும் மேலும் ‘புகைப்படம் எடு’ என்னும் கட்டளை தொனித்துக்கொண்டேயிருந்ததால், திடீரென்று காமிராவை எடுத்து புகைப்படத்தை... புகைப்படத்தை எடுத்தார்கள். விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது, அதோ அங்கே இருக்கின்றது. கறுத்த நிழல்; அங்கே அறிக்கைப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
‘சுகமடைவேன்’ என்னும் விசுவாசம் அந்த ஸ்திரீக்கு தோன்றினபோது, அவர்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. ‘அந்த நிழல் மறைந்துவிட்டது’ என்று நான் கூறின மாத்திரத்தில், மற்றொரு புகைப்படம் எடுக்கப்பட்டது. பாருங்கள்? அதில் கறுத்த மூடி மறைந்துபோய், புகைப்படம் தெளிவாகக் காணப்பட்டது. தேவனுடைய கிருபையால் அந்த ஸ்திரீ உயிரோடிருக்கிறார்கள்.

ஐயா, இதுதான் முடிவின் அடையாளமா?, டிசம்பர் 30, 1962



Thursday, 7 August 2014

எது சரியான ஞானஸ்நானம்?




ஞானஸ்நானம் என்பது என்ன?

கிறிஸ்தவர்கள் கைக்கொள்ளும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட உபதேசங்கள் அநேகம் உண்டு. ‘செய்யாதே’ என்று தேவன் கட்டளையிட்டதைச் செய்வது பாவமாகும். அதுபோலவே செய்யுங்கள் என்று தேவன் கட்டளையிட்டதை செய்யாமல் விடுவதும் பாவமே. செய்யும்படி தேவன் கட்டளையிட்ட பிரமாணங்களில் ஒன்று தான் ஞானஸ்நானம்.
‘ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது’ என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது. ஜலத்தினால் பிறப்பது என்பது ஞானஸ்நானம் பெறுவதைக் குறிக்கிறது. எனவே ஞானஸ்நானம் பெறாமல் யாரும் பரலோகம் செல்ல முடியாது.
ஞானஸ்நானமானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக வந்த யோவான் ஸ்நானகன் முதற்கொண்டு இருந்து வருகிறது.

எப்படி ஞானஸ்நானம் கொடுப்பது?

தெளித்தல் முறையில் ஞானஸ்நானம் கொடுப்பது தவறாகும். யோவான் 3 : 23-ல் வேதம் இவ்வாறு கூறுகிறது:

‘சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்து வநதான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.’

இங்கு ‘தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். தெளிப்பு ஞானஸ்நானத்தை யோவான் கொடுத்திருந்தால் அவனுக்கு மிகுதியான தண்ணீர் அவசியமில்லை. எனவே இங்கு கூறப்பட்டிருக்கும் ஞானஸ்நானம் தண்ணீருக்குள் மூழ்கி எடுக்கப்படும் கிறிஸ்தவ ஞானஸ்நானமே அன்றி வேறல்ல. எனவே தண்ணீருக்கு மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பதே சரியானதாகும்.

நாம் தண்ணீருக்குள் மூழ்கும்போது இயேசு கிறிஸ்துவோடே கூட அடக்கம் பண்ணப்படுகிறோம். (கொலோ 2 : 12) தண்ணீரை விட்டு வெளிவருவது எதைக் குறிக்கிறது? நாம் இயேசு கிறிஸ்துவோடே கூட உயிரோடு எழுந்து விட்டோம் என்பதைக் குறிக்கிறது.

மேலும் அப் 8 : 38-ல் ‘... அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்’ என்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. தெளிப்பு ஞானஸ்நானத்தைப் பிலிப்பு கொடுத்திருந்தால் அவனும் மந்திரியும் தண்ணீரில் இறங்க வேண்டிய அவசியமில்லை. கரையிலேயே நின்று ஞானஸ்நானம் கொடுத்திருக்கலாம்.

தலையில் கொஞ்சம் தண்ணீரைத் தெளிப்பதோ அல்லது தலையில் தண்ணீரை ஊற்றுவதோ ஞானஸ்நானம் ஆகாது. ஞானஸ்நானம் பெறும்படி இயேசு ‘தண்ணீருக்குள் இறங்கினார்’ என்றும், ‘ஜலத்திலிருந்து கரையேறினார்’ என்றும் வேதத்தில் வாசிக்கிறோம் (மத் 3 : 16, அப் 8 : 38)

குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது சரியானதா?

குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வழக்கம் பிரபலமாகுமுன்னே, விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டும் தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர். குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது தவறாகும். முழுவேதாகமத்திலும் எங்கும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாக எழுதப்படவே இல்லை.
மாற்கு 1:5-ல் ‘அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.’
இங்கு ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளுக்கு பாவம் என்றால் என்னவென்று தெரியாத போது எப்படி அவைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது? எனவே குழந்தை ஞானஸ்நானம் தவறாகும்.

எந்த நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது?

இன்று ஏறக்குறைய எல்லா சபைகளுமே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். அவர்கள் அவ்வாறு ஞானஸ்நானம் கொடுப்பது தவறாகும். அப்படிப்பட்ட ஒரு கட்டளை வேதத்தில் எங்குமே இல்லை. அவர்கள் மத் 28:19-ல் எழுதப்பட்டுள்ள பின்வரும் வசனத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,’

(இங்கு ‘நாமம்’ என்பது பெயரைக் குறிக்கிறது.)

பிதா என்பது ஒரு பெயரல்ல, குமாரன் என்பது ஒரு பெயரல்ல. பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயரல்ல. இந்த வசனததில் ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில்’ (பெயரில்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. எனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பது தவறாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதே சரியானதாகும். காரணம் வேதத்தில் யாருமே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்ததாக எழுதப்படவேயில்லை. 

வேதத்தில் யாராவது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றதாக கூறப்பட்டிருக்கும் ஒரு வசனத்தை நீங்கள் கண்டால் எனக்கு எழுதுங்கள். அப்படியானால் உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

வேதத்தில் அப் 2:38-ல் ‘பேதுரு அவர்களை நோக்கி : நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது.

வேதாகம காலங்கள் அனைத்திலும் தேவனுடைய பிள்ளைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுத்து வந்தனர். ஏனெனில் அதுவே சத்தியமாகும்.
நாம் ஏன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான விடையை அடுத்து வரும் 5 பகுதிகளில் நீங்கள் காணலாம். ஜெபத்தோடு வாசியுங்கள். ஆவியானவர் தாமே உங்களுக்கு அதை வெளிப்படுத்துவாராக.

சாட்சி : 1

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் யாரும் ஞானஸ்நானம் பெற்றதாக வேதத்தில் எங்கும் எழுதப்படவேயில்லை. வேதத்தில் பின்வரும் வேதவசனங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது:

‘அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.’ (அப் 19 : 5)

‘பேதுரு அவர்களை நோக்கி : நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.’ (அப் 2 : 38)

‘இவர்கள் வந்த பொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்’ (அப் 8 : 15, 16, 17)

கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்போழுது சில நாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக் கொண்டார்கள் (அப் 10 : 48)

வேதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து தேவன் இத்தனை வசனங்களில் எழுதி வைத்திருக்கும் போது, நீங்கள் வேறொரு நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தால் தேவன் எவ்வாறு அதை அங்கீகரிப்பார். நாம் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புவோம். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஞானஸ்நானம் பெறாதவராய் இருந்தால் உடனடியாக அந்த ஞானஸ்நானம் பெற தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

சாட்சி : 2

அப் 19 : 5-ல் பவுலுடைய பிரசங்கத்தைக் கேட்ட விசுவாசிகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. எனவே பவுல் மூலமாக ஆவியானவர் பிரசங்கித்த இந்த ஞானஸ்நானத்தை நாம் மாற்றக்கூடாது. பவுல் பிரசங்கித்த இந்த சுவிவேஷத்திற்கு விரோதமாய் யார் பிரசங்கித்தாலும் அவன் சபிக்கப்பட்டவன் என்ற வேதம் கூறுகிறது. கலாத்தியர் 1 : 8, 9 ஆகிய வசனங்களை வாசித்து அது உண்மை தானா என்று பாருங்கள்.

‘நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.’
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.’

சாட்சி : 3

பிதா ஒரு நாமமல்ல, குமாரன் ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி ஒரு நாமமல்ல, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.

இதைத்தான் அப்போஸ்தலர்களும் காலங்கள் தோறும் இருந்தவர்களும் அறிந்து பின்பற்றினர்.

இப்பொழுது ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் பெயர் டேவிட். நீங்கள் ஒரு பிதாவாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு நாள் வங்கிக்கு சென்று, உங்கள் கணக்கிலிருந்து ரூ. 1000/- எடுக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். உங்கள் கையொப்பம் இட வேண்டிய இடத்தில் பிதா என்று நீங்கள் எழுதினால், நிச்சயமாக நீங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் உங்கள் பெயர் பிதாவல்ல, டேவிட். அது போலவே தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, (அப் 2:38) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் தவிர மற்ற எந்த ஞானஸ்நானமும் செல்லுபடியாகாது.

சாட்சி : 4
          இன்றைக்கு அநேகர் பிசாசுகளை விரட்ட இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மாத்திரமே பிசாசுகள் பயப்படுகின்றன. ஆனால் நீங்கள் பிசாசு பிடித்த ஒரு மனிதனை நோக்கி, ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் வெளியே போ’ என்று கட்டளை கொடுத்துப் பாருங்கள். நீங்கள் தோல்வி அடைவது நிச்சயம். ஏனெனில் அந்த பிசாசு அந்த மனிதனை விட்டு போகவே போகாது. ஏனெனில் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பவை வெறும் பட்டப்பெயர்கள் என்று பிசாசுகள் அறிந்து வைத்திருக்கின்றன. ஆனால் டாக்டர் பட்டம் பெற்று வேதாகமக் கல்லூரியிலிருந்து வந்த ஒருவரால் அதை அறிய முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவது எவ்விதத்திலும் தவறாகும். அதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.

சாட்சி : 5

     இயேசு கிறிஸ்துவின் நாமமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். பிலிப்பியர் 2 : 9-11ம் வசனங்களில் தேவன் இவ்வாறு கூறுகிறார்:

‘ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழுங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைப்ண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.’

    எனவே எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆகும். மேலும் கொலோ 3:17-ல், வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நாம் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலேயே செய்ய வேண்டும் என்று வேதம் கூறுகிறது. எனவே நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மட்டுமே ஞானஸ்நானம் பெற வேண்டும்.

      வேதத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலன்றி வேறெந்த வகையிலும் ஞானஸ்நானம் பெற்றிருந்தவர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறும்படி கட்டளையிடப்பட்டனர். (அப் 19 : 5) எனவே வேதபிரகாரமாக அதுவே சத்தியம். ஆகவே காலதாமதமாகும் முன்னர் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற புத்தி செல்லுகிறோம்.

************