சில வாரங்களுக்கு முன்பு நான் மலைக்குச்
சென்றிருந்தேன். நான் வீடு திரும்பும்போது
நாங்கள் (நானும் என் குடும்பமும்)
சிறிது இளைப்பாற அங்கு சென்றிருந்தோம். கர்த்தருக்கு
சித்தமானால், அடுத்த வாரம் மீண்டும்
அங்கு செல்வோம். அங்கு ஒரு இரவு
நான் தரிசனம் கண்டேன். அந்த
தரிசனத்தில் ஒரு அழகான பெண்
ஓடுவதைக் கண்டேன். அவள் கையை இங்கு
வைத்திருந்தாள். அவள்
விழுந்து மரித்துப் போனாள். கர்த்தருடைய தூதன்
என்னிடம், “இதை குறித்து நீ
கேள்விப்படும்போது, அவள் தற்கொலை செய்து
கொண்டதாக அவர்கள் கூறுவார்கள். ஆனால்
அவள் மாரடைப்பினால் இறந்தாள். இப்பொழுது ஏறக்குறைய 4.00 மணி. நீ 4 மணி
என்று சொல்”
என்று சொல்லி, என்னை விட்டுப்
போய்விட்டார்.
அந்த மாட்டு முகாமில் தங்கியிருந்த
என் குடும்பத்தை (மாடு மேய்ப்பவர் தங்குமிடம்,
அங்கு தான் நாங்கள் புல்மேயும்
மாடுகளை வளைத்து ஓட்டிக் கொண்டு
வருவது வழக்கம்) நான் அப்பொழுது எழுப்பவில்லை.
அவர்கள் காலை வரைக்கும் உறங்கும்படி
விட்டு விட்டு, அன்று காலை
அவர்களிடம், “ஒரு அழகான பெண்,
மிகக் கவர்ச்சியுள்ளவள் மாரடைப்பினால் இறந்து விடுவாள்” என்றேன். இரண்டு
நாட்கள் கழித்து நாங்கள் சாலையில்
சென்று கொண்டிருந்த போது, வானொலியில், குமாரி
(அவள் பெயர் எனக்கு ஞாபகம்
வரவில்லை) மன்ரோ, திருமதி மன்ரோ.
அது அவள் நடிப்புக்காக வைத்துக்
கொண்ட புனைப்பெயர் (stage name) வேறெதோ ஒன்று. அவள்
இறந்து போனாள். அவள் தற்கொலை
செய்து கொண்டதாக அவர்கள் கூறினர்.
நான் எவ்வளவு கூறினாலும் உபயோகமிராது.
அவர்கள் அப்பொழுதும் அவள் தற்கொலை செய்து
கொண்டதாகத் தான் கூறுவார்கள். ஆனால்
அந்த பெண் தற்கொலை செய்து
கொள்ள வில்லை. அவள் மாரடைப்பால்
இறந்து போனாள். நீங்கள்
கவனித்திருப்பீர்களானால், அவள் கை - தொலைபேசியின்
அருகில் செல்ல முயன்றாள். தொலைபேசி
அவள் கையிலிருந்தது. அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தூக்க மாத்திரைகள் அங்கிருந்ததாக
அவர்கள் கூறினர். அவள் அந்த மாத்திரைகளை
ஒரு மாத காலமாக (பாருங்கள்)
அல்லது அதற்கும் அதிகமாக உட்கொண்டு வந்திருக்கிறாள்.
அவள் மாரடைப்பினால் இறந்து போனாள். 4 மணி
அடிக்க நான்கு அல்லது ஐந்து
வினாடிகளுக்கு முன்பு அவள் இறந்து
போனாள்.
அவளுடைய
வாழ்க்கை வரலாற்றை ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.
அவள் எப்படி... அவள் முறை தவறிப்
பிறந்தவள். அவள் தன் ஜீவனுக்காக
பாத்திரங்களைக் கழுவினாள். அவளுடைய தாய் பைத்தியக்காரக்
விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். அவள் ஆவல் கொண்டாள்
(அவள் உலகிலேயே மிகச் சிறந்த உடலமைப்பை
கொண்டிருந்தவள் என்று நினைக்கிறேன்) - பணத்தால்
விலைக்கு வாங்க முடியாத ஏதோ
ஒன்றைப் பெற அவள் விழைந்தாள்.
“ஓ, அவளை நான் சந்தித்திருந்தால்
நலமாயிருக்கும். அவளுடைய தேவை என்னவென்று
எனக்குத் தெரியும்”
என்று எண்ணினேன். பார்த்தீர் களா?
ஒருக்கால்
புகழ் பெற்ற, சிறந்த சபைகளின்
அங்கத்தினர்கள் - எல்லா பளிங்கும் பகட்டும்
கொண்ட ஹாலிவுட்... அவர்கள் அப்படிப்பட்டவர்களைக் கண்டுள்ளனர்... அவளைக்
காட்டிலும் வித்தியாசமான வாழ்க்கை சபை அங்கத்தினர்கள் வாழவில்லை
என்பதை அவள் கண்டாள். உங்கள்
வாழ்க்கை மற்றவர்களில் பாதிப்பை உண்டாக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின்
வல்லமை ஜனங்களிடையே காணப்பட்ட, மற்றவர்கள் கிறிஸ்துவை தொங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு விக்கிரகமாக
காணாமல், அவர் பரிசுத்த ஆவியின்
ரூபத்தில் இருக்கின்ற ஜீவிக்கின்ற ஒன்றாக அவர், மனத்திருப்தியையும்,
சந்தோஷத்தையும் அளிக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து
கொள்ள வேண்டும். ஓ, அந்த இளம்
பெண் இவ்வுலகத்தை விட்டுப் போவதற்கு முன் நாம் மாத்திரம்
அவளை சந்தித்திருந்தால்!
வேறொருவரால்
விளையும் பாதிப்பு, அக்டோபர் 13, 1962, பத்தி எண் 52-56
~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment