Monday, 15 January 2018

ஒரு குடிகாரி இரட்சிக்கப்பட்டாள்



~~~~~~~~~~~~~~~

108. நான் சிகாகோவிலுள்ள ரோஸல்லா கிரிஃபித்தைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன் (அவளுடைய புத்தகமானது இப்பொழுது வெளிவந்துள்ளது), மகத்தான ஆல்கஹாலிக் அனானிமஸ் சங்கத்தாரும் (Alcoholics Anonymous) அவளைக் கைவிட்டிருந்தனர். (இந்த சங்கத்தார் மருந்துகளின் மூலமாக ஜனங்கள் குடிப்பழக்கத்தை விட வேண்டுமென்று அப்படிப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் கிளை சென்னையிலும் கூட உள்ளதுமொழிபெர்ப்பாளர்.) அவள் அந்த அளவு மிக மோசமான நிலையில் கூட்டத்துக்கு வந்திருந்தாள். சிகாகோவிலுள்ள ஏறக்குறைய ஆறு அல்லது எட்டு பிரபலமான மருத்துவமனைகள் அவளுடைய பெயரை புத்தகத்தை விட்டு நீக்கி, ‘வர வேண்டாம் என்று கூறியிருந்தன. அவளுடைய தாயார் அவளுக்குக் கொடுத்திருந்த ஒரு கோட் மாத்திரமே அவளிடம் மீதியாக இருந்தது, இப்படிப்பட்ட ஒரு மிகவும் கீழான நிலையில் இருந்தாள்; அவளுடைய மது பாட்டில்களை வைப்பதற்காக அந்த கோட்டை அவள் உள்ளாக வெட்டியிருந்தாள், அப்படிப்பட்ட ஒரு குடிகாரியாக அவள் இருந்தாள். அவள் மரணத் துக்கு பயப்படாமல், இரவு நேரத்தில் சாக்கடைகளில் படுத்திருப்பாள். அவள் புத்திசாலித்தனமான, கல்வியறிவு பெற்ற, பரிதாப மான அருவருப்பான கிழவி போன்ற தோற்றம் கொண்டவளான ஒரு வாலிப பெண்ணாக இருந்த அவள் (கூட்டத்திற்கு வந்து) பால்கனியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். நாங்கள் அதோ அங்கே மேலே இந்தியானாவில் ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தோம், அவளுக்காக அக்கறை கொள்ள யாருமில்லை. அவள் யாரென்பதை அவர்கள் அறிவார்களானால், அவர்கள் அவளை விட்டு விலகி பின்னால் சென்று விடுவர்.

109. ஆனால் இயேசு அக்கறை கொண்டார். அவர் என்னைச் சுற்றி அசைவாடி, ‘அதோ அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணின் பெயர் ரோஸல்லா கிரிஃபித் என்பதாகும். அவள் ஒரு குடிகாரி. குடிப்பழக்கத்தை மாற்றும் சங்கங்களினால் அவள் கைவிடப்பட்டிருக்கிறாள், அவர்களால் அவளுக்கு எதுவுமே  செய்ய முடியவில்லை. எனவே எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. ஆனால் அவள் அவர் மேல் விசுவாசம் கொண்டிருக்கிறாள்: கர்த்தர் உரைக்கிறதாவது, இந்த மணி நேர முதற் கொண்டு இனிமேல் அவள் குடிகாரியல்ல என்றார். இப்பொழுது அவள் ஒரு இனிமையான, அன்பார்ந்த ஒரு கிறிஸ்தவளாக இருக்கிறாள். அநேக இடங்களிலும், இரவு கேளிக்கை விடுதிகளி லும், சிறைச்சாலைகளிலும் குடிகாரர்களை இரட்சிக்கும்படி அவள் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறாள்.

110. இயேசு அக்கறை கொள்கிறார், எனவே அப்படியே உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். உங்களுடைய துக்கங்களில், அவர் விசாரிக்கிறார். நீங்கள் உங்கள் அன்பார்ந்தவர்களை இழக்கும் போது, அவர் கவலை கொள்கிறார்; கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்காக அவர் அக்கறை கொள்கிறார்.

செய்தி: அவர் உங்களை விசாரிக்கிறவர், 60-0301

~~~~~~~~~~~~~

HE.CARETH.FOR.YOU_  PHOENIX.AZ  V-14 N-5  TUESDAY_  60-0301

108    I think of little Rosella Griffin in Chicago (her book's coming out now), that came into the meeting so vile till the--the great Alcoholics Anonymous had turned her down. And about six or eight famous hospitals of Chicago had wrote her name off the book, "never to come" there. Even till she was so low, until the only thing she had left was a coat that her mother give her; she cut it on the inside to put her bottles down into there, such an alcoholic, that she might not freeze to death, laying in the gutters at nighttime. A young woman, smart, educated, miserable hag setting in the balcony, up yonder in Indiana where we was having a meeting, no one seemed to care. If they knowed who it was, they moved back from her.

  109    But Jesus cares. He moved me around, and said, "The woman sitting yonder, her name is Rosella Griffin. She's an alcoholic. She's been give up by the 's-Anonymous, and they can't do nothing for her. And so all hopes is gone. But she has believed on Him: "THUS SAITH THE LORD. From this hour on, no more alcohol." And now she's a sweet, loving Christian; from place to place, and from dive to dive, from jail to jails, preaching the Gospel to save alcoholics.

Jesus cares, so just cast your cares upon Him. In your sorrow, He cares. When you lose your loved ones, He cares; He cares for the dead, those who have died in Christ.

~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment