Monday, 15 January 2018

லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணத்திற்கு தீர்க்கதரிசனம் PROPHECY TO LOS ANGELES BY WILLIAM BRANHAM




இயேசு, ‘, வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலும் கொமோராவிலும் செய்யப்பட்டிருந்ததானால், அவை இந்தநாள் வரைக்கும் நிலைத்திருக்கும்என்றார். (மத் 11:23). சோதோமும் கொமோராவும் உப்புக் கடலின் (Dead sea) அடியில் மூழ்கிவிட்டன. கப்பர்நகூமும் கடலின் அடியில் மூழ்கி விட்டது.

   தேவதூதர்களின் (Angels) பட்டினம் என்று உரிமை கொண்டாடும் பட்டினமே (சகோ. பிரான்ஹாம் லாஸ் ஏஞ்சலிû குறிப்பிடுகிறார்தமிழாக்கியோன்), நீ உன்னை வானபரியந்தம் உயர்த்தி ஆபாசமான நாகரீகத்தை உலகிற்கு அனுப்பி, வெளிநாடுகளும் கூட இங்கு வந்து நமது ஆபாசத்தை ஏற்றுக் கொண்டு அதை வெளியில் அனுப்புகின்றன. நீ அழகான ஆலயங்கள், கூர்கோபுரங்கள் போன்றவைகளைக் கொண்டிருக்கிறாய். நீ புரியும் செயல்கள் ஒருநாளில் நீ இந்த கடலின் அடியில் மூழ்கிவிடுவாய் என்பதை ஞாபகம் கொள். அந்த பெரிய தேன்கூடு இப்பொழுதே உன் அடியில் உள்ளது. தேவனுடைய கோபாக்கினை உனக்குக் கீழே கக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் தான் அவர் அந்த மணல் தடையை (sand bar) பிடித்து வைத்திருப்பார்? ஒரு மைல் ஆழமுள்ள அந்த சமுத்திரம் கடந்து வந்து, சால்டன் கடலில் (Salton Sea) தள்ளி விடும். பாம்பே (Pompeii) பட்டினத்தின் கடைசி நாட்களைக் காட்டிலும் இது பயங்கரமானதாக இருக்கும். லாஸ் ஆஞ்சலிú, மனந்திரும்பு! மற்றவர்களாகிய நீங்களும் மனந்திரும்பி, தேவனிடத்திற்கு திரும்புங்கள். கோபாக்கினையின் நேரம் பூமியின் மேல் உள்ளது. சமயம் உள்ள போதே தப்பி ஓடி கிறிஸ்துவுக்குள் வாருங்கள்.
மணவாட்டியைத் தெரிந்துகொள்ளுதல், ஏப்ரல் 29, 1965, பத்தி எண் 230-232

ஆட்டுக்குட்டியானவர் எந்த நேரத்திலும் பிரகாரத்தை விட்டு, பலியானது வைக்கப்பட்டுள்ள தேவனுடைய சிங்காசனத்தை விட்டு புறப்பட்டு வரக்கூடும். அப்பொழுது எல்லாம் முடிவடையும், அதன் பின்னர் இவ்வுலகிற்கு விமோசனமில்லை. அவள் ஏமாற்றம் கொண்டு, இயேசுவின் உயிர்த்தெழுதலின்போது நிகழ்ந்தவாறு, பூமியதிர்ச்சிகளுக்கு ஆளாவாள்.

கிறிஸ்து கல்லறையை விட்டு எழுந்ததுபோல, பரிசுத்தவான்கள் எழும்போது, அதே காரியம் சம்பவிக்கும். கர்த்தாவே, அது எந்த நேரத்திலும் நிகழும். அந்த சந்தோஷகரமான நாளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆறாம் முத்திரை, மார்ச் 23, 1963 மாலை, பத்தி எண் 392-393

அந்த நேரத்தில் நான் திரும்பிப் பார்த்தேன்... இப்பொழுது இங்கு உட்கார்ந்திருக்கிற ஒருவர் அன்று அங்கு நின்று கொண்டிருந்தார். நான் ராய் பார்டர்ஸிடம்... இல்லை ராய் ராபர்ஸன் தோள் மேல் என்கையை போட்டுஅவர் முன்னாள் போர் வீரன் – ‘சகோ. ராய், எங்காவது வேகமாக ஏதாவதின் கீழ் ஒளிந்து கொள்ளுங்கள். ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறதுஎன்றேன்.

அவர், ‘சகோ. பிரான்ஹாமே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?’ என்றார்.

நான், ‘பேசாதீர்கள், போய் வேகமாக ஏதாவதின் கீழ் ஒளிந்து கொள்ளுங்கள்என்றேன். நான் பக்கத்தில் இருந்த நீண்ட பிடி மண்வெட்டியை (shovel) கையிலெடுத்துக் கொண்டு, அவர்களை விட்டு நடந்து சென்றேன். ஏனெனில் நான் இருக்கும் இடத்தில் தான் அது சம்பவிக்கும் என்று அறிந்திருந்தேன்.

அதன் பக்கத்தில் ஒரு பெரிய மலைக்கணவாய் இருந்தது. அது இந்தக் கட்டிடத்தைக் காட்டிலும் எட்டு அல்லது பத்து மடங்கு உயரமிருக்கும். அதுபெட்டிமலைக்கணவாய். வானத்திலிருந்து தீயைப் போல், சுழல்காற்றைப் போல் ஒன்று இறங்கி வந்து, நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு சில அடி உயரத்தில் மலையிலிருந்து கற்களைப் பெயர்த்து, ஊடுருவி நூறு கெஜம் வரைக்கும் சென்று, அங்கிருந்த மரங்களின் உச்சியை எரித்துப் போட்டது. எல்லோரும் ஓடி மோட்டார் வாகனங்களின் கீழ் ஒளிந்து கொண்டனர். அது மறுபடியும் மேலே சென்று, ஒரு பெரிய இடிமுழக்கம் உண்டாக்கி, வானத்துக்குச் சென்று, மறுபடியும் கீழே வந்தது. இப்படியாக மூன்று முறை நடந்தது. இதெல்லாம் முடிந்த பின்பு, அவர்கள் என்னிடம் வந்து, ‘இதன் அர்த்தம் என்ன?’ என்றனர்.

நான், ‘உங்களிடம் இதை கூற விரும்புகிறேன். இது நியாயத்தீர்ப்பின் அடையாளம். இன்னும் சில நாட்களில், ஒரு பெரிய பூமியதிர்ச்சி மேற்கைத் தாக்கும். அது அத்துடன் நின்று விடாது. கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ் ஒரு நாள் தண்ணீரில் மூழ்கும். அது வழுக்கி தண்ணீருக்குள், போய்க் கொண்டேயிருக்கிறதுஎன்றேன். இரண்டு நாட்கள் கழித்து, அலாஸ்கா பூமியதிர்ச்சி அலாஸ்காவை அசைத்தது.

நான் கலிபோர்னியாவில் கடைசியாக நடத்தின கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில், நான் தெருவில் செல்லும் வரைக்கும் என்ன நடந்ததென்று எனக்கே தெரியவில்லை. அது கலிபோர்னியாவைக் குறித்து, ‘கப்பர்நகூமே, கப்பர்நகூமே, தூதர்களின் பெயரை வைத்துள்ள நகரமே (அது லாஸ் ஏஞ்சலிஸ்), உன்னை வானபரியந்தம் உயர்த்திக்கொண்டாய். நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய். உன்னில் செய்யப்பட்ட பலத்த கிரியைகள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால், அது இன்று வரைக்கும் நின்றிருக்கும்என்றது.

கடைசி சில நாட்களாக நடந்த மகத்தான முழக்கமும் குதித்தலும். அதன்பிறகு விஞ்ஞான சம்பந்தமான ஒரு பத்திரிகை வெளியாகி, ‘அது தேன் கூடுபோல் ஆகிவிட்டது. அது தண்ணீருக்குள் செல்ல வேண்டும்என்றது. அவர்கள் அதை அறிந்துள்ளனர்.

நீங்கள் கவனித்துக் கொண்டே வாருங்கள். தண்ணீர் சால்டன் கடலுக்குள் புகுந்து விடும். லாஸ் ஏஞ்சலிஸ் மேல் நியாயத்தீர்ப்பு விதிக்கப்பட்டு விட்டது. அது நடப்பதற்கு முன்பே உங்களுக்கு அறிவிக்கிறேன். அது நடக்கும்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதை நானாக கூறவில்லை. அவர் இதுவரை கூறின ஒன்றும் நடக்காமல் போனதில்லை. அது உண்மை. அது எப்பொழுது நடக்கும்? எனக்குத் தெரியாது.

நான் வெளியே சென்றபோது, நான் கூறினது என்னவென்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் கவனித்துக் கேட்டு, திரும்பிச் சென்று, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தேன். கப்பர்நகூமைக் குறித்து பேசும்போது இயேசு ஏறக்குறைய அதே வார்த்தைகளை உபயோகித்தார். சோதோமும் கொமோராவும் உப்புக்கடலின் கீழ் சென்று விட்டன. இயேசு கப்பர்நகூமைக் குறித்து உரைத்தபோதே அவை உப்புக்கடலில் மூழ்கியிருந்தன என்று நினைக்கிறேன். அவர் உரைத்து ஏறக்குறைய நூறு ஆண்டுகள் கழித்து கப்பர்நகூம் தண்ணீருக்குள் வழுக்கிச் சென்றது. அது இப்பொழுது கடலுக்குள் உள்ளது. சோதோமின் பாவங்களுக்காக அதை தண்ணீருக்குள் முழுக்கின அதே தேவன், கப்பர்நகூமின் பாவங்களுக்காக அதை தண்ணீருக்குள் முழுக்கின அதே தேவன், லாஸ் ஏஞ்சலிஸின் பாவங்களுக்காக அந்த சீர்கேடான நகரத்தை தண்ணீருக்குள் முழுக்குவார்.
விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள், நவம்பர் 26, 1965, பத்தி எண் 56-64

கலிபோர்னியாவில் நான் கடைசியாக அளித்த செய்தி என் நினைவுக்கு வருகின்றது. நான் மறுபடியும் அங்கு போகமாட்டேன் என்று நினைத்தேன். லாஸ் ஏஞ்சலிஸ் கடலுக்குள் ஒரு நாள் மூழ்கி விடும் என்று நான் அங்கு முன்னறிவித்தேன். அது கர்த்தர் உரைத்ததாவது! ஆகவே அது நிச்சயம் நிறைவேறும். அவளுடைய முடிவு நெருங்கி விட்டது. அது எப்பொழுது நேரிடும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழுமென்பது உறுதி. நான் அவ்விதம் உரைத்தபின்பு நிலநடுக்கங்கள் உண்டாகி அந்தப் பட்டினத்தை அசைத்தன.

தூதன் இறங்கி வந்தபோது உங்களில் சிலர் அந்தக் குன்றின் மேல் நின்று கொண்டிருந்தீர்கள். அப்பொழுது வெளிச்சம் உண்டாகி, நாம் நின்று கொண்டிருந்த குன்றைச் சுற்றிலும் அக்கினி விழுந்தது. அப்பொழுது கற்பாறைகள் பிளவுபட்டு, உடைந்து, நம்மைச் சுற்றிலும் விழுந்தன. மூன்று முறை வானத்திலிருந்து இடிமுழக்கம் உண்டானது. அப்பொழுது நான், ‘மேற்கு கடற்கரையின் மேல் நியாயத்தீர்ப்பு விழும்என்று அறிவித்தேன். இரண்டு நாட்கள் கழித்து அலாஸ்கா ஏறக்குறைய தண்ணீரில் மூழ்கிவிட்டது.

இதை உரைத்த அதே தேவன், ‘லாஸ் ஏஞ்சலிஸ் அழிந்து விடும்என்று உரைத்துள்ளார். அது எப்பொழுது நேரிடும் என்று என்னால் கூற முடியாது.

கப்பர்நகூமைக் குறித்து ஆண்டவர் கூறினதை அப்பொழுது நான் யோசித்துக் கூட பார்க்கவில்லை. நான் வேதபுத்தகத்தைத் திறந்து இயேசு கூறினதைப் படித்தேன்; ‘வான பரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும் (மத். 11:23). அது உரைக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பின்னர், கப்பர்நகூம் தண்ணீரில் மூழ்கினது.

இவையனைத்தும் உரைத்து நிறைவேற்றின அதே தேவ ஆவியானவர், ‘தூதர்களின் பெயரை (லாஸ் ஏஞ்சலிஸ்) சூடிக்கொண்டிருக்கும் கப்பர்நகூமே, நீ எவ்வளவாக உன்னை வானபரியந்தம் உயர்த்திக் கொண்டாய்! நீ சாத்தானின் உறைவிடமாக இருக்கின்றாய்.

போதகர்களின் கல்லறைத் தோட்டமாக நீ அமைந்திருக்கிறாய். நல்லவர்கள் உன்னிடம் வந்தால் அவர்கள் எலிகளைப் போல் மாண்டு போகின்றனர். உனக்கு என்ன நேர்ந்தது?

தூதர்களின் பெயரால் உன்னை அழைத்துக் கொள்பவளே! உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமில் செய்யப்பட்டிருந்ததானால், அது இன்று நிலைத்திருக்கும். உன் நேரம் வந்து விட்டதுஎன்று கூறுகின்றார். நான் கூறினது நிறைவேறாமல் போனால், என்னைக் கள்ளத் தீர்க்கதரிசியாகக் கருதுங்கள்.
   ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல், டிசம்பர் 4, 1965, பத்தி எண் 191-197

அவர்கள் பரிதபிக்கப்படத் தக்கவர்களாயிருக்கின்றனர்என்றாலும் அவர்களிடம் காண்பிக்கப்படும் பரிதாபத்தை அவர்கள் இகழ்ந்து, பெருமையுள்ளவர்களாயிருக்கின்றனர். அவர்களிடமுள்ளதைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டுகின்றனர். ஆனால் இவையனைத்தும் அதிக காலம் நீடிக்காது. தேவனுடைய கோபாக்கினையாகிய புயல்காற்று வீசும். அப்பொழுது அழிவு சடுதியாய் அவர்கள் மேல் வரும். மாம்சத்துக்குரிய பிரகாரமாய் அவர்கள் செய்த ஆயத்தமனைத்தும் வீணாகும். இவ்வுலகத்தில் நேரிடுபவைகளுக்கு அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளாத நிலையில் இருப்பார்கள். அவர்கள் உண்மையாகவே பரிதபிக்கப்படத்தக்கவர்கள். உலக சபைகளின் ஐக்கியத்தில் பங்கு கொள்பவர்களுக்காக நாம் அனுதாபப்பட வேண்டும். அது தேவனுடைய அசைவு என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் அது சாத்தானின் இயக்கமாயிருக்கிறது.
லவோதிக்கேயா சபையின் காலம், ஏழு சபை காலங்களின் வியாக்கியானம்

அது இரகசியமாக நிகழும், ஏனெனில் அவர், ‘இரவில் திருடன் வருகிறவிதமாய்வருவார். நாம் எடுக்கப்படுதலைக் குறித்து அவர் ஏற்கனவே நமக்குக் கூறிவிட்டார்.

