ஜெபத்திற்காக விடப்படும் ஓர் அழைப்பு
(A CALL TO
PRAYER)
-------------
இதைக்குறித்து கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய சகோ.பிரன்ஹாம் கூறுவதை
நாம் வாசிக்கலாம்:
நான் எப்போதும் மலையின்
உச்சியில் மேலே இருக்கிற ஒரு
சிறிய இடத்திற்குச் சென்று, எனக்கு ஒரு
நல்ல மனைவியைக் கொடுத்ததற்காக, சிறிய ஜெபத்தை ஏறெடுத்து
தேவனுக்கு என்னுடைய நன்றியைச் செலுத்துவேன். என்னுடைய மனைவி எனக்கு ஒரு
அன்பானவள்...
அவருடைய
மாறாத வாக்குத்தத்த வார்த்தைகள்,64-0120, பத்தி எண் 80
நீங்கள்
தேவனுடன் செய்து கொண்ட வாக்குத்தத்தத்தைக்
காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேவனிடம் எதைக்
கூறினாலும், அதை விசுவாசியுங்கள். அவருடைய
வார்த்தைக்கு முரணாயுள்ள அனைத்தினின்றும் பிரிந்து வாருங்கள். (அப்பொழுது) தேவன் உங்கள் ஜெபத்தைக்
கேட்டு பதிலளிப்பார்.
தேவனுடைய
வார்த்தை அவிசுவாசத்தினின்று முழுவதுமாக பிரிந்து வரும்படி அழைக்கிறது, 64-0121, பத்தி எண் 188
பாருங்கள்,
ஜெபம் காரியங்களை மாற்றிப்போடும். உன்னுடைய புருஷனையோ அல்லது இரட்சிக்கப்படாத உன்னுடைய
ஒருவனை தேவனுடைய சமூகத்தில் வைத்து, பின்பு ஜெபிப்பாயானால்,
தேவன் எங்காவது ஒரு வழியை உண்டு
பண்ணுவார். ஏனென்றால் அதைச் செய்வதாக வாக்களித்துள்ளார்.
அவர் இந்த வழியே கடந்து
செல்ல வேண்டியிருந்தது, 64-0321 B,
பத்தி எண் 54
இருபத்தைந்தாயிரம்
பேர் கூடிய கூட்டத்தை நான்
கண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நேரத்தை உடையவனாக இருந்தேன்.
அதை இப்போது நினைவுகூருகிறேன். இரண்டாயிரத்து
ஐநூறு பேரல்ல, ஒரே ஒரு
ஜெபத்தில் இருபத்தைந்தாயிரம் பிரமிக்கத்தக்க சுகமளித்தல் நடந்தேறியது: இது தென் ஆப்பிரிக்காவிலுள்ள
டர்பனில் நடந்தது.
யெகோவா-யீரே #3, 64-0404, பத்தி எண் 14
நீங்கள்
பாருங்கள், ஒருவருக்காக நீங்கள் ஜெபிக்கப் போகும்போது,
அங்கு ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது. நண்பர்களே, நாம் ஜெபிப்பதில்லை; அங்குதான்
நாம் தோல்வியடைகிறோம். ஜெபம் மிக முக்கியத்துவம்
வாய்ந்ததாகும்.
இயேசு யார்?, 64-0620 B,
பத்தி எண் 100
உன்னுடைய
விரைப்புத்தன்மையை (இறுமாப்புத்தன்மையை) ஜெபத்தினால் இனிமையாக்கு;
கேள்விகளும்
பதில்களும் #4,
64-0830 E, கேள்வி
எண் 405
கர்த்தருக்கு
நன்றி செலுத்தாமல், நீங்கள் எந்த உணவையும்
புசிக்கலாகாது. ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையினாலும்,
ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படுகிறது. பாருங்கள்? அதை நீங்கள் புசிக்கும்
போது கூற வேண்டியதாவது: ‘கர்த்தராகிய
இயேசுவே, நீர் இந்த ஆகாரத்தை
எனக்காக ஆயத்தப்படுத்தினீர். இப்போது, விசுவாசத்தினாலே, இந்த ஆகாரத்தைப் பரிசுத்தப்படுத்துகிறேன்;
அது எங்கள் சரீரங்களுக்கு பெலத்தை
அளிப்பதாக.’
கேள்விகளும்
பதில்களும் #4,
64-0830 E, பத்தி
எண் 181
‘என்
இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால்,
ஆண்டவர் எனக்குச் செவிகொடார்’ என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.
அறுப்பின்
நேரம், 64-1212, பத்தி எண் 216
உத்தமமமான
ஒவ்வொரு ஜெபத்திற்கும் தேவன் பதிலளிக்கிறார். (அதை
நான் விசுவாசிக்கிறேன்.) அவருடைய சொந்த வழியில்
பதிலளிக்கிறார்.
நீ இதை விசுவாசிக்கிறாயா?, 50-0115, பத்தி எண் E-25
எல்லாவற்றையும்
புறம்பே தள்ளுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு தேவனிடம்
நெருங்கி வாருங்கள். அவரோடு நடங்கள், அவரோடு
பேசுங்கள். உங்கள் ஜெப ஜீவியம்
முதலாவது இருக்கட்டும், மற்றவை எல்லாமும் இரண்டாவதாக
இருக்கட்டும். எல்லா நேரங்களிலும் அவரோடு
சீர்பொருந்தி யிருங்கள்.
சாட்சி,
50-0814, பத்தி எண் E-9
ஜெபத்தைப்
போல மகத்தானது ஒன்றுமில்லை. எல்லா எதிர்வரும் காலங்களையும்
தேவன் தம்முடைய கரங்களில் கொண்டுள்ளார்.
காணக்கூடாதவைகளை
நோக்கிப்பார்த்தல்,
50-0816, பத்தி எண் E-4
புற்று
நோயால் பீடிக்கப்பட்டு, அது அவர்கள் சரீரங்களில்
படர்ந்து தொங்கினவர்களாய் ஜனங்கள் மேடைக்கு வருவதைப்
பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட சமயத்தை உடையவனாக இருந்தேன்.
ஜெபம் ஏறெடுக்கப்பட்ட போது, அவர்கள் பெற்றிருந்த
அந்தப் புற்று நோய் அவர்களுக்காக
நான் ஜெபிக்கும் போது, வெளிரி, தரையில்
விழுந்து உருண்டோடிப் போகும்.
காணக்கூடாதவைகளை
நோக்கிப்பார்த்தல்,
50-0816, பத்தி எண் E-8
கொர்நேலியு
ஒரு நீதிமான், நல்ல மனிதன். அவர்
ஜெபத்தில் தரித்திருந்தார். ஒரு தூதன் அவரிடத்தில்
வந்து, ‘தோல் பதனிடுகிறவனாகிய சீமோனிடத்தில்
மனுஷரை அனுப்பி பேதுரு யார்
என்று விசாரித்து, பேதுரு வந்து எல்லாவற்றையும்
உனக்கு விவரித்துக் கூறுவார்’ என்று கூறினார்.
அது என்னிடம் உரைத்தபடியே சம்பவிக்கும், 50-0818, பத்தி எண் E-14
நீங்கள்
தேவனிடத்தில் ஏறெடுக்கும் ஜெபத்திற்கு, நான் வெறுமனே அவருடைய
வாயாக இருக்கிறேன். பாருங்கள்? உங்கள் ஜெபம் தேவனிடத்தில்
சென்றடையுமானால், நீங்கள் சுகமடைந்தீர்கள் என்று
எனக்குச் சொல்லுகிறார். பின்பு நான் அதை
விசுவாசிக்கிறேன். அதை உங்களிடம் பேசுகிறேன்.
தேவதூதனும்
கட்டளையும், 50-0821, பத்தி எண் E-29
நான் ஒருபோதும் ஐசுவரியவானாக விருப்பம் கொண்டது கிடையாது. நான்...
அது சாலமோன் என்று நான்
– நான் விசுவாசிக்கிறேன். நான் எப்போதும் கேட்டதிலேயே,
மிகச் சிறந்த ஜெபத்தை தேவனிடம்
ஏறெடுத்தான் என்று விசுவாசிக்கிறேன். அவன்
தேவனை மறந்து விடுவான் என்பதற்காக
தேவன் தன்னை மிகவும் ஐசுவரியவானாக்க
வேண்டாம் என்றும் அவன் (தரித்திரனாகி)
திருடாதபடிக்கு தன்னை தரித்திரனாக்கி விடாதபடிக்கும்
தேவனிடம் விண்ணப்பித்தான்.
நீ இதை விசுவாசிக்கிறாயா?, 51-0506 A, பத்தி எண் E-25
தானியேல்
ஜெபித்தார். ஆனால் தூதன், ‘அவர்
ஜெபம் ஏறெடுத்து இருபத்தியொரு நாட்கள் ஆன பிறகும்,
அந்தத் தூதன் இவரைச் சந்திக்க
கூடாத அளவிற்கு அவருக்கு அங்கே பிரச்சனை உண்டாயிருந்தது’ என்று
கூறினார். ஆகவே எதிலும் அவசரம்
காட்டாதீர்கள்; விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்; விசுவாசமுடையவர்களாயிருங்கள்.
தேவதூதன்,
51-0720, பத்தி எண் E-23
யோனாவின்
ஜெபத்தை தேவன் கேட்பாரென்றால், யோனா
இவ்விதமாக ஜெபித்தார்; பூமிக்குரிய ஆலயத்திலிருந்து ஜெபித்த அவனுடைய ஜெபத்தை
தேவன் கனப்படுத்தினார். அந்த ஆலயத்தை பூமிக்குரிய
மனிதன் பிரதிஷ்டை பண்ணியிருந்தார். அது ஒரு பூமிக்குரிய
மனிதனின் ஜெபமாக இருந்தது...
நீ இதை விசுவாசிக்கிறாயா?, 51-1003, பத்தி எண் E-72
அது, ஜெபத்தைக் குறித்தும், பள்ளிகளில் வேதாகம வாசிப்பைக் குறித்தும்,
உச்ச நீதிமன்றத்தின் சட்டவிதிகளை எனக்கு நினைவுபடுத்தியது. அதன்
பின்னால் யார் இருக்கிறார்கள்? சாத்தான்
தான். அது தேவனுக்கு விரோதமாக
வெடித்துச் சிதறிய மற்றுமொரு கோபாக்கினையாகும்.
சபைக்கால
புத்தகம், சிமிர்னா சபைக்காலம்
ஆனால்,
கொலம்பா ஒருகையால் விதைகளை ஊன்றினார்; அதே
சமயத்தில், இன்னொரு கையை உன்னதத்தை
நோக்கி உயர்த்தினவராய் ஜெபத்தில் தரித்திருந்தார். இன்றைக்கு அந்த தீவு உலகத்திலேயே
மிகவும் செழிப்பு வாய்ந்த தீவுகளில் ஒன்றாக
இருக்கிறது.
சபைக்கால
புத்தகம், தியத்தீரா சபைக்காலம்
அது, அதுதான் ஜெபம். அப்படிப்பட்ட
ஜெபத்தை நான் சார்ந்திருக்கிறேன். தேவனுடைய
எல்லா இரகசியங்களிலும் அது இரகசியமானதாய் இருக்கிறது.
அதுவே தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்கிற ஒவ்வொன்றுக்கும் உள்ள
கதவின் திறவுகோலாயிருக்கிறது. அது ஜெபமே.
எதிர்ப்பார்த்தல்,
50-0405, பத்தி எண் E-3
தேவன் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறாரா? ஆம். அவர் துரிதமாக
பதிலளிக்கிறாரா? எல்லா நேரங்களிலுமல்ல. அவர்
அப்படி செய்கிறாரா? இல்லை. சில நேரங்களில்
நம்மைக் காத்திருக்கச் செய்கிறார். அது சரியா? ஆனால்
தேவன் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார்.
மோசேயைக்
குறித்த போதனை, 56-0513, பத்தி எண் 84
...இரவு
நேரங்களில் நான் அதிகமாகத் தூங்குவதில்லை.
எப்போதும் ஜெபத்தில் இருக்கிறேன். இரவு நேரம், எல்லாப்
பிசாசுகளின் வல்லமையும் காலை வரும்போது முடிந்து
விடுகிறது. அவைகள் உலாவி வராத
நேரத்தில், அது தான் பரிசுத்த
ஆவி அசைவாடி என்னுடன் பேசுகிற
நேரமாக இருக்கிறது. நீங்கள் ஜெபிக்க விரும்பினால்
அதிகாலையில் ஜெபிக்கச் செல்லுங்கள்; அதிகாலையில் எழுந்திருங்கள்.
தேவதூதனும்
கட்டளையும், 50-0821, பத்தி எண் E-17
நண்பர்களே,
நீங்கள் அதிகமாக சிரிக்கலாம்; நீங்கள்
அதிகமாகப் பேசலாம்; நீங்கள் அதிகமாக நடந்து
செல்லலாம்; ஆனால் நீங்கள் அதிகமாக
ஜெபிப்பதில்லை.
கர்த்தருடைய
புயம் யாருக்கு வெளிப்பட்டது?, 50-0824, பத்தி எண் E-25
ஜெபத்திற்காக
அப்படிப்பட்ட பாரங்கொண்ட இருதயத்தையுடைய ஒரு சபையை நான்
பெறுவேன். அவர்கள் இந்தப் பீடத்தண்டை
இரவும் பகலும் தரித்திருக்கிறவர்களாயும் மற்ற ஒவ்வொரு
காரியத்தையும் செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும்; அது
மட்டுமல்லாமல், தங்கள் வீடுகளிலும் தொடர்ந்து
ஜெபிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்...
கேள்விகளும் பதில்களும் #1,
54-0103 M, பத்தி
எண் 167
தனிமையாய்
இருங்கள். பொது இடங்களில் நீ
ஜெபிக்கிற தன்மையைக் காட்டிலும், நீ தனிமையாயிருந்து ஜெபிக்கிற
ஜெபம் வித்தியாசமானதாய் இருக்கும். நீங்கள் எல்லோரும் தனிமையை
நாட வேண்டும்; வெளியே சென்று, நீயும்
கர்த்தரும் ஒருநாளில் அநேக முறை சந்திக்கிற
உண்மையான ஒரு இரகசிய இடத்திற்குச்
சென்று ஜெபியுங்கள்.
பரிசுத்தவான்களுக்கு
ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட
விசுவாசம்,
55-0501, பத்தி எண் E-8
ஜெபம் காரியங்களை மாற்றிப்போடுகிறது. ஜெபம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள்
கொண்டு செல்கிறது. ஜெபம் வியாதியஸ்தர்களை சுகம்
பெற்றவர்களாய் மாற்றுகிறது; பாவிகளைப் பரிசுத்தர்களாக்குகிறது. அது ஜெபமே.
விசுவாசம்,
56-0427, பத்தி எண் E-5
ஜெபமானது
ஒரு விசுவாசிக்கு அதைத்தான் செய்கிறது. அதுதான் நீ, உலகத்தை
உன்னை விட்டு அகற்றிப்போடுகிறது...
மோசேயைக்
குறித்த போதனை, 56-0513, பத்தி எண் 197
நீ தனித்துப் போகும்படிக்கு, ஏதோ ஒன்று உனக்குள்
இருக்கிறது என்பதை நீ அறிவாய்.
அநேக ஜனங்கள், அவர்கள் சபைக்கு வருவது
வரைக்கும் ஜெபிப்பதேயில்லை; அநேக ஜனங்கள், ஜெபிக்கிறதற்கான
இடம் சபை மட்டுமே என்று
எண்ணுகிறார்கள். ஆனால், மனிதர்கள், தங்கள்
பரிசுத்தமுள்ள கரங்களை உயர்த்தினவர்களாய் எல்லா
இடங்களிலும் ஜெபிக்க வேண்டும் என்று
பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
குருடனான
பர்திமேயு, 57-0301, பத்தி எண் E-9
மேலும்
இப்போது, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவருக்காக ஒருவர்
ஜெபியுங்கள். பிசாசு எங்காவது எந்த
கசப்பையும் விதைக்க அனுமதிக்காதீர்கள். பாருங்கள்?
இந்த மணி நேரத்தில் உங்கள்
ஆத்துமாவை பரிசுத்தமாய்க் காத்துக் கொள்ளுங்கள்...
பெர்கமு
சபைக்காலம், 60-1207, பத்தி எண் 31
எல்லாச்
சபையும் ஜெபிக்க வேண்டும், எல்லா
சாதாரண மனிதனும் ஜெபிக்க வேண்டும். எல்லா
மூப்பர்களும், தர்மகர்த்தாக்களும், மேய்ப்பனும் ஜெபிக்க வேண்டும். பின்பு
நாம் ஒட்டு மொத்தமாக தேவனுடைய
சமூகத்திற்குள் வருகிறோம், அவ்விதமாக ஒரு மகத்தான மந்தையாக
வர வேண்டும்.
தாவீதின்
குமாரனே, என் மேல் மனமிரங்கும்,
61-4215, பத்தி எண் E-4
...ஒவ்வொரு
நாளும் குறைந்தபட்சம் ஒரு அதிகாரமாவது பரிசுத்த
வேதாகமத்திலிருந்து படிக்க வேண்டும்; பின்
ஜெபிக்க வேண்டும். பாருங்கள்? எப்போதும் அதை செய்யுங்கள்.
தேவன் தம்முடைய வரங்களைக் குறித்து சாட்சி பகருதல், 52-0713 E, பத்தி
எண் E-11
...ஒரு
மனிதனுக்காக, அவனுடைய மனைவி ஜெபிக்கும்
போது, தேவன் அம்மனிதன் மேல்
அசைவாடுவார்; அல்லது அது போலவே
ஒரு மனிதன் தன் மனைவிக்காக
ஜெபிக்கும் போது, அவள் மீது
தேவன் அசைவாடுவார்.
சகேயு,
58-0517, பத்தி
எண் E-32
...அவள்
உடம்பில் துணியே இல்லாமல் போகுமட்டும்
நீ அவளை அடிக்கலாம்; எப்படியும்
அவள் அதைச் செய்வாள். ஆனால்,
அவளை நீ தேவனுக்கு முன்பாகக்
கொண்டு போ, அந்தப் பிள்ளையின்
ஆத்துமாவை தேவனிடத்தில் உரிமை கோரு. அதனுடனே
தரித்திரு. நான் அறிந்தவைகளிலேயே, அதுதான்
சிறந்த காரியம் என்று நம்புகிறேன்.
ஆம் ஐயா. நான் அறிந்துள்ளபடி
அதுதான் சிறந்த தீர்வு, அது
ஜெபமே.
கேள்விகளும் பதில்களும்,
59-1223, பத்தி
எண் 111
மேலும்
ஜெபத்தின் மூலமாகவே இன்று நான் ஜீவிக்கிறேன்.
நான் தேவனுடைய கிருபையால் ஜெபத்தின் மூலமாக ஜீவிக்கிறேன்.
கேள்விகளும் பதில்களும்,
61-1015 M, பத்தி எண் 10
ஜெபம் சரியாக தேவனை மனிதனிடத்தில்
கொண்டு வருவதில்லை. அது மனிதனை தேவனிடத்திற்குக்
கொண்டு செல்வதாகும். பாருங்கள்? நீங்கள் ஜெபிக்கும் போது,
பூமிக் குரிய காரியங்களை பார்ப்பதை
இழந்து - இழந்து விடுகிறீர்கள். எங்கோ
ஓரிடத்திற்குச் சென்று விடுகிறீர்கள். மேலே,
மேலே, மேலே, எட்டாத தூரத்திற்கு
அவருடைய பிரசன்னத்திற்குள் வருமட்டுமாய் செல்கிறீர்கள்.
நீர் சகலத்தையும் அறிகிறவர், 52-0716, பத்தி எண் E-17
பரிசுத்தவானிடத்திலிருந்து
செல்லும் ஜெபம், ஒரு தூதனுடைய
ஜெபத்தைக் காட்டிலும், கோடி கோடியான உயரத்திற்குச்
செல்லும் (ஆம், ஐயா.) ஏனென்றால்,
அவன் ஒரு குமாரனாயிருக்கிறான்.
கேள்விகளும் பதில்களும்,
59-1223, பத்தி எண் 127
ஆனால்,
ஒரு உண்மையான, உண்மையான விசுவாசி, உண்மையாய் ஆவிக்குரியபடி கட்டப்பட்டிருப்பானானால், அவன் ஒவ்வொரு நாளும்,
தன்னுடைய பரிசுத்த வேதாகமத்தை வாசிப்பான், கர்த்தரிடத்தில் பேசுவான். அது சரியே.
இராப்போஜனம்,
62-0204, பத்தி எண் 96
...பிசாசு
செயல் இழந்து போகுமட்டுமாய் ஜனங்களால்
ஜெபிக்க முடியும். அப்படிப்பட்ட ஜெபத்தை ஏறெடுக்க முடியும்.
முற்றிலுமான
விடுதலை, 59-0712, பத்தி எண் 83
ஜெபம் காரியங்களை மாற்றுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
ஜெபத்தினால் மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு,
ஜீவன் அதனிடத்தைப் பெற்றுக்கொள்வதை நான் பார்த் திருக்கிறேன்.
பரிசுத்தவான்களுக்கு
ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம், 57-0610, பத்தி எண் E-4
அன்பான
நண்பர்களே, நான் உங்களுக்கு கூறுவது
என்னவென்றால், முக்கியமான காரியங்களில் தேவனுடைய சித்தத்தை அறிய வேண்டிய சிறந்த
வழி ஜெபமே. பாருங்கள்?
கேள்விகளும் பதில்களும்,
61-1015 M, பத்தி எண் 163
...அங்கே
நாம் ஓர் இடத்தைப் பார்க்கிறோம்.
அங்கே தேவனுடைய குமாரன் அதிகமான நேரத்தை
ஜெபத்திலேயே செலவழித்தார். அவருக்குள் இருந்த பரிசுத்தாவியோடு ஐக்கியம்
கொள்வதற்கு, இயேசுவே அதிக நேரம்
ஜெபிப்பதில் செல வழித்திருப்பாரென்றால், நீயும் நானும்
எவ்வளவுக்கதிகமதிகமாய் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்?
யவீருவின்
குமாரத்தி சுகமடைதல், 55-0227 E, பத்தி எண்
E-15
காலையில்
ஒரு சிறிய ஜெபம் சொல்லுதல்,
இரவில் ஒரு சிறிய ஜெபம்
சொல்லுதல், படுக்கைக்குச் செல்லுதல், மறுநாள் காலையில் எழுந்திருப்பது.
அப்படிப்பட்ட இந்த பழைய வெதுவெதுப்பான,
அரைகுறையான (வழி) இவைகளிலிருந்து வெளியே
வாருங்கள். நாம் உலகத்தார்களைப்போல இருக்
கிறோம். அதில் வியப்பில்லை.
பிதாவே,
வேளை வந்தது, 56-1002 A, பத்தி எண்
E-39
இந்நாட்களில்
ஒரு பெரிய, மகத்தான அழுத்தம்,
(நெருக்கம்) வந்து கொண்டிருக்கிறது. அப்போது
நீங்கள் ஜெபித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வரும்.
தேவனுடைய
தவறாத வார்த்தை, 56-0406, பத்தி எண் E-5
இயேசு ஒருபோதும் அவருடைய ஜனங்களிடத்தில், ஒரு
ஜெபத்தைச் சொல்லுங்கள் என்று கூறவில்லை; ‘ஜெபம்
பண்ணுங்கள்’ என்றே
கூறினார்.
பெர்கமு சபையின்
காலம், 60-1207, பத்தி எண் 264
நீங்கள்
ஜெபத்தை விரும்பி, ஜெபத்தின் மூலமாக ஆவிக்குள்ளாக வேண்டுமா?
உன்னால் செய்யக்கூடியது அந்த ஒரு வழி
தான். உலகத்திற்கு உன்னை முற்றிலுமாக மறைத்துக்
கொள். தனியாய் தேவனோடு சஞ்சரி.
ஐக்கியம்,
56-0212, பத்தி எண் E-24
நீ வழக்கமாக உணர்வது போல, உன்னால்
ஏன் ஜெபிக்க முடியவில்லை, ஏன்
ஆவியை உணர முடிவதில்லை. ஏனென்றால்,
எழுப்புதலின் அக்கினி அகன்று விட்டது
என்று நான் நம்புகிறேன்.
கேள்விகளும்
பதில்களும் #4, 64-0830 E, பத்தி எண்
386
மேலும்
வழக்கமாக, யார் ஜெபிக்கிறார்களோ அவர்கள்
தான் பாரம் அடைந்தவர்கள்; அவர்கள்
தான் ஏதோ ஒன்றைப் பெற்றவர்கள்.
யார் ஜெபிக்கிறார்களோ, அவ்வாறு ஜெபிப்பதற்கென்று தேவன்
அவர்களை பிரதிஷ்டை செய்துள்ளார்.
கண்டும்
காணாதது போல விடப்படும் ஒரு
உண்மையான அடையாளம், 61-1112, பத்தி எண் 67
உன்னை நீயே தனிமைப்படுத்திக் கொள்ளும்போது,
அதில் ஏதோவொன்று இருக்கிறது என்பதை அறிவீர்கள். இயேசு
கிறிஸ்து பேசிய இரகசிய ஜெபம்
என்பது இதுதான்: ‘நீயோ ஜெபம் பண்ணும்போது,
உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து,
உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற
உன் பிதாவை நோக்கி ஜெபம்
பண்ணு, அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய்
உனக்குப் பலனளிப்பார்’ என்றே கூறினார்.
...ஜெபத்தில்
ஏதோவொன்று இருப்பதாகக் காணப்படுகிறது; எல்லா மாய்மாலத்தையும் அது
எடுத்துப்போடுகிறது. நாம் தனிமையாய்ப் போகும்
போது, தேவனோடு ஒரு நல்ல
தொடர்பைப் பெற்றுள்ளோம் என்பதாகக் காணப்படுகிறது...
குருடனான
பர்திமேயு, 57-0301, பத்தி எண் E-9
...அவருடைய
நாமத்தில் நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு,
கிறிஸ்து நமக்கு அதிகாரத்தை தந்துள்ளார்.
உலகம் எப்போதும் அறிந்ததிலேயே மிக வல்லமையான ஆயுதம்:
ஜெபமே...
தேவனை விசுவாசித்தல், 52-0224, பத்தி எண் 107
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு
முன்பாக தன் கால்களை முடக்கும்போது,
அவனுக்குள் எத்தகைய வல்லமை இருக்கிறது
என்பதை கிறிஸ்தவர்களே உணரவில்லை. அது எத்தகைய வல்லமை
என்பதை – அவன் உணருவதில்லை.
என் தூதனானவர் உனக்கு முன்பாக போவார்,
53-0216
ஒரு பரிசுத்தவானை அவனுடைய ஜெபத்திலிருந்து உன்னால்
மறைக்க முடியாது. மனிதன் எப்போதும் பெற்றிருந்ததிலேயே
வல்லமையான ஆயுதம் அதுதான்.
தேவன் தம்முடைய வார்த்தையில், 57-0323, பத்தி எண் E-8
விசுவாசம்
ஜெபத்தைப் பிறப்பிக்கிறது. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.
ஜீவன் தான் சுகமளிப்பது, 57-0611, பத்தி எண்
E-40
ஜெபத்தைப்
போல, ஒரு அணுகுண்டிற்கோ அல்லது
ஒரு ஹைட்ரஜன் குண்டிற்கோ வல்லமை கிடையாது.
எதிர்பார்ப்பு,
61-0207, பத்தி எண் E-9
நான்,
‘அவற்றிலிருந்து வெளிவர உபவாசித்து ஜெபியுங்கள்’ என்றேன்.
நான் அதிகமாக உபவாசிக்கும் போது,
அருவருக்கத்தக்க பாவம் உள்ளே பிரவேசிக்கிறது.
பாருங்கள்? அது இன்னும் மோசமாகிறது.
அந்த உத்தமம் வரும்வரை உங்களால்
அதை விட்டு அகல முடியாது.
உறுதி கொள்ளுதல் அதன் பிறகு அக்கறை
கொள்ளுதல், 62-0118, பத்தி
எண் E-65
அதற்குப்
பிறகு, ஜெபத்தில் அடையாளத்தைப் பூசுங்கள் - தீர்மானத்தோடும், விசுவாசத்தோடும். அப்படிப்பட்ட அன்பைப் பூசுங்கள்...
அடையாளம்,
63-0901 M, பத்தி எண் 373
உங்களுக்காக
மட்டுமே ஜெபிக்காதீர்கள்; மற்றவர்களுக்காக ஜெபியுங்கள். தேவன் ஜெபத்தைக் கேட்கிறார்.
நீங்கள் எதைக் குறித்து ஜெபிக்கிறீர்கள்
என்பதை அவர் அறிவார்.
நாம் தேவனை காண்போம், 59-1129, பத்தி
எண் 191
ஒரு மனிதன் இந்நாட்களில், திருமணம்
செய்கிறான்... வாலிபப் பையன்களே, பெண்களே,
நீங்கள் நீண்ட நேரம் ஜெபிப்பது
உங்களுக்கு நல்லது. உங்களுக்கு ஒரு
துணையைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கேளுங்கள். வாலிபப் பெண் களே,
அதுபோலவே நீங்களும் ஜெபியுங்கள், ஏனென்றால் அது நிலையற்றதாக இருக்கிறது.
ஒரு விளங்காத சத்தம், 61-0315, பத்தி எண் E-25
ஒரு மனிதன் தனக்கு ஒரு
மனைவியைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, அவன் அதிகமாய்
சிந்திக்கவும், ஜெபிக்கவும் வேண்டும்.
ஒரு மணவாட்டியைத் தெரிந்து
கொள்ளுதல், 65-0429 E, பத்தி எண்
47
...நம்முடைய
மனைவியையோ அல்லது புருஷனையோ தெரிந்து
கொள்ளும்போது, அதைப் படிப்போமானால்! ஒரு
மனிதன் வாஞ்சித்து ஜெபிக்க வேண்டும், ஏனென்றால்
அவனுடைய முழு ஜீவியமே அழிந்து
போய்விடும். ‘மரணம் நம்மைப் பிரிக்கும்
வரைக்கும்’ என்ற உடன்படிக்கையை நினைவுகூர வேண்டும். ஒரு ஸ்திரீ ஒரு
புருஷனைப் பெற்றுக் கொள்ளும்போது, அவன் உனக்குப் பொருத்தமானவன்
அல்ல என்பதை அறிந்து கொள்ளும்போது,
எது சரி, எது தவறு
என்பதை அறிந்தும் கூட அதைச் செய்தபடியால்,
அது உன் தவறு. ஆகவே
நீ நன்றாக ஜெபிக்கும் மட்டும்
அதைச் செய்யக்கூடாது.
ஒரு மணவாட்டியைத் தெரிந்து
கொள்ளுதல், 65-0429 E, பத்தி எண்
51
ஒரு மனிதனை மணக்க இருக்கிற
எந்த ஸ்திரீயும், அந்த மனிதனைக் குறித்து
தீர்க்கமாய் ஒன்றும் அறியாதிருக்கையில், அவனை
தனியே விட்டு விட வேண்டும்.
அது அவளுக்கு நல்லது. எந்தவொரு மனிதனும்,
தான் விவாகம் பண்ணப் போகும்
ஸ்திரீயைக்குறித்து தீர்க்கமாய் ஒன்றும் அறியாதிருக்கும் போது,
அவளைத் தனியே விட்டு விட
வேண்டும். அது நல்லது. அதன்
பேரில் நீ ஜெபிப்பது நல்லது;
தேவன் பதில் அளிக்கும் வரை
ஜெபி.
ஒரு எக்காளம் விளங்காத சத்தமிடுகிறது, 63-0114, பத்தி எண் 65
வியாதியஸ்தருக்காக
ஜெபிப்பதை விசுவாசிக்கிற யாரா கிலும், தெய்வீக
சுகமளித்தலை விசுவாசிக்கிற யாராகிலும்; அது ஸ்திரீயோ, மனிதனோ,
பையனோ, பெண்ணோ. என் பெண்ணைக்
கவனித்துள்ளேன். அவள் மூன்று வயதாயிருக்கும்
போதே, ஒரு முடமான குழந்தைக்காக
ஜெபித்தாள். அது சுகமடைந்தது.
கிரியையில்லா
விசுவாசம் செத்தது, 50-0822, பத்தி எண் E-40
யாருக்காவது
நான் ஜெபித்து, அதில் ஜெயம் பெற்ற
நேரத்தை நான் எப்போதாவது பெற்றிருப்பேனானால்,
அது அவர்களுடைய ஐக்கியத்திற்குள் நுழைந்து, அவர்களுக்குரிய பலவீனங்களை அறிந்து கொள்வேன், அவர்களின்
நிலையை உணர்வேன்.
தேவன் தம்முடைய அன்பை செலுத்துகிறார், 57-0806, பத்தி எண்
E-26
ஒரு ஊழியக்காரர், ஜெபிப்பதற்கு முன்பாக, பிரசங்கம் பண்ணுவதற்கு முன்பாக, எப்போதும், எவ்வாறு தன்னைத் தானே
பிரித்துக் கொள்ள வேண்டும். எதைச்
செய்வதற்கு முன்பாகவும், அந்த அமைதியான இடத்தில்,
அவர் தேவனோடு தனித்திருக்க வேண்டும்.
தேவனோடு தன்னை ஒளித்துக் கொள்ள
வேண்டும்.
மறைக்கப்பட்ட
ஒரு ஜீவியம், 55-1006 A, பத்தி எண்
E-29
பழைய, சிறிய வீடுகளுக்கு நான்
அனேக முறை சென்றிருக்கிறேன். தாய்மார்களும்
மற்றவர்களும் படுக்கை அறையிலிருந்து வருவதை
நான் பார்த்திருக்கிறேன், பழைய, சிறிய கட்டம்
போட்ட கைக்குட்டைகளை வைத்து, அவளு டைய
கண்களைத் துடைத்துக்கொண்டு, அழுது கொண்டு, அந்த
இரகசிய இடத்தில், தேவனை சந்திக்கும் இடத்தில்,
தேவனோடு தனித்திருந்து, தனியாய் பிரித்துக்கொண்டு இருப்பவர்களை
நான் பார்த்திருக்கிறேன். ஓ, அது ஒரு
வியக்கத்தக்க இடமாக இருக்கும்.
கிறிஸ்துவில்
மறைக்கப்பட்ட ஒரு ஜீவியம், 55-1110, பத்தி
எண் E-24
குழந்தைகள்
பள்ளிக்கூடத்திற்கு சென்றடையும்போது, அந்த இரகசிய அறைக்குள்
செல்லுங்கள், கதவை மூடுங்கள். கீழே
முழங்காற்படியிடுங்கள். எல்லா இடங்களிலும், எல்லா
வகையான சத்தத்தை நீங்கள் கேட்டுள்ளீர்கள். ஆனால்
அந்தச் சத்தங்கள் எல்லாம் அடங்கும் மட்டுமாய்,
முழங்காற்படியிட்டு அங்கேயே தரித்திருங்கள். துள்ளிக்குதிக்கத்
தொடங்குவீர்கள். அது உங்களை மாற்றிப்போடும்.
அவருடைய
சத்தத்திற்கு செவி கொடுங்கள், 58-1005 M,
பத்தி எண் E-45
நீங்கள்
இரகசியமாக ஜெபிக்கிறீர்களா? அந்த இடத்திலேயே தரித்திருங்கள்.
உங்களுடைய அறைகளுக்குச் செல்லுங்கள். எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள், கீழே
முழங்கால் படியிடுங்கள், தேவனுக்கு முன்பாகக் காத்திருங்கள். அங்கேயே காத்திருங்கள்.
இயேசுவின்
பட்சம் சேர்ந்திருத்தல், 63-1226, பத்தி எண் 110
பாருங்கள்,
இப்போது முக்கியமான காரியம் என்னவென் றால்,
உன்னுடைய ஜெபம், உன்னுடைய முக்கியமான
ஜெபம், நீண்ட ஜெபம் இவையனைத்தும்
இரகசியமாகவே இருக்க வேண்டும். எல்லோரும்
ஜெபியுங்கள்... ஒரு இரகசிய அறைக்குள்
செல்லுங்கள். கதவை மூடுங்கள். பகல்
முழுவதும், இரா முழுவதும் அல்லது
இரண்டு மணிநேரம் அங்கே ஜெபிக்க விரும்புகிறாய்,
அங்கேயே ஜெபியுங்கள்.
சபை ஒழுங்கு, 63-1226, பத்தி எண் 165
...அவருக்கு
முன்பாகச் சென்று அமைதியாயிருங்கள். துணி
துவைப்பது அதைத் தடை செய்ய
அனுமதியாதீர்கள். எந்த ஒரு வேலையும்
அதை தடை செய்யாதிருப்பதாக. எதுவும்
அதைத் தடை செய்ய அனுமதியாதீர்கள்.
நீ என்ன செய்கிறாய் என்பதை
மற்றவர்கள் அறிந்து கொள்ள இடங்கொடுக்காதீர்கள்.
அவருக்கு முன்பாக செல்லுங்கள். எங்காவது
காடுகளுக்குச் செல்லுங்கள். சாலையின் பக்கவாட்டிற்குச் செல்லுங்கள். இரகசிய அறைக்குச் செல்லுங்கள்.
கதவை மூடுங்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்தை சென்றடையும்போது. அங்கே கீழே உங்கள்
முழங்கால்களை முடக்குவீர்களாக.
அவருடைய
சத்தத்திற்கு செவி கொடுங்கள், 58-1005 M,
பத்தி எண் E-45
உனக்காகவே
ஜெபிக்காதே; உன் சிந்தையில் மற்றவர்
களைக் கொண்டு வந்து அவர்களுக்காக
ஜெபிக்க வேண்டும்.
தரித்து
நில், 57-0518, பத்தி எண் E-52
ஒருவருடைய
ஜீவியத்தில் மகத்தான நேரம் என்று
ஒன்று இருக்குமானால், அது கீழே அமர்ந்து
தியானிப்பதும், உன்னுடைய சிந்தையிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து போடுதலுமாகும். அதை
நீ செய்வாயானால், தேசத்தைச் சுற்றிலும் அதிகமான பயப்படுதல் உண்டாயிருக்காது.
நாம் தேவனைப் பற்றிய நினைவு
உடையவர்களாயிருக்க வேண்டும். ‘என் னிடத்தில் நெருங்கி
வாருங்கள்; நானும் உங்களிடத்தில் நெருங்கி
வருவேன்.’
குருடனான
பர்திமேயு, 60-0330, பத்தி எண் E-28
உன்னுடைய
நேரத்தையும் சமயத்தையும் ஜெபத்திற்காக தியாகம் செய். உன்னுடைய
ஜீவியத்தை தியாகம் செய்.
எதிர்பார்ப்பு,
61-0207, பத்தி எண் E-63
...இரவில்
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, ஜெபிப்பதை ஒரு பழக்கமாகக் கொள்ள
எப்போதும் நாம் முயற்சிக் கிறோம்.
நான் முதலாவது மனம் மாற்றம் அடைந்த
அந்த நாட்களிலிருந்து, அதை நான் ஒரு
வழக்கமாகக் கொண்டுள் ளேன். காலையில் எழுந்திருப்பேன்.
அது மிகவும் இருளாகவும், நடப்பதற்கு
பனி மிகுந்ததாகவும் இருக்கும்;
வெளிப்படுத்தின
விசேஷம் 4-ம் அதிகாரம் #2,
61-0101, பத்தி எண் 12
இயேசுவை
உங்கள் வீட்டை விட்டு புறம்பாக்குவீர்கள்
என்றால், குடும்ப ஜெபத்தை நிறுத்துவீர்களானால்,
வேதாகமம் வாசிப்பதை நிறுத்துவீர்களானால், உங்கள் வீடுகளில் இன்னும்
இதுபோன்ற காரியங்களைச் செய்வீர்கள் என்றால், உங்கள் வீடுகளில் பிரச்சனைகள்
வருவதைப் பார்க்கலாம்.
நீ இதை விசுவாசிக்கிறாயா?, 53-0906, பத்தி எண் E-72
...எந்த
நேரத்திலும் பிசாசு உங்களை மேற்கொள்ள
விரும்புவான். அவனுடைய ஆளுகைக்குள் உங்களைக்
கொண்டு வர விரும்புவான். உங்களுடைய
ஜெப வாழ்க்கையை முறித்துப் போடுவீர்களானால், சகோதரனே, நீ ஒன்றுமில்லாது ஆகி
விடுவாய். அது சரியா.
ஜீவனுக்காக
தாகமாயிருத்தல், 57-0630, பத்தி எண் E-36
அவர்கள்
ஒரு ஜெபக்கூட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுதலை (பயத்தை) உன்னை விட்டு
நீக்குவதற்கு அதுதான் சிறந்த வழியாகும்.
பள்ளத்தாக்கெல்லாம்
வாய்க்கால்களை வெட்டுதல், 56-0728, பத்தி எண் E-5
தேவனுக்கென்று
உன்னைப் பிரதிஷ்டை செய். தேவனுக்கு முன்பாக
ஒவ்வொருவரும் பரிசுத்த ஜீவியம் ஜீவிக்க வேண்டும்.
அப்போது என்ன நடக்கிறது என்று
பாருங்கள். சபை ஒருங்கிணைந்து ஜெபிக்கத்
தொடங்கட்டும், என்ன நடக்கிறது என்று
பாருங்கள்...
யூகித்தல்,
62-0117, பத்தி எண் E-154
அதைக்குறித்து
ஏதோவொன்றிருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.
உத்தமத்தோடு யாரோ ஒருவருக்காக ஜெபிக்கும்
போது, நீங்கள் அறிவீர்கள், அது
அவர்களை ஓய்ந்திருக்கச் செய்யாது... தேவன் ஜெபத்திற்குப் பதில்
அளிக்கத்தக்கதாக, அசைவாடத் தொடங்குவார். சில நேரங்களில் புருஷன்,
எப்போதும் விட அதிக எரிச்சல்
உண்டாக்குகிறவராக இருப்பார், ஆனால் ஒன்றை நினைவுகூருங்கள்,
தேவன் ஜெபத்திற்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அதை எவ்வாறு செய்ய
வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.
சகேயு,
58-0517 B, பத்தி எண் E-18
ஜெபம் ஏறெடுக்க மட்டும் அவர் சொல்லமாட்டார்.
ஆனால் அவர் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார்.
அவர்... பாருங்கள், அவருடைய சொந்த ஜெபத்திற்கு
பதிலளிக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார்.
நியாயத்தீர்ப்பின்
மூலம் மீட்பு, 54-1114, பத்தி எண் E-17
எல்லாமும்
தாறுமாறாகிக் கொண்டு போகிறது, நாம்
ஜெபத்தை நிறுத்த வேண்டும் என்பதற்கு
எந்த அடையாளமும் இல்லை. எப்படியும் நாம்
ஜெபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
மோசேயை
குறித்த போதனை, 56-0513, பத்தி எண் 84
இயேசுவின்
நாமத்தில் தேவனுக்கு முன் போகும் போது,
அது இயேசு, அவரே ஜெபிப்பதற்கு
ஒப்பாக இருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? இனிமேலும்
ஜெபிப்பது நானல்ல... மேலும் இயேசுவின் நாமத்தில்
நான் பிதாவினிடத்தில் போகிறேன். ஜெபிப்பது நானல்ல, அது இயேசுவே
ஜெபிப்பதாகும்.
அது அவருடைய ஆவி என்
மூலமாக ஜெபிப்பதாகும்.
விசுவாசத்தின்
அடிப்படை அஸ்திவாரம், 55-0113, பத்தி எண் E-16
நீர் ஒரே இடத்தில் மட்டும்
வாசம் செய்கிற தேவன் அல்ல,
ஆனால் நீர் எங்கும் நிறைந்திருக்கிறீர்,
ஒரே சமயத்தில் உலகம் பூராவிலும் இருக்கிற
அத்தனை பேருடைய ஜெபத்திற்கும் பதிலளிக்கிறீர்.
கீலேயாத்தில்
பிசின் தைலம், 59-1124, பத்தி எண் E-9
நாம் தேவனிடத்தில் எதையாவது கேட்டால், ஞாபகம் கொள்ளுங்கள், தேவன்
ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார். அதை அவருடைய வேளையில்
செய்கிறார். எவ்வழி சிறந்ததோ, நமக்காக
சரியாக கிரியை செய்கிறார்.
புத்திர
சுவிகாரம் #3, 60-0522 M, பத்தி எண்
16
தேவனுடைய
வேதத்திற்கு முன்பாக இதைக் கூறுகிறேன்;
நான் ஒருபோதும் உத்தமமாய் எதையும் கேட்கவில்லை. ஆனால்
தேவன் அதை எனக்கு அருளுகிறார்,
அல்லது அதை அவரால் ஏன்
செய்யமுடியவில்லை என்பதற்கான காரணத்தைச் சொல்வார். கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்ற முறையில் இதைக்
கூறுகிறேன்.
குருடனான
பர்திமேயு, 61-0124, பத்தி எண் E-40
உன்னை நீயே விசுவாசிக்கும் அளவுக்கு
தேவனித்தில் போதுமான விசுவாசம் உனக்கு
இருக்க வேண்டும். பின்பு உன்னுடைய பிள்ளைகளும்
விசுவாசம் கொள்வார்கள். உன்னை இரட்சித்த அதே
விசுவாசம், உன்னுடைய பிள்ளைகளையும் இரட்சிக்கும். நீ தொடர்ந்து ஜெபித்துக்
கொண்டேயிருந்தால்.
யெகோவா-யீரே, 61-0209, பத்தி எண் E-34
...அவரும்
பிதாவும் ஒன்றாயிருப்பது போல, சபையும், அவரும்
ஒன்றாயிருக்க வேண்டும் என்று இயேசு ஜெபித்தார்...
ஒவ்வொரு சபை உறுப்பினரும், ஒருவருக்கொருவர்
பரிபூரணமாக ஒரே மனதுடன் தேவனுடன்
இணைந்து இருக்கும் போது, தேவன் அவருடைய
சபையில் இருக்கிறார். அப்படிப்பட்ட சபைக்குத்தான் இயேசு வருகிறார். அப்பொழுது
அவருடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும்...
ஒன்றாயிருத்தல்,
62-0211, பத்தி எண் 17
நாம் உதட்டளவில் ஜெபிக்கிறோமே, அது ஜெபம் அல்ல;
நோக்கம் என்னவாக இருக்கிறது, அல்லது
நம்முடைய இருதயத்தில் உள்ளதை தேவன் கேட்கிறவராக
இருக்கிறார். சில நேரங்களில் நம்முடைய
உதட்டளவில் ஜெபிக்கிற ஜெபத்தை அவர் கேட்பதில்லை;
நம்முடைய நோக்கத்தை அவர் கேட்கிறார் – நம்முடைய
இருதயத்தின் நோக்கத்தை அவர் கேட்கிறார்.
கிறிஸ்தவத்தின்
ஆள்மாறாட்டம், 57-0120 M, பத்தி எண்
E-6
எனக்கென்று
எந்த நயமான வழிகளையும் நான்
கொண்டிருக்கவில்லை – காரியங்களைச் செய்வதற்கு. நான் – நான் அப்படியே...
ஜெபத்திற்கு அநேகப் பதில்களைப் பெற்றவனாக
இருக்கிறேன். அதைக் குறித்து நான்
சொல்லக் கூடியதெல்லாம் அதுவே. அவ்விதமே... அவ்விதமே...
என்னுடைய ஜெபத்திற்குப் பதில் அளிப்பதில் தேவன்
எனக்கு நல்ல வராகவே இருந்து
வந்துள்ளார்.
தேவனுடைய
அளிக்கப்பட்ட பாதை, 59-0415 A, பத்தி எண்
E-7
நாம் விசுவாசத்தை இழந்து போவோமானால், தேவனிடத்திலிருந்து
நாம் ஒருபோதும் ஜெபத்திற்குப் பதிலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்.
‘தேவனிடத்தில் வருகிறவன், அவர் இருக்கிறார் என்பதை
முதலாவது விசுவாசிக்க வேண்டும்; அவரை மிகவும் கவனத்துடன்
தேடுகிறவர்களுக்கு, அவர் பலனளிக்கிறார் என்பதையும்
விசுவாசிக்க வேண்டும்.’ ஆகவே நாம் விசுவாசத்தை
இழந்து போனால், நம்முடைய ஜெபம்
பயனற்றது ஆகிவிடும்; எங்கும் எதையும் பெற்றுக்
கொள்ளமுடியாது.
விசுவாசத்தினாலே
மோசே, 58-0720 M, பத்தி எண்
E-16
நம்முடைய
ஜெபத்திற்குப் பதில் கிடைப்பதைப் பார்ப்பது
வரையில், நம்முடைய ஜெபத்தை நிறுத்தக்கூடாது.
எதிர்பார்ப்பு,
61-0207, பத்தி எண் E-17
தாவீது
சொன்னான்: ‘ஆனால், என் இருதயத்தில்
அக்கிரமம் இருக்குமானால், தேவன் என் ஜெபத்தைக்
கேட்க மாட்டார்’ என்று.
அக்கிரமம்
என்றால் என்ன? நீ செய்யக்
கூடாத ஒன்றை, அது தவறு
என்று அறிந்தும் செய்வது; அப்படியிருந்தும் மனந்திரும்பாமல் இருப்பது.
இதோ, சாலமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார், 62-0721, பத்தி எண்
E-86
...உங்களுடைய
பிள்ளைகளுக்காக ஜெபிப்பது, அதன் காரணமாகத்தான் உங்களுடைய
பிள்ளைகள்... சீமாட்டிகளாகவும் பண்புள்ளவர்களாகவும், நாம் வாழ்கிற இந்தக்
காட்டுமிராண்டித் தனமான உலகில், நேர்மையுள்ளவர்களாக
இருக்கிறார்கள்.
உம்முடைய
வீடு, 61-0808, பத்தி எண் E-23
ஒவ்வொரு
நாளும் ஜெபியுங்கள். முதலாவது, அதைக் குறித்து தேவனிடத்தில்
விசாரிக்காமல், துரிதமாக, அதிவேகமாக எந்த ஒரு முடிவையும்
எடுக்காதீர்கள். ‘பிதாவே, நான் இதைச்
செய்யட்டுமா?’ என்று அவரிடத்தில் கேளுங்கள்.
‘நான் இதைச் செய்ய வேண்டும்
என்பது உம்முடைய சித்தமா?’ என்று அவரைக் கேளுங்கள்.
தீர்க்கதரிசியாகிய
எலிசா, 54-0723, பத்தி எண் E-10
ஜனங்கள்
வாசிக்க மாட்டார்கள்; வாசிக்க அக்கறை கொள்ள
மாட்டார்கள். அவர்கள் ஜெபிப்பதில்லை; அவர்கள்
ரொம்பவும் - அவர்கள் செய்வதற்கென்று மற்ற
காரியங்கள் இருக்கிறது. அவர்கள் ஜெபத்திற்கு நேரத்தை
எடுப்பதில்லை. மேலும் பரிசுத்த வேதாகமம்
வாசிப்பது அவர்களுக்கு சோம்பேறித்தனமாக இருக்கிறது...
கண்டும்
காணாதது போல விடப்படும் ஒரு
உண்மையான அடையாளம், 61-1112, பத்தி எண் 40
நீங்கள்
எப்போதாவது, மேகத்தினூடே நடந்து செல் வதைப்
போன்ற உணர்வு வரும் வரைக்கும்,
அப்படிப்பட்ட நிலையை அடைவது வரைக்கும்,
ஜெபத்தில் தரித்திருந்ததுண்டா? அப்போதுதான் நீங்கள் வெளிச்சத்தைப் பெற்றுக்
கொள்கிறீர்கள்.
தேவ ஆவியால் நடத்தப்படுதல், 56-0723, பத்தி எண்
E-35
நாம் ஜெபிக்கத் தொடங்கின நேரத்திலிருந்து, ஜெபத் திற்குப் பதில்
கிடைக்கும் வரைக்கும், நம்முடைய ஆத்துமாவில் பொறுமையைப் பெற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்; ஏனென்றால் பொறுமையின் மூலமாகவே நாம் ஜீவனைச் சுதந்தரிக்கிறோம்.
சபைக்கால
புத்தகம், பிலதெல்பியா சபைக்காலம்
வெளிப்பாட்டின்
ஆவிக்குள் கடந்து செல்ல, அவர்கள்
போதுமான அளவிற்கு ஆழமாகத் தோண்டுவதில்லை. போதுமான
அளவிற்கு ஜெபிப்பதில்லை. போதுமான அளவிற்கு அவர்கள்
தேவனை அழைப்பதில்லை.
குற்றச்சாட்டு,
63-0707 M, பத்தி எண் 265
நாம் தினந்தோறும் ஜெபிக்கவில்லையென்றால், எல்லா நேரமும் இரத்தத்தின்
கீழ் நம்மை வைக்கவில்லையென்றால், உன்னுடைய கிறிஸ்தவ
அனுபவத்தில் உலர்ந்து போய், மரித்துவிடுவாய்.
நீ இதை விசுவாசிக்கிறாயா?, 50-0716, பத்தி எண் E-64
இங்கே ஜனக்கூட்டம் கூடுவதை நீங்கள் காணும்
போது, அது எழுப்புதல் என்று
பொருள்படாது; அது ஒரு ஜனக்கூட்டமே.
ஆனால் எழுப்புதல் என்பது, ஜனங்கள் சரியாக,
உண்மையாகவே தேவனிடத்தில் சீர்பொருந்தி (ஒப்புரவாகி), ஜெபத்தில் தரித்திருப்பதாகும்...
கர்த்தருடைய
தூதன், 51-0718, பத்தி எண் E-16
ஒரு சிறு குழப்பம் சபையில்
உண்டாகும்போது, நீ ஒரு பக்கமாய்
ஓடி சார்ந்து கொள்ளக் கூடாது, அப்போது
உந்தித் தள்ளவும் கூடாது. நீ அதைச்
செய்வாயானால், நீ ஒரு (பாதிரியார்)
மேய்ப்பன் அல்ல என்பது உறுதி.
பாருங்கள், நீ தொடர்ந்து ஜெபம்
பண்ணு. ஆவிக்குரிய தியாகத்தோடு, உதடுகளின் கனிகளால் அவருடைய நாமத்திற்கு துதி
செலுத்தக் கடவாய்.
ஏழு சபை காலங்கள், 54-0512, பத்தி
எண் 82
மற்ற உலகக் காரியங்களிலிருந்து உன்னை
அடைத்துக் கொள், தேவனோடு தனித்திரு.
அவ்வாறு செய்வதை நீ விரும்புவதற்கு
காரணம், ஏனென்றால் முதல் ஜோடிகள் உலகத்தில்
பிரவேசிக்கும் போது, ஆதாமும், ஏவாளும்
அதைத்தான் செய்தார்கள்.
ஐக்கியம்,
56-0212, பத்தி எண் E-24
உங்களுக்குத்
தெரியுமா, நீங்கள் ஜெபிக்கும் போது,
நீங்கள் ஜெபத்திற்குப் பதிலைப் பெறுகிறீர்கள், அப்போது
உண்மையாகவே அதிக, அதிக விசுவாசத்தைப்
பெறுகிறீர்கள்.
மோசேயை
குறித்த போதனை, 56-0513, பத்தி எண் 160
ஒருவருக்காக
ஒருவர் ஜெபிக்கும்படி நீங்கள் கட்டளை யைப்
பெற்றுள்ளீர்கள். ஒருவருக்கு விரோதமாக ஒருவர் பேசும் படி
கூறவில்லை, ஆனால் ஒருவரை ஒருவர்
நீங்கள் நேசிக்க வேண்டும்.
முற்றிலுமான
விடுதலை, 59-0712, பத்தி எண் 53
உங்களைக்
குறித்து ஒருவர் பேசுவதை உங்களால்
தாங்கிக்கொள்ள முடிகிறதா, அவர்களை அதிகமாக நேசிக்கி
றீர்களா, அவர்களுக்காக உங்கள் இருதயத்தில் ஜெபிக்கிறீர்களா?
நாம் உண்மையாகவே யுத்தத்தில் இருக்கிறோம். எல்லா நேரங்களிலும், இதற்கு
முன்பு இருந்ததைக் காட்டிலும், ஒருவருக் கொருவர் நாம் தேவையாயிருக்கிறோம்.
வருகின்ற
புயல், 60-0229, பத்தி எண் 146,
நான் தான், பயப்படாதீர்கள்,
62-0629, பத்தி எண் E-5
ஒருவருக்கொருவர்
ஒருபோதும் தீமையானவைகளைப் பேசாதீர்கள். ஒருவர் ஒரு தவறு
செய்வாரானால், அவருக்காக உடனடியாக ஜெபியுங்கள்.
அடையாளம்,
63-0901 M, பத்தி எண் 243
ஏதாவது
ஒன்றில், யாராவது தவறு செய்தால்,
அவர்களுக் காக ஜெபம் பண்ணுங்கள்.
சுயநலத்தோடு ஜெபிக்காதீர்கள், இவ்விதமாக, ‘அது என் கடமை
என்பதை அறிவேன். அந்தச் சகோதரனுக்காக நான்
ஜெபிக்க வேண்டும்’ என்று கூறாதீர்கள். அதை
உன் இருதயத்திற்கு எடுத்துச் செல்...
உன்னைத்
தாழ்த்து, 63-0714 E, பத்தி எண்
41
இப்பொழுது,
உன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் தவறு செய்வதை நீங்கள்
கண்டால், எங்கே அவர்கள் தவறு
செய்தார்கள் என்பதைப் பாருங்கள். அந்தத் தவறுடன், நீங்களும்
அவருடன் தவறு செய்யாதீர்கள். அவர்களுக்காக
ஜெபியுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள், தேவன் அதைப் புரிந்து
கொள்வார். அவர் எல்லாவற்றையும் சரிப்படுத்துவார்.
கேள்விகளும்
பதில்களும், 61-1015 M, பத்தி எண்
251
நீங்கள்
எங்காவது தேவனோடு இருக்க விரும்பினால்,
கொடூரமான எந்தவொரு ஆவியும் உங்களைச் சுற்றி
வருவதற்கு ஒருபோதும் அனுமதியாதீர்கள்... நீங்கள் பாவியாயிருக்கையில், தேவன்
உங்களை நேசித்தார். தேவனுடைய ஆவி உங்களில் இருந்தால்,
மற்றொருவர் தவறாயிருக்கையில், நீங்கள் அவரை நேசிப்பீர்கள்.
பாருங்கள், அவர்களுக்காக ஜெபியுங்கள். ஒருவரையொருவர் நேசியுங்கள்.
உன்னைத்
தாழ்த்து, 63-0714 E, பத்தி எண்
94
அவருடைய
ஆவியின் மூலமாக ஒரு வெளிப்பாட்டிற்காக
தேவனிடம் ஜெபியுங்கள். அதுதான் முதற்படியாகும்.
சபைக்காலப்
புத்தகம், பத்மு தீவு தரிசனம்
தேவனைக்
கண்டடையும் வழி என்ன தெரியுமா?
தேவனைக் குறித்து தியானித்து, அவரைக் குறித்த நினைவுடையவர்களாயிருக்க
வேண்டும்.
குருடனான
பர்திமேயு, 57-0127 E, பத்தி எண்
E-16
சபைக்குச்
செல்லும் மட்டுமோ அல்லது சாதகமான
நேரம் வரைக்குமே காத்திருக்க வேண்டியதில்லை; எல்லா நேரங்களிலும் அவரை
மனதில் வையுங்கள்.
அற்புதங்களின்
யெகோவா, 59-1126, பத்தி எண் E-22
ஒருவருடைய
ஜீவியத்தில் மகத்தான வேளை எதுவென்
றால், அமர்ந்திருந்து, தியானித்து, சிந்தையிலிருந்து எல்லாவற் றையும் எடுத்துப் போடுதலாகும்.
அதை நீங்கள் செய்வீர்க ளென்றால்,
தேசத்தை சுற்றி எங்கும் அதிக
(அச்சம்) பய மிருக்காது...
குருடனான
பர்திமேயு, 60-0330, பத்தி எண் E-28
...நான்
கிறிஸ்துவின் ஊழியக்காரனாகவும், அதே சமயம் மனிதனுக்கு
ஊழியஞ்செய்கிறவனாகவும் இருக்க முடியாது. ஆகவே
பிரசங்க பீடம் எனக்கு சிறப்பாக
அமைய வேண்டு மானால், நான்
ஜெபத்திலேயே என்னுடைய நேரத்தைக் கழிக்க வேண்டும், தியானிப்பதிலும்
கழிக்க வேண்டும்.
சாலமோனிலும்
பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்,
58-0625, பத்தி எண் E-3
அதனால்தான்
பிரசங்கிமார்கள் பிரசங்கிக்கிறார்கள். ஆகவேதான் அவர் வேதவாக்கியத்தைப் படிக்கிறார்,
அதை தியானிக்கிறார், ஊக்குவித்தலை நாடுகிறார். ஏனென்றால் அவர் தேவனுடைய ஜனங்களுக்குப்
பொதுவான ஒரு ஊழியக்காரர் ஆவார்...
கல்வாரியில்
அந்த நாள், 60-0925, பத்தி எண் 7-3
நீங்கள்
கூடி ஜெபிக்க வேண்டும் என்று
நான் விரும்பு கிறேன்... உலகத்திலேயே மிகச்சிறந்த சபையைச் சரியாக இங்கேயே
உங்களால் – உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். ஜனங்களின் சிறந்த ஐக்கியம்.
அனுபவங்கள்,
47-1207, பத்தி எண் E-25
இப்போது
இருக்கிற குழப்பமான சூழ்நிலையில், அமெரிக்காவிற்கு தேவைப்படும் சிறந்த ஆயுதம் என்னவென்றால்,
அது கர்த்தருக்குப் பயப்படுதலும், ஜெபிக்கிற ஜனங்களும் வேண்டும். அதுதான் சிறந்தது. அது
நம்மால் உற்பத்தி செய்யக் கூடிய பீரங்கிகள்,
குண்டுகள் இவைகளை விட அதிக
விலை மதிப்புள்ளது.
காணக்கூடாதவைகளை
நோக்கிப்பார்த்தல்,
50-0816, பத்தி எண் E-4
அங்கேதான்
அது இருக்கிறது: வாக்குத்தத்தத்தின் வார்த்தையைப் பெற்ற பிறகு ஆபிரகாம்
சோதிக்கப்பட்டான். அனேகர் இவ்விதம் நினைக்கிறார்கள்:
தேவனுடைய நல்ல வாக்குத்தத்தங்களின் பேரில்
இயேசுவின் நாமத்தில் ஜெபித்த உடனேயே அவர்களுக்கு
சோதனைகளே வர முடியாது என்று.
ஆனால், இங்கே, வாக்குத்தத்தத்தைப் பெற்ற
பிறகு, ஆபிரகாம் சோதிக்கப்பட்டான் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
சபைக்காலப்புத்தகம்,
பிலதெல்பியா சபைக்காலம்
நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, இங்கிருந்து கிழக்கே
பார்க்க வேண்டும் என்று நான் எழுந்தேன்.
அப்போது ஒரு தரிசனம் உண்டாயிற்று.
சற்று எனக்கு மேலாக அது
இருந்தது. அந்தத் தரிசனத்தை அனேகர்
அறிவீர்கள். அது கர்த்தராகிய இயேசுவாகும்.
வித்து
பதருடன் சுதந்திரவாளியாய் இருப்பதில்லை, 65-0218, பத்தி எண் 15
அதற்குப்
பிறகு சாபினோ கான்யானில், இப்படிப்பட்ட
ஒரு காலை வேளையில், நான்
ஜெபத்தில் இருக்கும் போது, என்னுடைய கரத்தில்
ஒரு பட்டயம் வந்து விழுந்தது.
‘இது வார்த்தை, இது வார்த்தை என்னும்
பட்டயம்’
என்று சொல்லிற்று.
இது சூரிய உதயம், 65-0418 M,
பத்தி எண் 8
தன் தலைமுடியை வெட்டிக்கொள்ளும் ஒரு ஸ்திரீ தன்
தலையை கனவீனப்படுத்துகிறாள். அதுவுமல்லாமல்... ஒரு ஸ்திரீ குட்டை
முடியுடன் ஜெபம் ஏறெடுப்பது பாவமான
செயல் என்று வேதாகமம் அவ்வாறு
கூறுகிறது, தன் தலையை மூடிக்கொள்ளாமல்,
பொது இடங்களில் ஜெபிப்பது பாவச் செயலாகும்.
இப்பொல்லாத
காலத்தின் தேவன், 65-0801 M, பத்தி எண்
153
தேவனுக்குள்
உயர செல்லும்போது, எல்லாமும் பாவம் நிறைந்ததாகக் காணப்படும்.
பின், சில நேரங்களில், ஜெபத்தில்
நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்,
பரிசுத்தாவியானவர் உன்னை இன்னொரு பரிமாணத்திற்குள்
(sphere)
கொண்டு செல்லும் போது, அனைத்தும் மிகவும்
குழப்பமானதாகத் தெரியும்.
இதை அறியாமலிருக்கிறாய், 65-0815, பத்தி எண் 101
‘கர்த்தாவே,
உம்முடைய வார்த்தையுடன் பொருந்தத் தக்கதாக என்னை மாற்றும்’ என்று
ஜெபம் இருக்க வேண்டும். ‘மாற்றும்’ என்பதாக
அல்ல; ‘உம்முடைய சிந்தையை நான் மாற்றுவேன்’ என்றல்ல, ‘நீர் என் சிந்தையை
மாற்றுவீராக.’ பாருங்கள்? ‘உம்முடைய சித்தத்திற்கு என்னுடைய சிந்தையை மாற்றும்...
கிறிஸ்து
தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகிறார்,
65-0822 M, பத்தி எண் 35
ஒரு தாய் என்ற ஸ்தானத்தில்,
அவளுடைய தாய்மைக்கென்றும், அவளுடைய நல்லொழுக்கத்திற்கும், அவளுடைய புருஷனுக்கும்
செய்ய வேண்டிய ஒரு புனிதமான
பொறுப்பு உண்டு. அது போல,
சபைக்கும் ஒரு புனிதமான பொறுப்பு
உண்டு, அது ஜெபத்திற்கும், வார்த்தைக்கும்,
கிறிஸ்துவுக்கு மாயிருக்க வேண்டும். ஒரு ஸ்திரீ பெற்றிருக்கிற
பண்புகளைப் போல.
கிறிஸ்துவின்
மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு, 65-1125, பத்தி எண் 101
நான் அநேக புத்தி சுவாதீனமில்லாத
சிறு குழந்தைகளை என் ஜெபப்பட்டியலில் வைத்து
அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இரண்டு அங்குலம்
அல்லது மூன்று அங்குலம் நீளம்
உள்ள, ஒரு சிறிய மீனைக்
குறித்த தரிசனம் வந்தது. தூண்டில்
முள்ளும், அந்தச் சிறிய மீனளவிற்கு
பருமனாக இருந்தது. ஆனால் அது என்ன,
தேவன் அப்படிப்பட்ட சிறிய பொருளைக்கூட காண்கிறார்
என்பதையே காட்டு கிறது. பாருங்கள்?
நான் கேள்விபட்டேன், இப்பொழுதோ காண்கிறேன், 65-1127 E
இயேசு அவருடைய ஜெபத்தில், பிதாவினிடத்தில்
ஒன்றே ஒன்றை மட்டுமே கேட்டார்.
அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் பூமியில் செய்த
எல்லா தியாகத்தைக் காட்டிலும், அவர் வாழ்ந்து காட்டிய
ஜீவியம், அவர் நடந்து காட்டிய
பாதை இவைகளைக் காட்டிலும் அவர் ஒன்றைக் கேட்டார்,
‘நான் இருக்கிற இடத்தில் அவர்களும் இருக்க வேண்டும்.’ நம்முடைய
ஐக்கியத்தை அவர் கேட்டார்.
இனி வரப்போகும் காரியங்கள், 65-1205, பத்தி எண் 92
நான் ஜெபிப்பதற்காக, முயற்சி செய்த முதல்
ஜெபத்தை நினைவு கூருகிறேன். ஒரு
காரியத்தை நான் சொல்லக்கூடும்... நான்
– நான் இதற்கு முன் ஒரு
போதும் இதைக் கூறவில்லை. இப்போதே
அதைக் கூற வேண்டும் என்று
நான் உணர்கிறேன். நான் சுடப்பட்டு, தரையில்
விழுந்து மரித்துக் கொண்டிருந்தேன். தேவனிடத்தில் நான் எடுத்துச் செல்ல
வேண்டிய ஒரு விண்ணப்பம் தான்
இருந்தது. ‘கர்த்தாவே, நான் ஒருபோதும் விபச்சாரம்
செய்யவில்லை என்பதை நீர் அறிவீர்’ என்று
மட்டுமே ஜெபித்தேன்.
இனி வரப்போகும் காரியங்கள், 65-1205, பத்தி எண் 130
மரித்து
விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஐந்து பேர்களுடைய மருத்துவ
அறிக்கைகளைக் குறித்த சாட்சி என்னிடம்
உண்டு. அவர்கள் மரித்துக் கிடந்து,
ஜெபத்தின் மூலம் மீண்டும் ஜீவனை
பெற்றுக் கொண்டனர்.
யூகித்தல்,
62-0117, பத்தி எண் E-152
...ஈசாய்
(Jesse)
(தாவீதின் தகப்பன் – தமிழாக்கியோன்) என்பவன் தேவனுடைய மகத்தான
மனிதன். படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக, எல்லாப் பையன்களையும், தன்னைச்
சுற்றிலும் கூடிவரப்பண்ணி, குடும்ப ஜெபத்தை ஏறெடுத்
திருப்பான் என்பதில் சந்தேகமில்லை; ஒரு வேளை புஸ்தகச்
சுருளை வாசித்திருப்பான்; மகத்தான யேகோவாவைப் பற்றிப்
பேசியிருப்பான்...
விடாமுயற்சி
, 62-0520, பத்தி எண் E-29
ஓ, ஒரு செய்தியைக் கேட்பதிலோ
அல்லது மற்றொன்றிலோ, நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால், வெளியே செல்ல விரும்பி,
அவருடன் ஜெபத்தில் நேரத்தை செலவிடுவது, அவருடன்
தொடர்பு கொண்டு ஐக்கியம் கொள்வது,
அவரை நினைவுகூருவது என்பதே சந்தோஷத்தைக் கொடுக்கிறது...
ஆண்டவரை
நினைவு கூருதல், 63-0122, பத்தி எண் 236
(மாற்கு
என்னும் பெயருடைய யோவான் – தமிழாக்கி யோன்.) ஜான் மார்க்
என்பவருடைய வீட்டில் ஒரு ஜெபக் கூட்டம்
ஒழுங்கு செய்திருந்தார்கள். அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த
போது, கர்த்தருடைய தூதனானவர் சிறைச் சாலைக்குச் சென்றார்.
சிறைச்சாலைக் கம்பிகளைத் திறந்தார்; கதவுகளைத் திறந்தார்.
ஒரு முற்றிலுமானவர், 63-0304, பத்தி எண் 103
இசையின்
மூலமாக தேவன் சுகமளிக்கிறார். அன்பின்
மூலமாக தேவன் சுகமளிக்கிறார். பாருங்கள்?
மருந்துகள் மூலமாகத் தேவன் சுகமளிக்கிறார். ஜெபத்தின்
மூலமாக தேவன் சுகமளிக்கிறார். சுகமளிப்பதற்குத்
தேவனிடத்தில் அநேக வழிகள் உண்டு.
உனக்கு எது தேவையோ அதைச்
சார்ந்துள்ளது.
நோக்கிப்
பார், 63-0428, பத்தி எண் 6,7
தேவன் மருந்துகள் மூலமாக சுகமளிக்கிறார். தேவன்
அன்பின் மூலமாக சுகமளிக்கிறார். புரிந்து
கொள்ளுதல் மூலமாக தேவன் சுகமளிக்கிறார்.
அக்கறை கொள்வதின் மூலமாக தேவன் சுகமளிக்கிறார்.
தேவன் ஜெபத்தின் மூலமாக சுகமளிக்கிறார். தேவன்
அற்புதங்களின் மூலமாகச் சுகமளிக்கிறார். இப்படி எல்லாவற்றையும் கொண்டு
தேவன் சுகமளிக்கிறார். அவ்வளவு தான், எல்லாமும்
அதற்குள் இருக்கிறது. அவரே சுகமளிப் பவராக
இருக்கிறார்.
நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவராகிய இயேசு
கிறிஸ்து, 63-0627, பத்தி எண் 85
...நாம்
தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அவை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னுடைய ஜீவியத்தை
நோக்கிப்பார். தேவனுடைய பரிசுத்தத்திற்கு உன்னு டைய ஜீவியம்
ஒத்துப் போகவில்லை என்றால், திரும்பிச் சென்று மறுபடியும் ஜெபிக்கத்
தொடங்கு.
இராப்போஜனம்,
63-0707 உ, பத்தி எண் E-1
அம்ராமுடைய
ஜெபம் அப்படியே சரியாக வேதத்தைச் சார்ந்திருந்தது.
அவர்களுடைய ஜெபம் வாக்குத்தத்தம் பண்ணப்
பட்ட வார்த்தையோடு இருந்தது. அந்தச் சமயத்தில் அதைச்
செய்வதாக தேவன் வாக்குப் பண்ணியிருந்தார்.
அதற்காக அவர்கள் ஜெபித்தார்கள்; அங்கே
சரியான ஒரு குழந்தை பிறந்தது.
முறையிடுகிறது
என்ன? பேசு!, 63-0714 M, பத்தி எண்
66
நான் இந்தக் காலை வேளையில்
அந்த அறிக்கையைக் கொண்டு வந்தது போல,
பேதுருவின் நிழலில் ஜனங்களைக் கிடத்தினார்கள்.
அவர்கள் ஜெபம் பண்ணும்படி ஒருபோதும்
கேட்கவில்லை. நான் அநேக வீடுகளுக்குச்
சென்றுள்ளேன்; இதைக் கவனித்துள்ளேன். போவதற்கு
முன்பாக நான் ஜெபிப் பேன்,
அப்படியே அபிஷேகத்தோடு அங்கே உள்ளே நுழை
வேன்; ஜனங்களுக்காக ஜெபிக்கக்கூட மாட்டேன், கடந்து சென்று விடுவேன்,
அவர்கள் சுகத்தைப் பெறுவார்கள்.
உன்னைத்
தாழ்த்து, 63-0714 E, பத்தி எண்
15,16
சிம்சோன்
ஒரு சரியான ஜெபத்தை ஏறெடுத்தான்.
‘கர்த்தாவே, இந்தச் சத்துருக்களோடு நானும்
மடியட்டும்’ என்று.
ஓ, என்னே!
ஒரு விசை, 63-0804 A, பத்தி எண்
97
இப்போது,
இந்த முழு உலகத்திலும் உள்ளதிலேயே
வலிமை வாய்ந்த ஆயுதத்தை அவர்
நமக்குத் தந்துள்ளார். அது ஜெபம் என்னும்
ஆயுதமே. ஜெபம் என்பது, காரியங்களை
மாற்றிப் போடுவதாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தி
னால் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு
முன்பாக தன் கால்களை முடக்கி
முழங்காலில் நிற்கும் போது, அது எத்தகைய
வல்லமை என்பதைக் கிறிஸ்தவர்கள் உணர்வதில்லை.
என் தூதனானவர் உனக்கு முன்பாக போவார்,
53-0213, பத்தி எண் E-7
...தேவனுடைய
அந்தத் திட்டத்திற்குள் மறுபடியும் செல்லுங்கள்... அவரைக் கண்டடையுங்கள், அதைத்தான்
நாம் செய்ய வேண்டும் என்று
தேவன் விரும்புகிறார். அதைச் செய்வதற்காக எனக்குத்
தெரிந்த ஒரே ஒரு வழி
ஜெபம் செய்தலே. ஜெபமே திறவு கோலாக
இருக்கிறது.
எதிர்பார்ப்பு,
61-0207, பத்தி எண் E-9
பிதாவே,
அழிவுக்குரிய ஒருவன், அவனுடைய கண்களை
மூடி, அவன் இருதயத்தை திறந்து,
உம்மோடு கூடப் பேசுவதற்குக் கிடைத்தது
மகத்தான சிலாக்கியமாகும். நீர் கேட்கிறீர் என்பதை
நாங்கள் அறிவோம். நீர் கேட்கிறீர் என்பதை
நாங்கள் அப்படியே விசுவாசிக்கக் கூடுமானால். ஏனென்றால் இயேசு சொல்லியிருக்கிறார், ‘என் நாமத்தினால்
பிதாவினிடத்தில் நீங்கள் எதைக் கேட்டாலும், அது
உங்களுக்கு அருளப்படும்’ என்று. அது, நாம்
அதில் சந்தேகப்படக் கூடாது என்ற நிபந்தனையோடு
கொடுக்கப்பட்டது.
பிரசவ வேதனைகள், 65-0124, பத்தி எண் 32
நான் வார்த்தையை நேசிக்கிறேன். ஓ, நான் இதை
வெளிப்படுத்தக்கூடும் என்று வாஞ்சித்தேன். நான்
என்னுடைய சிறந்த செய்தியை எங்கே
பிரசங்கித்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வீட்டில் என்னுடைய ஜெப அறையில் அல்லது
வேறு ஒரு இடம், அது
என் படுக்கை. இரவு நேரங்களில் நான்
காத்திருந்து, பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெறுகிறேன்; இரவில் பாதி நேரம்
எனக்கு நானே பிரசங்கம் செய்கிறேன்.
பரிசுத்தவான்களுக்கு
ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட
விசுவாசம், 55-0501 E,
பத்தி எண் E-8
சில நேரங்களில் நாம் பிறருக்காக ஜெபிக்கும்போது,
உங்களுக்குத் தெரியுமா? நாம் தான் அநேக
நேரங்களில் உதவிகளைப் பெறுகிறோம். நீங்கள் பிறருக்காக ஜெபிக்கும்
போது.
ஏன்?,
61-0125, பத்தி எண் E-8
உங்களுக்கு
ஒரு சிறிய இரகசியத்தைக் கொடுக்க
விரும்புகிறேன். கர்த்தர் என்னை மிகவும் ஆசீர்வதித்துள்ளார்.
அவருக்கே நான் துதியை செலுத்துகிறேன்.
வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறேன். இவ்வருடங்களில் எல்லாம் நான் அதைக்
கவனித்து வந்தேன். அது முற்றிலுமான சத்தியம்
என்பதை அறிந்து கொண்டேன். நான்
யாருக்காக ஜெபிக்கப் போகி றேனோ, அந்த
மனிதனோடு சரியான, உண்மையான ஐக்கியம்
கொள்வது வரையிலும், ஒரு போதும், ஒருபோதும்
நான் ஜெபத்தை ஏறெடுக்க மாட்டேன்.
நீங்கள் முழங்கால்படியிட்டு, அந்த நபருடைய நிலைமையை
உணர வேண்டும்.
வெளிப்படுத்தின
விசேஷம், அடையாளங்களின் புஸ்தகம், 56-0617, பத்தி எண் 35
நான் உண்மையிலேயே அதிகாலையில் எழுந்து, காரியங்கள் என்னைக் கலக்குவதற்கு முன்னர்,
நான் ஜெபத்திற்குச் சென்று பகல் எல்லாம்
ஜெபித்துக் கொண்டிருப்பேன்.
மூன்றாவது
முத்திரை, 63-0320, பத்தி எண் 231-4{18}
...இப்போது,
முழுமையாகக் கவனியுங்கள். தேவனு டைய முழு
வார்த்தைக்கும் முழுமையாகக் கீழ்படியுங்கள். அந்த அடையாளத்தைப் பெற்றுக்
கொள்ள தேவன் நம்மை உரிமையுள்ளவர்களாக்கியுள்ளார்.
பின்னர் நாம் ஜெபிக்கும் போது,
நாம் ஜெபத்துடன் சமர்ப்பிக்க நம்மிடம் அடையாளம் கட்டாயம் இருந்தாக வேண்டும். ‘கர்த்தாவே, நான் ஜெபிக்கிறேன், ஆனால்
உண்மையிலேயே அந்த அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை...’
என்று ஜெபிப்போமானால், நல்லது, நீங்கள் அவ்வாறு
செய்யக்கூடாது. அங்கேயே நிறுத்தி விடுவது
நல்லது. பாருங்கள்,... முதலில் முன்னால் சென்று
அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள், பாருங்கள், ஏனென்றால் அந்த அடையாளத்தை வைத்து
தான் உங்களை இன்னார் என்று
அறிந்து கொள்வார். பாருங்கள்? ஆம், ஐயா! நாம்
ஜெபிக்கும் போது, அடையாளத்தை சமர்ப்பித்தாக
வேண்டும்.
அடையாளம்,
63-0901 M, பத்தி எண் 347,348,349
...நாம்
செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் அறிக்கை
யிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க வேண்டும்.
அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள்.
அன்புடன், அன்பில் தான் எனக்கு
நம்பிக்கை வருகிறது, என்னுடைய தவறுகளை
உன்னிடத்தில் அறிக்கை செய்ய முடியும்;
நீங்களும் உங்களுடைய தவறுகளை என்னிடத்தில் அறிக்கை
செய்ய முடியும்; நான் உன்னை மிகவும்
போதுமான அளவு நேசித்து, உனக்காக
ஜெபிப்பேன்; நீங்களும் எனக்காக ஜெபிப்பீர்கள். ஜெபத்திற்குப்
பதில் கிடைக்கும் மட்டும் பயனுள்ள, அக்கறையுள்ள
ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும்.
பதறல்கள்,
63-0901 E, பத்தி எண் 76
கர்த்தராகிய
இயேசுவே, என்னுடைய ஜெபம் இதுதான்: ஜீவியத்தைக்
குறித்த கவலையிலிருந்து நான் திரும்பட்டும். கர்த்தாவே,
நாங்கள் சாதாரண மக்கள் என்றும்
கல்வியறிவற்ற வர்கள் என்றும் நான்
– நான் அறிவேன். உலகப்பொருட்கள் எங்களிடத்தில் அதிகமாக இல்லை. ஆனால்
நாங்கள் உம்மை நேசிக்கிறோம், கர்த்தாவே.
இயேசுவை
நோக்கிப் பார்த்தல், 63-1229 E, பத்தி எண்
313
*****