(கீழ்க்காணும்
வீடியோவில் சகோ. டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள்
தாம் பரலோகத்தைத் தரிசித்ததாகவும், அங்கே தேவ மனிதர்களைச்
சந்தித்து அவர்களிடம் பேசினதாகவும் கூறுகிறார். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டு தீர்க்கதரிசியாகிய வில்லியம் பிரன்ஹாம் அவர்களை தாம் பரலோகத்தில்
சந்தித்ததாக கூறுகிறார். இந்த வீடியோவின் தமிழாக்கம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)
சகோ. டி.ஜி.எஸ்.
தினகரன்:
எனவே அப்படிப்பட்ட நேரங்களில், கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர்கள் என்னோடு பேசும்படி செய்தார்.
பெரும்பாலான
அப்போஸ்தலர்களும், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள்
ஒவ்வொருவரும் என்னைத் தைரியப்படுத்தும் வார்த்தைகளை
மாத்திரமே கூறினார்கள். அவர்கள் எல்லா நேரமும்,
‘கவலைப்படாதே’
என்றும், ‘விட்டு விடாதே’ என்றும்,
‘இந்தக் குறிப்பிட்ட ஊழியத்திற்காகவே கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டுள்ளார்.
இதைச் செய். அவர் உன்னை
வழிநடத்துவார்’
என்றனர்.
நான் ஒருமுறை சகோதரன் வில்லியம்
பிரன்ஹாம் அவர்களை சந்தித்தேன், அவர்
தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதர். அவர்
வழக்கமாக என்னிடம் தேவன் அவரை எப்படி
உபயோகித்தார் என்று கூறுவார்.
அச்சமயம்
என்னுடைய ஊழியத்தின் திருப்பு முனையாக இருந்தது. நான்
ஜனங்களுக்காக விசுவாசத்தோடு ஜெபித்த போது, அந்த
ஜனங்களுடைய பெயர்களையும், சிலசமயங்களில் எங்கே அவர்கள் தவறு
செய்திருக்கிறார்கள் என்றும், மேலும் அதைக் குறித்த
விவரங்களையும், அந்தப் பெரிய கூட்டத்தில்
அவர்கள் எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்றும் கர்த்தர் என்னிடம் காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
அது இந்திய கிறிஸ்தவ வரலாற்றில்
முன்னெப்போதும் இல்லாத ஒரு காரியமாக
இருந்தது. எனக்கும் கூட அது புதிதாகவே
இருந்தது. கர்த்தர் அவர்களுடைய பெயரைக் கூறுவதைக் குறித்து
நான் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.
இவ்வாறு
அதைக் குறித்து பயந்த நேரங்களில் கர்த்தர்
வில்லியம் பிரன்ஹாம் என்று அழைக்கப்பட்ட அந்த
மனிதரை அழைத்து வந்தார்.
அவர் (சகோ. பிரன்ஹாம்) என்னைத்
தைரியப்படுத்தி, ‘சகோதரனே, பயப்பட வேண்டாம். அது
இந்தவிதமாக மாத்திரமே வரும், அதையே கூறுங்கள்,
அதை கூறுங்கள், அதைக் கூறுங்கள்’ என்றார்.
நான் அநேக வேளைகளில் அவரைக்
கண்டேன்.
அதற்குப்
பிறகு மாத்திரமே, நான் அவருடைய புத்தகங்களையும்,
அவரின் ஜீவிய சரிதையையும் வாசித்தேன்.
ஓ, அவருடைய ஜீவியம் அற்புதமான
ஒரு ஜீவியமாக இருந்தது, அவர் தேவனால் தெரிந்து
கொள்ளப்பட்டவர். அவருடைய அற்புதமான ஜீவியத்தோடு
என்னை ஒப்பிடவே முடியாது.
No comments:
Post a Comment