எடுக்கப்படுதல் சம்பவித்த பிறகு நியாயத்தீர்ப்பு - பாவம்வாதைகள் - வியாதிகள் போன்றவை - விழுமென்று அவர் ஏற்கனவே நமக்கு சொல்லியிருக்கிறார். நியாயத்தீர்ப்பின் கோரத்தினின்று தப்பித்துக் கொள்ள ஜனங்கள் மரித்துப்போக ஆசிப்பர். ‘ஆண்டவரே, முதலில் எடுக்கப்படுதல் சம்பவிக்கவேண்டுமே! பின்னை ஏன் இந்த நியாயத்தீர்ப்பு இப்பொழுது எங்கள்மேல் விழ வேண்டும்?’ என்று அவர்கள் கூக்குரலிடுவர்.

அவர் அதற்கு, ‘எடுக்கப்படுதல் ஏற்கனவே சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியவில்லைஎன்பார். பாருங்கள்? தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். , என்னே! அது சரி. ‘அது ஏற்கனவே சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியவில்லை.’
தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல், மார்ச் 17, 1963 காலை, பத்தி எண் 380-382

ஒரு நாளிலே ஃபீனிக்ஸில் ஒரு கல்லின் மேல் கல்லிராதபடிக்கு எல்லாம் அகற்றப்பட்டிருக்கும். பள்ளத்தாக்குகளெல்லாம் பெருக்கி சுத்தமாக்கப்பட்டிருக்கும்.
எல்லாவற்றையும் விட்டுவிடுதல் ஜனவரி 23, 1962, பத்தி எண் 267

ஒருநாள் இங்கிலாந்து தண்ணீரில் மூழ்கிவிடும் என்று நான் நினைக்கிறேன். அது அவளுக்கு தகுதியுள்ளதாகும். அசுத்தம், குப்பை, அழகு... இங்கிலாந்து உலகின் நெறி தவறிய சாக்கடை நீர் தேக்கமாக திகழ்கின்றது. என் வாழ்க்கையில் நான் இதுவரை கண்டவர்களில், வேதத்தை அதிகமாக மறுதலிப்பவர்கள் இங்கிலாந்து நாடாகும்.
காலத்தையும் அதன் செய்தியையும் அடையாளம் கண்டு கொள்ளுதல், ஜூலை 26, 1964 காலை, பத்தி எண் 147

இப்போழுது, பாவமாகிய தடைகளெல்லாம் (sin barrier), பூமிக்கடியில் முழங்கி, அவள் மூழ்கிக் கொண்டிருக்கிறாள். லாஸ் ஏஞ்சலிஸ், ஹாலிவுட் ஆகிய ஸ்தலங்கள் ஒவ்வொரு மணி நேரமும் பல அங்குலங்கள் கணக்கில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன, அதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆம், நாம் இந்த அளவுக்கு வந்துவிட்டோம். எந்த வேளையிலும் அழைப்பை நாம் கேட்போம்.
இப்பொல்லாத காலத்தின் தேவன், ஆகஸ்ட் 1, 1965, பத்தி எண் 192

லவோதிக்கேயா பட்டினத்தில் அநேக பூகம்பங்கள் உண்டாகி, கடைசியில் ஏற்பட்ட பூகம்பம் அதை முழுவதும் சேதப்படுத்தியது. அவ்வாறே, இந்தக் கடைசி காலத்தில், பழைய வேசியோடு காதல் புரியச் சென்ற உலகத்தைக் கர்த்தர் அசைத்து அதை நிர்மூலமாக்குவார். உலகத்தாரால் ஏற்பட்ட ஸதாபனங்கள் அழிவது மாத்திரமல்ல. இந்தப் பூமியும் பூகம்பத்தினால் அழிந்து கிறிஸ்துவின் ஆயிர வருஷ அரசாட்சிக்கென புதுப்பிக்கப்படும்.
லவோதிக்கேயா சபையின் காலம், ஏழு சபை காலங்களின் வியாக்கியானம்

நான் அங்கிருந்த போது, ஏதோ ஒன்று என்னைத் தாக்கியது. முப்பது நிமிடங்கள் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. சகோ.மாஸ்லி, மற்றும் பில்லி, முதலாவது நான் நினைவுக்கு வந்த போது, நான் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். அது, ‘தூதர்களின் பெயரால் உன்னை அழைத்துக்கொள்ளும் கப்பர்நகூமே!’ என்றது. அது லாஸ் ஏஞ்சலிஸ், தூதர்களின் (angels) பட்டினம் பாருங்கள், தூதர்கள். ‘வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.’ இவையாவும் எனக்கு நினைவு இல்லாமலிருந்தபோதே. பாருங்கள்?

நான் எவ்வளவாக கிறிஸ்துவை உயர்த்தி சபைக்குச் சொல்ல ஆரம்பித்தேன்! நான், ‘ஸ்திரீகளே, நான் எவ்வளவாக உங்களிடம் வந்து இவைகளுக்கு விரோதமாக பிரசங்கித்தபோதிலும்; மனிதர்களே, போதகர்களே, நீங்கள் எப்பொழுதும் அதை நிராகரித்து, அதை செய்துகொண்டே வந்தீர்கள், தேவனுடைய வார்த்தை ஒன்றுமற்றது என்பது போல் அதை மிதித்து போடுகின்றீர்கள்என்றேன்.

எனக்கு நினைவு வந்தபோது நான், ‘அப்படிப்பட்ட ஒரு வேதவாக்கியம் இருக்கிறதேஎன்று சொல்லி அதை தேடினேன். அது இயேசு கடற்கரையிலிருந்த கப்பர்நகூமைக் கடிந்து கொள்வதாகும். அன்றிரவு நான் வேதவாக்கியங்களை ஆராய்ந்தேன், வீட்டுக்கு வந்து சரித்திர புத்தகங்களைப் படித்தேன். சோதோம் கொமோரா ஒரு காலத்தில் செழிப்புள்ள பட்டினமாகத் திகழ்ந்தது. அது உலகில் புறஜாதியாரின் தலைமை ஸ்தலமாக விளங்கினது. உங்களுக்குத் தெரியுமா? அந்த பட்டினம் பூமியதிர்ச்சியின் விளைவாக உப்புக் கடலுக்குள் (Dead Sea) மூழ்கினது. இயேசு அங்கு நின்று கொண்டு, ‘கப்பர்நகூமே, உன்னில் செய்யப்பட்ட செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும். நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்பட வேண்டும்என்றார். அவர் தீர்க்கதரிசனம் உரைத்து இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுகள் கழித்து, மற்ற கடற்கரை பட்டினங்கள் ஒவ்வொன்றும் அப்படியே நிலைத்திருந்த போது, கப்பர்நகூம் மாத்திரம் கடலுக்கடியில் மூழ்கி விட்டது, பூமியதிர்ச்சி ஒன்று அதை கடலுக்குள் மூழ்கடித்து விட்டது.

பிறகு, ‘லாஸ் ஏஞ்சலிஸ் கடலுக்கடியில் மூழ்கிவிடும்என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. நான் வீடு திரும்பி, பின்பு, ஆப்பிரிக்காவுக்கு சென்றேன். நான் ஆப்பிரிக்காவில் இருந்த போது, லாஸ் ஏஞ்சலிஸில் பூமியதிர்ச்சி உண்டானது. விஞ்ஞானிகள்... நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள், அது தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலிஸில் சில பெரிய, அழகிய வீடுகள் இடிந்துபோயினஒரு விடுதியும் (motel) கூட, இப்பொழுது அங்கு...

அந்த பூமியதிர்ச்சி நேர்ந்த முதற்கு, இரண்டு அல்லது மூன்று அங்குலம் அகலமுள்ள ஒரு பிளவு பூமியில் உண்டாகியுள்ளது. அது அலாஸ்காவில் தொடங்கி, அலூசியன் தீவுகளைச் சுற்றி வந்து, கடலுக்குள் சுமார் நூறு அல்லது நூற்றைம்பது மைல்கள் தூரம் சென்று, மறுபடியும் சான்டியாகோவுக்கு வந்து கலிபோர்னியா அல்லது லாஸ் ஏஞ்சலிû அடைந்து, மறுபடியுமாக கலிபோர்னியாவின் வடபாகத்தின் கீழ் சான்ஜோஸ் என்னும் சிறிய இடத்திற்கு வந்துள்ளது.

இந்த விஞ்ஞானி, அவரைப் பேட்டி கண்டபோது பேசினார். நாங்கள் அதைத் தொலைக்காட்சியில் கண்டோம். அவர், ‘அதன் கீழ் சுழலும் பாறைக் குழம்பு (Lava) உள்ளதுஎன்றார். அவர் மேலும், ‘அந்த துண்டிக்கப்பட் பகுதி (Chunk) உடைந்து வந்து விடும்என்றார்.

இந்த தலைமை விஞ்ஞானியை பேட்டி கண்ட விஞ்ஞானி, ‘அப்படியானால் அது மூழ்கி விடுமா?’ என்று கேட்டதற்கு, அவர், ‘மூழ்கி விடுமா என்ன? அது மூழ்கத்தான் வேண்டும்என்று பதிலளித்தார்.

ஆனால் அது அநேக ஆண்டுகள் கழித்து நடக்கும்என்றார்.

அவர், ‘ஒருக்கால் அது இன்னும் ஐந்தே நிமிடங்களில் நடக்கலாம், அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகலாம்என்றார். அவர் அதற்கு ஐந்து ஆண்டுகள் சமயம் கொடுத்தார்.

நான் நிச்சயமாக பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அங்கு நின்று கொண்டிருந்தபோது, அது மேற்கு கடற்கரைக்கு நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தது, அதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சலிஸ் மூழ்கும் தருவாயில் உள்ளது. அவள் போய்விட்டாள்! அது உண்மை. அது நிகழ்ந்தே தீரும். எப்பொழுது? எனக்குத் தெரியாது.

, என்ன நேர்ந்தது? இப்பொழுது நமக்கு ஆறு கண்டங்கள் மாத்திரமேயுள்ளன. நமக்கு ஏழு இருந்தன, ஆனால் ஒன்று ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் நடுவில் மூழ்கி விட்டது. , அது சரித்திர ஆதாரமானது. அது உங்களுக்குத் தெரியும். லாஸ் ஏஞ்சலிஸ் தண்ணீரில் மூழ்குமானால், அதை நீங்கள் கவனித்து வரவேண்டுமென்று விரும்புகிறேன்.

சகோ. எலைஜ் பெர்ரி இங்கு மூப்பராக இருந்தபோது, இந்த பிரசங்கத்தை நான் நிகழ்த்தினேன் என்று நினைக்கிறேன். ‘அந்த சமயம் வரும்...’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திருமதி. சிம்ப்சன் அந்த பிரசங்கத்தை என்னிடம் அன்றொரு நாள் கொண்டு வரும் வரைக்கும், அதை அறியாதிருந்தேன். அதை ஒரு சிறு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன்... ‘சமுத்திரம் அழுது கொண்டே வனாந்தரத்தை அடையும்.’ அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டது.

சால்டன் கடல், கடல் மட்டத்திற்கு இருநூறு அடி கீழேயுள்ளது. அந்த பெரிய சுழலுதல் நிகழ்ந்து, பூமி நூற்றுக்கணக்கான சதுர மைல்கள் பரப்பு கொண்ட பாகத்தை விழுங்கி அது பூமிக்கடியில் செல்லும்போது, அது அரிசோனாவில் அது பேரலையை (tidal wave) நிச்சயம் தோன்றச் செய்யும்.

, நாம் முடிவு காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாக வேண்டிய அந்த மகத்தான நேரத்தில் இருக்கிறோம். அவர், ‘பல இடங்களில் பூமியதிர்ச்சிகள் உண்டாகும், தடுமாற்றமான நேரம், ஜாதிகளினிடையே விரோதம், மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகும். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது நீங்கள் நிமிர்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள். ஏனென்றால் உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறதுஎன்றார். , என்னே!
வெட்கப்படுதல், ஜூலை 11, 1965, பத்தி எண் 49-62

*****



No comments:

Post a Comment