Monday, 15 January 2018

அமெரிக்காவில் பெண் ஜனாதிபதி




(அமெரிக்காவில் பெண் ஜனாதிபதி எழும்புவாள் என்று தீர்க்கதரிசியாகிய சகோ.பிரன்ஹாம் முன்னுரைத்துள்ளவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்.)
-------------------------------------

ஆனால் சற்றே இதை ஞாபகம் கொள்ளுங்கள். நாம் (அமெரிக்கா) நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்பு ஒரு ஸ்திரீ ஜனாதிபதியாயிருப்பாள் என்று நான் முன்னறிவிக்கிறேன். அது உண்மை. நான் ஒரு தரிசனத்தின் மூலமாக 1933-ம் ஆண்டில் அதைக் கூறினேன்.
ஆபிரகாமோடு தேவனுடைய உடன்படிக்கை, 56-0428, பத்தி எண் E-44

ஸ்திரீகளின் ஒழுக்க நெறி குறைந்து கொண்டே போகும் என்றும், தேசமும் விழுந்து கொண்டே இருக்கும் என்றும், ஸ்திரீ போற்றதலுக்குரிய நிலையை அடைவாள், அதுவரை ஒரு தாயைப் போன்ற ஒன்றை அவர்கள் சார்ந்திருப்பர் என்றும் நான் முன்னுரைத்தேன். ஆகவே, பிறகுஅமெரிக்கா ஒரு ஸ்திரீயினால் ஆளப்படும்.’ அதைக் குறித்துக் கொண்டு சரியாய் இருக்கின்றதா என்று பாருங்கள். ஒரு ஜனாதிபதியின் ஸ்தானத்தையோ அல்லது ஒரு மகத்தான, உன்னத அதிகாரத்தையோ அமெரிக்காவில் அவள் பெறுவாள்.
மோசேயைக் குறித்த போதனை, மே 13, 1956, பத்தி எண் 22

ஒரு ஸ்திரீ அமெரிக்காவில் சீக்கிரமாய் எழும்பி, ஒரு மகத்தான ஸ்திரீயாக ஆவாள், அவள் கர்த்தருடைய வருகைக்கு முன்பு, ஒரு ஜனாதிபதியைப் போன்றோ அல்லது ஏதோவொரு இடத்தில் இருப்பாள் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? நான் அதைக் கூறியிருக்கிறேன் என்பதை அப்படியே நினைவில் கொள்ளுங்கள். மேலும் இந்த தேசத்திற்கு முற்றிலுமான சர்வசங்காரம் அல்லது அழிவு வருவதற்கு சற்று முன்பு, கார்கள் இன்னும் ஒரு முட்டை வடிவத்தைப் போன்று ஆகும்.
யேகோவா யீரே, 57-0309 E, பத்தி எண் E -59

ஒரு மகத்தான பெண் எழும்பி ஜனாதிபதியாக இருப்பாள், அல்லது இந்த தேசத்தில் அதைப் போன்று ஏதோவொன்றாக இருப்பாள், அதன்பிறகு அங்கே முழுவதுமான சர்வசங்காரம் வந்து முழு தேசமும் இல்லாமல் போய் விடும் (wiped out).
விசுவாசத்தினாலே மோசே, 58-0720 M, பத்தி எண் E-4

1933ம் ஆண்டில் கர்த்தர் எனக்குத் தந்த தீர்க்கதரிசனத்தைப் பாருங்கள். அதில், ‘எவ்வாறு அவர்கள் பெண்களை வாக்களிக்க அனுமதிப்பார்கள்; எவ்வாறு தங்களின் வாக்குரிமையினால் தவறான நபரைத் தேர்ந்தெடுப்பார்கள்என்பதைப் பற்றியெல்லாம் கூறப்பட்டது. ஏழு காரியங்கள் முன்னுரைக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஐந்து ஏற்கனவே நிறைவேறிவிட்டன. அடுத்த காரியமானது, பெரிய சக்தி வாய்ந்த ஒரு பெண்மணி, ஒரு சபை அல்லது வல்லமை அல்லது ஏதோவொன்று (எழும்பி), அவள் இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளை அடக்கி ஆண்டு கொள்ளுவாள். அதற்கு அடுத்ததாக, அமெரிக்க தேசமே அப்படியே சாம்பலாக ஆகி விட்டதாக கண்டேன். அங்கேதான் முடிவுண்டாகிறது. அது தான் முடிவு காலம்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல், டிசம்பர் 4, 1960, பத்தி எண் 405


*****

No comments:

Post a Comment