ஒரு ஸ்திரீ மரணத் தருவாயிலிருந்தாள்,
நான் படிக்கட்டுகளில் ஓடி ஏறினேன். நான்
இங்கு பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அங்குள்ள கதவண்டையில்
ஒரு மனிதன் நின்று கொண்டு
என்னை அழைத்தார். அவள் வெளியே நடந்து
சென்று விட்டாள் அவள் இந்த தெருவில்
வசித்து வந்தாள். அவளுக்கு ஒரு பசு இருந்தது.
அவள், ‘பில்லி கடைபிடிக்கும் அவ்விதமான
மார்க்கத்தை என் பசு கடைபிடித்தால்,
அதை நான் கொன்று போடுவேன்’ என்றாள்.
அதை கூறின பிறகு ஒரு
மணி நேரத்துக்குள் அவள் வியாதிப்பட்டு மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்பட்டாள் – அழகான இளம் பெண்.
நான் அங்கு விரைவாகச் சென்றேன்.
அவளுடைய கணவர் கத்தோலிக்கர். அவர்கள்
என்னை ஆளனுப்பி அழைத்திருந்தனர். அவள் மரித்துக் கொண்டிருந்தாள்...
அவளுடைய கண்கள் வீங்கி விட்டன.
அவள், ‘அவரைக் கூப்பிடுங்கள், அவரைக்
கூப்பிடுங்கள்; அவரைக் கூப்பிடுங்கள்; அவரை
வேகமாக, வேகமாக கூப்பிடுங்கள்’ என்றாள்.
அவளுடைய
சகோதரன் ஓடி வந்து கதவண்டையில்
நின்று கொண்டு, காத்திருந்து, காத்திருந்து,
எனக்கு சைகை காட்டிக் கொண்டிருந்தார்.
இந்த இடம் ஜனங்களால் நிறைந்திருந்தது.
சற்று கழிந்து யாரோ ஒருவர்
வந்து ஒரு குறிப்பை மேசையின்
மேல் வைத்தார். ‘மருத்துவமனையில் ஒருத்தி மரித்துக் கொண்டிருக்கிறாள்’ என்று
எழுதப்பட்டிருந்தது. அது சகோ. க்ரிம்
ஸ்நெல்லிங் என்று நினைக்கிறேன். அவரிடம்,
‘நான் திரும்பி வரும் வரைக்கும் என்
இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். அவர் பாடலை தொடங்கி
நடத்துவதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் பிரசங்கிக்க அவர் அழைக்கப்படவில்லை. அவர்
பாடலை தொடங்கி நடத்துவதற்காக வந்து
கொண்டிருந்தார். நான் வெளியே சென்று,
காரில் ஏறி, விரைவாக ஓட்டிச்
சென்று அங்கு அடைந்தேன். நான்
படிக்கட்டுகளில் ஏறிச் சென்று கொண்டிருந்த
போது அவள் தன்னுடைய கடைசி
மூச்சை விட்டாள். அவளுடைய குடல்களும், சிறுநீரகமும்
இயங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் அவள் முகத்தை
மூடிவிட்டனர். நீராவி அப்படி வந்துக்
கொண்டிருந்தது. அங்கு நின்று கொண்டிருந்த
வயோதிப நர்ஸ், ‘சகோ.பிரன்ஹாமே,
அவள் உங்களுக்காக அவளின் கடைசி மூச்சை
விட்டாள்’
என்றாள். அவள் அதை நேராக்க
முயன்றாள், ஆனால் அப்பொழுது மிகவும்
காலதாமதமாகி விட்டது. ஒரே சமயத்தில் நீங்கள்
அநேக பாவங்களைச் செய்யக் கூடும். அவள்
ஒரு விதமான... அவளுடைய முகத்தில் ஆழமாக...
அவளுக்கு
பொன்நிறமுள்ள தலைமயிர் இருந்தது – மிகவும் அழகான பெண்.
கத்தரிக்கப்பட்டிருந்த அவளுடைய தலைமயிர் கலைந்து
புதரைப் போல் காணப்பட்டது. அவளுடைய
பெரிய பழுப்பு நிற கண்கள்
வெளியே தள்ளப்பட்டு பாதி மூடியிருந்தன. அவளுடைய
முகத்தில் காணப்பட்ட சுருக்கங்கள், அவள் அதிகமாக வேதனைப்பட்டதன்
காரணமாக, அவளுடைய முகம் முழுவதிலும்
சிறு வீக்கங்கள் போல் எழுந்து நின்றன.
அவளுடைய வாய் திறந்திருந்தது. நான்
அவளிடம் நடந்து சென்று அவளை
உற்று நோக்கினேன். அவளுடைய கணவன் அங்கு
நின்று கொண்டிருந்தார். அவர், ‘பில்லி, நான்
ஒரு கத்தோலிக்கன், அவள் பாவ விமோசன
ஸ்தலத்திற்கு சென்றிருப்பதால், அவளுக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள்’ என்றார்.
நான்,
‘என்ன?’ என்றேன்.
‘அவளுக்காக
ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள். அவள்
பாவ விமோசன ஸ்தலத்தை அடைந்திருக்கிறாள்.
இரண்டு மணி நேரத்துக்கு முன்பு
அவள் உம்முடைய சபையை கடந்து செல்லும்
போது, நீர் கொண்டுள்ள அவ்விதமான
மார்க்கத்தை எங்கள் பசு கொண்டிருந்தால்,
அதை அவள் கொன்று போடுவாள்
என்று கூறினாள். அவளுக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள்’ என்றார்.
நான்,
‘இப்பொழுது காலதாமதமாகி விட்டது. அவள் வேறொரு இடத்துக்குப்
போகும் வரை காத்திருக்காமல், இங்கேயே
தன் ஆத்துமாவை கழுவி சுத்திகரித்திருக்க வேண்டும்’ என்றேன்.
பாருங்கள்? அது உண்மை. ஓ,
ஆமாம். நமது துன்ப நேரத்திலேயே
அவரை நாம் தேடுகிறோம். ஜனங்கள்,
‘தேவன் பேரில் எனக்கு விசுவாசமில்லை’ என்று
கூறக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அவர்களுக்கு துன்பம்
உண்டாகட்டும், அவர்கள் முதலாவது கூப்பிடுவது
அவரையே.
இயேசுவின்
பட்சம் சேர்ந்திருத்தல், ஜூன் 1, 1962 மாலை, பத்தி எண்
263-267
~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment