Monday, 15 January 2018

தன்னுடைய விதியை ஜெப அட்டையில் எழுதி வைத்த மனிதன்



(சகோ. பிரன்ஹாம் தாம் பேசின மூவகை விசுவாசிகள் என்ற தலைப்பில் கீழ்வரும் சம்பவத்தைக் கூறுகிறார்)
--------------------------

                   அன்றிரவு நடந்த கூட்டத்தில் மேடையின் மேல் வந்த அந்த மனிதனின் காரியத்தை குறித்து உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று எண்ணுகிறேன். ஜெப அட்டைகளைக் குறித்தக் காரியம் ஒரு மனோவசியம் என்று அவன் எண்ணியிருந்தான். அதை சோதித்தறிவதற்கு அவனுக்கு எல்லா உரிமையுமிருந்தது என்றும் அவன் எண்ணியிருந்தான். இந்த மனிதன் முழு சுவிசேஷத்தையும் விசுவாசியாத ஓர் ஸ்தாபனத்தின் அங்கத்தினன். அவன் என்னை சோதித்தறியும்படி மேடையின் மேல் வந்தபோது, நான் மிகவும் களைத்தவனாயிருந்தேன்ஊழியர்கள் என்னை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.

                   அது ஒண்டாரியோவிலுள்ள வின்ட்சர் என்னுமிடத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் டெட்ராய்ட் என்ற இடத்திலிருந்து வின்ட்சர் இடத்திலுள்ள ஒரு பெரிய அரங்கம்.

                   இந்த மனிதன் மங்கின நிறமுடைய உடையும் சிகப்பு கழுத்துப்பட்டையும் அணிந்தவனாக அங்கு மேடையில் வந்தான். அவன் மிகவும் சாமர்த்தியமுள்ளவனாய் காணப்பட்டான்அப்பொழுது நான் அவனை நோக்கி, ‘நல்லது, ஐயா நான் உம் கையை பிடிக்க அனுமதிப்பீராக. நான் அநேக தரிசனங்களைக் கண்டு மிகவும் களைத்தவனாயிருக்கிறேன்என்று கூறினேன்அவன் தன் கரத்தை என் கரத்தில் வைத்தான். அப்பொழுது நான் அவனை நோக்கி, ‘ஐயா, உங்களுக்கு எந்த வியாதியும் இல்லைஎன்று கூறினேன்அதற்கு அவன், ‘! எனக்கு இரண்டு வியாதியுண்டுஎன்று கூறினான்.

                   அதற்கு நான், ‘எங்கே நான் மறுபடியும் பார்க்கட்டும்என்று கூறி அவனுடைய கையைப் பிடித்து பார்த்துவிட்டு, ‘இல்லை ஐயா வியாதிக்குரிய அடையாளங்கள் காணப்படவில்லை. ஆகவே, நீ ஒரு சுகதேகியானமனுஷன் என்றேன்.

                   அதற்கு அவன், ‘என்னுடைய ஜெப அட்டையில் என்ன எழுதியிருக்கிறதென்று வாசியும்என்று கூறினான்.

                   அப்பொழுது நான், ‘ஜெப அட்டையில் நீர் என்ன எழுதி வைத்திருந்தாலும், அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. ஜெப அட்டைக்கும் என்னுடைய ஊழியத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லைஎன்று கூறினேன். நான் ஒன்றையும் அறியாதவனாக இவ்விதம் கூறிக்கொண்டிருந்தேன். மேலும் நான் மிகவும் களைத்து சோர்ந்து போயிருந்தேன். ஆனால் தேவனுடைய கிருபையானது இன்னுமாக இங்கிருந்தது என்று ஞாபகம் கொள்ளுங்கள்.

                   அவர் உன்னை அனுப்புவாரென்றால், உன்னை முற்றிலுமாக காக்க வேண்டியது அவருடைய பொறுப்பாகும். அது என்னுடைய காரியம் அல்ல. அவரே அதன் காரணர். அவரே என்னை அனுப்பினார்சத்தியம் எதுவோ அதற்காக மட்டும் நிற்பதே என்னுடைய வேலையாகும்.

                   மோசே தன்னுடைய கோலை அங்கே போட்டபொழுது அது சர்ப்பமாயிற்று. மந்திரவாதிகளும் அதே காரியத்தை செய்தனர். தேவனுடைய கிருபைக்காக மோசே அங்கு காத்து நிற்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்க முடியும்? அவ்வளவே, அவன் அவருடைய கற்பனைகளை கைக்கொண்டான். பின்பு நடந்த சம்பவம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமல்லவா? பாருங்கள்.

                   அதுபோலத்தான் இச்சம்பவமும். இந்த மனிதன் அங்கு நின்று கொண்டு, ‘என்னுடைய ஜெப அட்டையை பாரும்என்று கூறினான்.

                   அதற்கு நான், ‘நல்லது, நீங்கள் அதிக விசுவாசத்தையுடையவராயிருந்திருக்கின்றீர், ஆகவே உம் வியாதிகள்  சுகமாக்கப்பட்டிருக்கும்என்று எதையும் யோசியாதவனாய் கூறினேன்.

                   இதை நான் கூறினவுடனே அந்த மனிதன் தன் மேற்சட்டை பொத்தானை கழற்றி, தன்னுடைய நெஞ்சை முன்னுக்குத் தள்ளி சபையோர்களிடம் திரும்பி, ‘எல்லோரும் இங்கே கவனியுங்கள்என்றான்.

                   அப்பொழுது நான், ‘இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறதுஎன்று யோசித்தேன்

                   அவன் அவ்விதம் சபையாரின் கவனத்தைத் திருப்பி, ‘இங்கே நடக்கும் தந்திரத்தைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டான். (அதுதான் யூதாஸின் ஆவி - இவன் ஒரு பயபக்தியுள்ள மனிதனாகவும் ஒரு ஸ்தாபனத்தின் பிரசங்கியாயுமிருந்தான்).

                   அவன் மேலும் தொடர்ந்து, ‘எனக்கு அதிக விசுவாசம் இருக்கிறது என்று இவர் கூறுகிறார்இவர் அதிகமாக பெலவீனப்பட்டு விட்டதினால் மனோவசியம் செய்ய முடியவில்லைஇனிமேலும் மனோவசிய சக்தி இவரிடம் போவதில்லை. என் வியாதிகள் என்னவென்று நான் ஜெப அட்டையில் எழுதியிருக்கிறேன். அதிலுள்ளதைக் கூட இவரால் கூறமுடியவில்லை. இது ஒரு ஏமாற்றுவித்தைஎன்று கூறினான்.

                   அப்பொழுது நான், ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே தேவனுடைய கிருபையானது தாழ இறங்கி வந்தது.

                   அப்பொழுது நான் அவனைப் பார்த்து,  ‘ஐயா, தேவனை ஏமாற்றும்படி சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?’ என்று கேட்டேன். அவன் ஒரு நவநாகரீக யூதாஸôயிருந்தான்.

                   நான் மேலும் அவனை நோக்கி, ‘அமெரிக்காவிலுள்ள கிறிஸ்து சபை (Church of Christ)யில் நீ ஒரு பிரசங்கியாயிருக்கிறாய். அதோ அங்கே நீல நிற உடையணிந்தவருடனும், அவருடைய மனைவியுடனும் அமர்ந்திருப்பது உன் மனைவியாகும். கடந்த இரவு நீங்கள் ஒரு மேஜையின் முன்பு அமர்ந்திருந்தீர்கள். அந்த மேஜையின் மேல் போட்டிருந்த விரிப்பின் நிறம் பச்சை. இந்த ஊழியமானது மனோவசிய சக்தியினால் செய்யப்படுகிறதா என்பதை சோதித்தறியும்படி நீங்கள் தீர்மானித்ததின் பலனாக நீ இந்த இரவிலே இங்கு வந்திருக்கிறாய்என்று கூறினேன்.

                   அதற்கு அந்த மனிதன், ‘நீங்கள் கூறினது உண்மையும் சத்தியமுமாயிருக்கிறது. கர்த்தர் என் மேல் கிருபையாயிருப்பாராகஎன்றான்.

                   நான் மேலும் தொடர்ந்து, ‘ஐயா, அந்த ஜெப அட்டையில் நீர் காசநோய் என்றும், புற்று நோய் என்றும் எழுதியிருக்கிறீர்; அந்த இரண்டு வியாதிகளையும் இந்த கணமே நீர் பெற்றுக் கொள்கிறீர், அது உமக்குச் சொந்தமானதுஎன்று கூறினேன்.

                   அப்பொழுது அந்த மனிதன் என்னுடைய கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, ‘நான் அவ்விதம் நோக்கம் கொள்ளவில்லை. ‘ஐயாஎன்று கதறினான்.

                   அதற்கு நான், ‘என்னால் எந்தவித உதவியும் செய்ய முடியாது... நீங்கள் போகலாம், இது உமக்கும் தேவனுக்குமிடையேயுள்ள காரியம். உம்முடைய அழிவை நீரே ஜெப அட்டையில் எழுதிவிட்டீர்என்று கூறினேன். அந்த இரண்டு வியாதிகளும் அவனை பிடித்துக் கொண்டது. அதுவே அவனுடைய முடிவாயிற்று.

செய்தி: மூவகை விசுவாசிகள், நவம்பர் 24, 1963, பத்தி எண் 203-218

~~~~~~~~~~~~

No comments:

Post a Comment