செஞ்சிலுவை
சங்கத்தை நிறுவிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்
என்பவரின் கொள்ளுப் பேத்தியின் பெயரும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்.
இந்தக் கொள்ளுப்பேத்தியின் புகைப்படத்தை நீங்கள் புத்தகத்தில் கண்டிருக்கிறீர்கள்.
புற்று நோய் அவளைத் தின்று
விட்டிருந்தது. அவளுடைய எடை முப்பது
பவுண்டு மாத்திரமே. அவளை ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு
அழைத்து வந்தனர். அவள் பதறல் கொண்டிருந்தாள்.
சகோதரன் பாஸ்வர்த் “எங்களால் ஆப்பிரிக்காவுக்கு வர இயலாது” என அவளுக்கு கடிதம்
எழுதியிருந்தார்.
அவள் தன் தாதி (nurse)
யைக் கொண்டு இவ்விதம் எழுதியிருந்தாள்.
“என்னால் அசைய முடியவில்லை. என்னால்
முடியவில்லை.” அந்த புகைப்படத்தை கண்டிருக்கிறீர்கள்.
நாங்கள் ஒரு துண்டை மேல்
வைத்து அந்த இடத்தை மறைத்து
விட்டோம். ஒரு சிறு கயிறு
மாத்திரமே அதைச் சுற்றிலும் புகைப்படத்தில்
காணப்படுகிறது. அவளுடைய உடல் அரை
நிர்வாணமாயிருந்தது. அதை அப்படியே புத்தகத்தில்
பிரசுரித்தால் யாராவது எங்களை குற்றப்படுத்துவார்
என்று எண்ணி சிறு துண்டை
வைத்து அந்தப் பாகத்தை மறைத்து
விட்டோம். அவளுடைய இடுப்பைச் சுற்றிலும்
ஒரு கந்தை துணி, அல்லது
துவாலை, உண்டாயிருந்தது. இடுப்பிற்கு மேல் ஒன்றுமேயில்லை. எனவே
ஒரு காகிதத் துண்டை அந்தப்
புகைப்படத்தின் மேல் வைத்து, அந்த
பாகத்தை மறைத்து விட்டு மறுபடியும்
புகைப்படம் எடுத்து அதைப் பிரசுரிக்கத்
தீர்மானித்தோம். ஏனெனில், அநத புகைப்படத்தை அப்படியே
புத்தகத்தில் வெளியிட்டிருந்தால், சரியான விதத்தில் ஆலோசிக்க
முடியாதவர்கள் என் மீது குற்றம்
கண்டுபிடித்திருப்பார்கள்.
அவளை எக்காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாது என்று மருத்துவர்
கூறியிருந்தார். நான் இங்கிலாந்துக்கு விஜயம்
செய்யப் போகின்றேன் என்று அவள் கேள்விப்பட்டவுடனே,
அவளை ஒரு ஸ்ட்ரெட்சரில் படுக்க
வைத்து, விமான மார்க்கமாக லண்டனுக்கு
கொண்டு வந்தனர். அங்கிருந்து பக்கிங்காம் அரண் மனைக்கு அவளைக்
கொண்டு செல்ல ஒரு காப்பாளன்
(Guard) விமான நிலையத்திற்கு வந்திருந்தான்.
அவளுக்காக ஜெபம் செய்ய வரும்படி
என்னிடமும் காப்பாளன் ஒருவனை அனுப்பியிருந்தனர். அவள்
பேசவும் முடியாதபடிக்கு அவ்வளவு மோசமான நிலையில்
இருந்தாள். அவளுடைய கை என்
கையைப் பிடித்துக்கொள்ள யாராவது ஒருவர் அதை
தூக்கிவிட வேண்டியதாயிருந்தது.
லண்டன்
எப்படியென்று உங்களுக்குத் தெரியும். இராணுவத்தில் பணிபுரிந்த உங்களில் சிலர் அங்கு சென்றிருக்கிறீர்கள்.
அது எப்பொழுதும் பனியால் மூடப்பட்டிருக்கும். நான்
ஜன்னல் பக்கம் முழங்காற்படியிட்டு.... அவள் கண்களிலிருந்து
கண்ணீர் வழிந் தோடியது.... கண்ணீர்
சிந்த போதுமான ஈரப்பசை எவ்விதம்
உண்டாயிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
அவள் சருமம் மூடப்பட்ட எலும்புக்கூடாய்
காட்சியளித்தாள். அவள் கால்கள் இடுப்பில்
சரியாக பொருந்தவில்லை. இரண்டு மூன்று அங்குலம்
இடைவெளி உள்ளது போல் தோன்றினது.
அவளுடைய இரத்தக் குழாய்கள் முழுவதும்
சுருங்கிப் போய் இயங்காமலே இருந்தன.
அவள் எப்படித்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாளோ
என்று எனக்குத் தெரியவில்லை. அவள் சுகம் பெற்ற
பின்பு எடுத்த புகைப்படத்தையும் நீங்கள்
கண்டிருக்கிறீர்கள்.
அவள் படுக்கையினருகில் நான் முழங்காற்படியிட்டேன். அவள் பதறும்
நிலையில் இருந்தாள். என்னால் வரமுடிந்தாலும் முடியாவிட்டாலும்,
அவளை எப்படியாயினும் கொண்டு வரத் தீர்மானித்திருந்தனர்.
நான் அங்கு சென்றேன்,
மரிக்கும் தருவாயிலிருந்த அந்த ஏழை சிறுமியின்
விசுவாசத்தைக் கண்டபோது, என் மனம் நொந்தது.
என்னால் இயன்றவரை, என் முழு இருதயத்தோடும்
அவளுக்காக ஜெபித்தேன். நான் ஜெபம் செய்யத்
தொடங்கிய போது, ஒரு வெண்புறா
பறந்து ஜன்னலின் வழியாக உள்ளே வந்து
கூவிக் கொண்டே இங்குமங்கும் நடந்து
கொண்டிருந்தது. அது யாரோ வளர்க்கும்
புறா என்று எண்ணியிருந்தேன். நான்
இங்கிலாந்தை யடைந்து ஒரு மணி
நேரம் கூட அப்பொழுது ஆகவில்லை;
விமான நிலையத்திலிருந்து நேரடியாக அங்கு சென்று விட்டேன்.
அது வளர்க்கும் புறா என்று எண்ணினேன்.
நான் ஜெபத்தை முடித்துக் கொண்டு
எழுந்து “ஆமென்” என்று சொன்ன போது
அது பறந்து சென்று விட்டது.
அந்த புறாவின் சத்தத்தைக் கேட்டார்களா என்று அங்குள்ள சகோதரர்களிடம்
வினவினேன். அவர்களும் அதைக் குறித்துதான் அப்பொழுது
பேசிக் கொண்டிருந்தனர். “அந்த புறா வந்ததன்
அர்த்தம் என்னவென்று தெரியுமா?” என்று நான் கேட்க
ஆரம்பித்தபோதே, “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ உயிர் வாழ்வாய்,
சாக மாட்டாய்” என்னும் வாக்குத்தத்தம் என்னில்
தோன்றியது. அவள் இன்றைக்கும் உயிர்
வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ஏன்? பதறல். அந்தப்
பதறல் அவளைத் தீர்மானம் கொள்ளச்
செய்தது - உயிர் வாழ்வது அல்லது
மடிவது என்று. நான் அங்கு
அடைந்த அதே சமயத்தில் அவளும்
வந்து சேர பதறல் ஒழுங்கு
செய்தது. தேவன் அடையாளமாக வெண்புறா
ஒன்றை அனுப்பி, “கர்த்தர் உரைக்கிறதாவது”
என்னும் வாக்குத்தத்தத்தை அருளினார் – பதறல்
பதறல்,
செப்டம்பர் 1, 1963, பத்தி எண் 128-132
~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment