(சகோ. பிரன்ஹாம்
தாம் பேசின “கேள்விகளும் பதில்களும்” என்ற செய்தியில் கீழ்வரும் சம்பவத்தைக் கூறுகிறார்.)
-------------
அண்மையில்,
முதலாம் உலகப்போர் முதற்கொண்டு இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்த
ஒரு ஸ்திரி என்னிடம் வந்திருந்தாள்.
அவள், “ஓ, சகோ, பிரான்ஹாமே” என்றாள்.
அவள் மனநிலை நிபுணர்களுக்கு ஆயிரக்கணக்கான
டாலர்கள் செலவழித்து விட்டாள். அங்கு நான் உட்கார்ந்து
கொண்டு அந்த அறையில் அவளைக்
கவனித்துக் கொண்டிருந்தேன். மேடா அவளை இங்கு
கொண்டு வந்திருந்தாள். அவள் அங்கு உட்கார்ந்து
கொண்டு, கைக்குடையை தன் கையில் இப்படி
பிசைந்து கொண்டு, “உலகம் வெடித்து விடப்
போகிறது போன்ற உணர்வு எனக்கு
உண்டாகிறது. நான்...” என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தாள்.
நான் அங்கு உட்கார்ந்து
கொண்டிருந்தேன். நான் “இது ஏதோ
ஒன்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. உன் வாழ்க்கையில் எங்காவது
ஏதாகிலும் நடந்ததுண்டா?” என்று கேட்டேன்.
அவள்,
“இல்லை, நான் ஒரு ஞாயிறு
பள்ளி ஆசிரியை” என்றாள்.
நான்,
“சரி” என்றேன். அங்கு சிறிது உட்காந்து
கொண்டு அவளைக் கவனித்தேன். “நான்
பச்சை நிறக் கார் ஒன்றைக்
காண்கிறேன். நீ வெள்ளை தலைமயிர்
கொண்ட ஒரு மனிதனுடன் அதில்
இருக்கிறாய். ஒரு ரயில் வண்டி
ஏறக்குறைய அந்த காருடன் மோதி
விட்டது”
என்றேன்.
அவள்,
“அதை யாரிடமும் சொல்லாதீர்கள்”
என்றாள்.
நான்,
“உன் கணவர் அப்பொழுது இராணுவத்தில்
இருந்தார்” என்றேன்.
அவள் அழுது புலம்பி மேலே
குதித்தாள். “அதை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றாள்.
பாருங்கள்? அது அவள் உள்ளுணர்வில்
குடி கொண்டிருந்தது. அவள், “நான் நீண்ட
காலத்துக்கு முன்பே அதை தேவனிடம்
அறிக்கை செய்துவிட்டேன்”
என்றாள்.
நான், “ஒரு நிமிடம் பொறு,
நீ தேவனுக்கு விரோதமாக தவறு செய்யவில்லை.
உன் விவாகப்பொருத்தனைக்கு விரோதமாக நீ ஒரு பாவத்தைச்
செய்திருக்கிறாய். நீ
உன் கணவரிடம் சென்று அதை முதலில்
சரி செய்துகொள்ள வேண்டும்” என்றேன்.
அவள்,
“அவர் என்னை விட்டுப் போய்விடுவார்” என்றாள்.
நான்,
“தேவன் எப்படியும் உன்னை விட்டு போய்விட்டார்.
இப்பொழுது, யார் உன்னை விட்டு
போக வேண்டுமென்று நினைக்கிறாய்? உன் கணவரிடம் போ” என்றேன்
அவள்,
“ஓ, நான் - நான் ... அவர்
இதை செய்வார், எனக்கு இரண்டு பிள்ளைகள்
இருக்கிறார்கள்” என்றாள்.
நான், “நல்லது, இவ்வளவு தான்
நான் உன்னிடம் கூற முடியும். மனநிலை
நிபுணர் அதை உனக்குள்ளிருந்து வெளியே
கொண்டு வரவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர்
அதை வெளிப்படுத்தினார். உன்னை நான் என்
வாழ்க்கையில் கண்டதேயில்லை”என்றேன். அவள், “அது முற்றிலும்
உண்மையே. நல்லது, நான்
அவரிடம் கூறமுடியாது” என்றாள்.
நான்,
“நல்லது, நான்... உன்னை சந்தித்ததில்
எனக்கு மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு, அடுத்த
அறைக்குச் சென்று விட்டேன். மேடா அங்கு வந்தாள்.
மேடா,
“அவள் உங்களைக் காணவிரும்புகிறாள்” என்றாள்.
நான் அங்கு சென்று, “உனக்கு
என்ன வேண்டும்?” என்றேன்.
அவள்,
“சகோ, பிரான்ஹாமே, அதை என் கணவரிடம்
என்னால் கூற இயலாது” என்றாள்.
நான், “உன் கணவர் கறுப்பு
தலைமயிர் கொண்டவர்” என்றேன்.
“ஆம்”
நான், “அதே விதமான ஒரு
காரியத்தை அவர் உன்னிடம் அறிக்கை
செய்ய வேண்டியவராயிருக்கிறார்” என்றேன்.
அவள்,
“ஓ, என் கணவர் அப்படிப்பட்டவர்
அல்ல” என்றாள்.
நான்,
“நீ போய் அவரை இங்கு
கூட்டிக் கொண்டு வா. ஒரு
குறிப்பிட்ட ஸ்திரீ உனக்குத் தெரியுமா,
அவள் ‘பிங்க்’ நிற ஆடை அணிவதுண்டு. அவள்
ஒரு குறிப்பிட்ட மோட்டார் வாகன நிர்வாகத்தின் அலுவலகத்தில்
வேலை செய்கிறாள்” என்றேன்.
அவள்,
“நிச்சயமாக” என்றாள்.
நான்,
“அவளை ஒரு குறிப்பிட்ட பெயரால்
அழைக்கிறார்கள் அல்லவா?” என்றேன்.
“ஆம்”
நான்,
“இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு
‘பீச்’ (beach)
மரத்தின் அடியில் ஒரு பழுப்பு
நிற ஷெவர்லே காரில் உட்கார்ந்து
கொண்டிருந்தனர். அதன் லைசென்ஸ் நம்பர்
இன்னின்னது. அவர்கள் அதே செயலில்
ஈடுபட்டிருந்தனர்” என்றேன்.
அவள், “அது என் கணவராக
இருக்காது” என்றாள்.
நான், “சரி, அவரை இங்கு
கூட்டிக் கொண்டு வா” என்றேன்.
அவள் சென்றாள். சில நிமிடங்கள் கழித்து
அவர்கள் இருவரும் வந்தனர். அவர்,
“அது உண்மை” என்றார்.
நான்,
“பார்த்தாயா? நீ போய் தேவனிடம்
சொல்” என்றேன்.
ஆனால் முதலாவதாக, நீ பலிபீடத்தினிடத்தில் வரும்
போது, குறை உண்டென்று கண்டால்,
நீ போய் அதை சரி
செய். அந்த நபர் தன்
மனைவியிடம் அதை கூறாமல் குற்றவாளியாயுள்ள
வரைக்கும்... இந்த மனைவி தன்னை
சுத்தப்படுத்திக் கொண்டாள். இப்பொழுது அது மற்ற பெண்ணையும்
அவளுடைய கணவரையும் பொறுத்தது. இந்த மற்ற மனிதனும்
அவருடைய மனைவியும் அதை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உன்னால் முடியாது...
நீ என்ன செய்த போதிலும்,
நீ அதை சுத்தமாக கழுவிக்
கொள்ளாவிட்டால், அது உன்னை உன்
வாழ்நாள் முழுவதும் அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். அதைச் செய்வதற்கு ஒரே
வழியுண்டு; அதை அறிக்கை செய். அது
உன் தோலை உரித்தாலும், அதை
எப்படியும் செய். உண்மையைச் சொல்.
அப்பொழுது நீ அதை சரியாக
பெற்றுக் கொண்டாய். ஆமென்!
செய்தி: கேள்விகளும்
பதில்களும், (COD 2:20), ஆகஸ்டு
23 1964 மாலை, பத்தி எண் 90-92
~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment