(இது சகோ.பிரன்ஹாம்
பேசிய ‘ஒரே சபையில் ஒரே
தேவனின் ஒருமைப்பாடு, 58-1221 E’ என்ற செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது.)
------------------------------------------------------------
கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு... இங்கே
மேலே இந்தியானாவில் உள்ள ஒரு பண்ணையில்
வளர்க்கப்பட்ட இரண்டு வாலிபர்கள் இருந்தார்கள்.
அவர்கள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு
ஏழைகளாகவும், விவசாயம் செய்கிற வாலிபர்களாகவும் இருந்தார்கள்.
அவர்கள் ஒன்றாக வளர்ந்தார்கள். ஒரு
நாள் அவர்களில் ஒருவன் விவாகம் பண்ணினான்.
அதற்கும் ஒரு சில நாட்கள்
கழித்து, மற்றவன் விவாகம் பண்ணினான்.
மேலும் அவர்களில் ஒருவன்
ஜீவிக்கும்படி பட்டணத்திற்குள் சென்றான். நிறுவன பங்குகளை வாங்கி
விற்பனை செய்யும் சந்தைகளை (stock markets) நடத்தத் துவங்கி,
அவனுடைய சிறுபிள்ளை பருவ போதகங்களிலிருந்து (childhood teachings) விலகிப் போய்,
தவறான காரியங்களுக்குள் போய் விட்டான். அவன்
அவைகளை நடத்தி, இறுதியில் அவன்
ஒரு கோடீஸ்வரனாக ஆகும் அளவுக்கு பெரும்
பணக்காரனாகி விட்டான். மேலும் அவன் சிகாகோவுக்கு
இடம்பெயர்ந்து, மகத்தான வீதிகளில் ஒன்றைப்
பெற்று, தனக்கென ஒரு மாளிகையைக்
கட்டினான். அவனும் அவனுடைய மனைவியும்
இரவு கேளிக்கை விடுதிகளுக்கு (night clubs) ஓடி,
மதுவைக் குடித்து, இரவு முழுவதும் போதையில்
மயங்கிக் கிடந்தனர். அவர்கள் விரும்புகிற எதையும்
அவர்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க அவர்களுக்கு சமையல்காரர்களும்
மற்றும் ஒவ்வொன்றும் இருந்தனர். மேலும் அவர்கள் நன்றாக
வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணினர்.
ஆனால் அதைப் போன்று ஜீவிக்கிற
ஒரு மனிதனுக்கு சமாதானம் இருக்காது. ஒரு குழப்பமடைந்த இருதயத்திற்கு
சமாதானம் இருக்காது. ஒரு பாவமான இருதயத்திற்கு
சமாதானம் இருக்க முடியாது. ஒரு
மனிதன் குடியை விரும்பி, அதை
‘வாழ்க்கை’ என்று
அழைத்து, தான் ஒரு பெரிய
நேரத்தைக் கொண்டிருப்பதாக எண்ணினால், அது அவனுடைய வெறுமையைக்
காட்டுகிறது. ஒரு மனிதனை எடுத்து,
ஒரு மில்லியன் டாலர்கள் அவன் பெறும்படி செய்யுங்கள்,
அவன் இரண்டு மில்லியன் டாலர்களை
விரும்புவான். ஒரு விருந்துக்குச் சென்று,
ஒரு மதுவை குடிக்கும் ஒரு
மனிதனை இன்றிரவு எடுத்துக் கொள்ளுங்கள், அவன் வேறொன்றை விரும்புவான்.
ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள்,
அவன் ஒருமுறை அவனுடைய மனைவிக்கு
உண்மையில்லாதவனாக ஜீவிக்கிறான், அவன் மீண்டும் அவ்விதமே
ஜீவிப்பான்; இதற்கு எதிர்மாறாகவும் (அப்படியே).
பாருங்கள், அது ஏதோவொன்றாக இருக்கிறது,
மேலும் அவன் ஒருபோதும் திருப்தியடைவதேயில்லை.
அவன் தன்னுடைய கைகளில் ஒரு மில்லியன்
டாலர்களோ, அல்லது பத்து மில்லியன்
டாலர்களோ கொண்டிருக்கலாம்; அவனோ குடிபோதையில் மயங்கி,
இரவில் படுத்துக் கிடப்பான்; அடுத்த நாள் காலையில்,
அவன் எழுந்து மனதை விட்டு
அகலாத தொல்லை கொடுக்கும் எண்ணங்களால்
அவதிப்பட்டு, பெருங்கவலை கொண்டு, மனக்கலக்கமான சிந்தையைக்
கொண்டிருப்பான். நீங்கள் அதையா சமாதானம்
என்று அழைப்பீர்கள்? அது சமாதானம் அல்ல.
ஆனால் ஒரு மனினுக்கு தன்னுடைய
தலைசாய்க்க ஒரு தலையணை கூட
இல்லாமல் இருக்கலாம், அவனுக்கு ஒரு ஜோடி நல்ல
காலணிகள் கூட இல்லாமல் இருக்கலாம்,
அல்லது தன்னுடைய வீட்டில் ஒரு நல்ல சாப்பாடு
கூட இல்லாமல் இருக்கலாம்; ஆனால் தேவன் அவனுடைய
இருதயத்தில் ஆளுகை செய்வாரானால், அவன்
சந்தோஷமாக படுக்கைக்குச் சென்று சந்தோஷமாக எழும்புவான்.
அது ஒரு நீடித்த சமாதானம்.
அது தேவன் செய்கிற ஏதோவொன்றாக
உள்ளது.
இந்த மனிதனோ அந்த போதனையை
மறந்து விட்டிருந்தான். அவன் சூதாடும்படிக்கு போனான்.
கிறிஸ்துமஸ் நேரம் வந்தது. அவனுடைய
நண்பனைக் குறித்து நினைத்தான், எனவே அவன் ஒரு
கடிதத்தை அவனுக்கு எழுதினான். பணக்காரனாயிருந்த அவர்களில் ஒருவனுடைய பெயர் ஜிம் என்பதாகும்,
ஏழையாயிருந்தவனுடைய பெயர் ஜான் என்பதாகும்.
அவன் இவனுக்கு ஒரு கடிதம் எழுதினான்,
அவன், ‘ஜான், நீ விடுமுறை
நாட்களில் என்னைப் பார்க்கும்படி வர
விரும்புகிறேன். நான் உன்னைச் சந்தித்து
மீண்டும் உன்னிடம் பேச விரும்புகிறேன். நான்
உன்னை அநேக வருடங்களாக பார்க்கவேயில்லை’ என்று
கூறி (எழுதினான்).
இவனோ,
‘ஜிம், நான் வர விரும்புகிறேன்,
ஆனால் என்னால் வரமுடியாது. வருவதற்கு
என்னிடம் பணமில்லை’ என்று கூறி பதில்
எழுதினான்.
ஒரு சில நாட்களில், தபாலில்
ஒரு காசோலை வந்தது, ‘வந்து
விடு! எப்படியாயினும் நீ வரும்படி நான்
விரும்புகிறேன்’ என்று
எழுதப்பட்டிருந்தது. எனவே நாட்டுப்புற இளைஞனான
ஜான் ஆயத்தமானான், ஒரு நல்ல சுத்தமான
ஒரு ஜோடி மேலாடைகளைகளையும், அவனுடைய
வைக்கோல் தொப்பியையும் (kady hat), ஒரு
வித்தியாசமான நிறமுடைய அவனுடைய சிறு கோட்டையும்
அணிந்து கொண்டு, இரயில் ஏறினான்.
அவன் அங்கு போய் சேர்ந்த
போது, அங்கே ஒரு ஓட்டுனர்
அவனை சந்திக்கும்படிக்கு, ஒரு பெரிய விலை
மதிப்பு மிக்க சொகுசு காருடன்
உட்கார்ந்து கொண்டிருந்தான். எவ்வாறு செயல்படுவது என்று
அவனுக்குத் தெரியவில்லை. அவன் இந்த சொகுசு
காரில் ஏறி, அவனுடைய தொப்பியை
தன்னுடைய கரத்தில் பிடித்தவாறே சுற்றிலும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். சிகாகோவிலுள்ள ஒரு மகத்தான மாளிகைக்கு
காரோட்டிச் செல்லப்பட்டான்.
வெளியேறி
கதவருகில் சென்று அழைப்பு மணியை
ஒலித்தான். ஒரு வேலையாள் வெளியே
வந்து, ‘ஐயா, தயவுசெய்து உங்களுடைய
அட்டை’ என்றான். அவனிடம் என்ன பேசிக்
கொண்டிருந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை.
அவன் தன்னுடைய தொப்பியை அவனிடம் கொடுத்தான். அவன்...
வரவேற்பு அட்டை இல்லை என்பதைக்
குறித்து அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. இவ்வுலக
பொருட்கள் அதிகமாக அவனிடம் கிடையாது.
அவன், ‘உம்முடைய அட்டை எனக்குத் தேவைப்படுகிறது’ என்றான்.
அவன்,
‘ஐயா, நீர் எதைக் குறித்து
பேசிக் கொண்டிருக்கிறீர் என்பது எனக்குத் தெரியவில்லை’ என்றான்.
‘நான் வரவேண்டுமென்று ஜிம் (கடிதம்) அனுப்பியிருந்தான்.
எனக்குத் தெரிந்ததெல்லாம் அது தான்’ என்றான்.
எனவே அவன் திரும்பிச் சென்று
தன்னுடைய கூட்டாளியிடம் (partner)
கூறினான், அவன் இன்னும் படுக்கையை
விட்டு வெளியே வந்திருக்கவில்லை. அவன்,
‘விநோதமாக தோற்றமளிக்கிற ஒரு மனிதன் அங்கே
வாசலில் நின்று கொண்டிருக்கிறான்’ என்றான். ‘அவன் உடையுடுத்தியிருக்கிறான்... அவனைப் போன்று
உடையுடுத்தியுள்ள ஒரு மனிதனை நான்
ஒருபோதும் கண்டதேயில்லை. மேலும் ஜிம் அவனிடம்
(கடிதம்) அனுப்பினதாக அவன் கூறினான்’ என்றான்.
அவன்,
‘‘உள்ளே வா’ என்று அவனிடம் சொல்’ என்றான்.
அவன் தன்னுடைய குளியலாடையுடன் நகர்ந்து, கீழே முகப்புக்கூடத்திற்கு (hall) இறங்கிச் சென்று, அவனுடைய இந்த
பழைய நாட்டுப்புற நண்பனை சந்தித்து, அவனுடைய
கரத்தைக் குலுக்கி, ‘ஜான், நான் உன்னைக்
காண்பதில் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறேன் என்பது உனக்குத்
தெரியவில்லை!’ என்றான்.
அந்தப்
பழைய நாட்டுப்புற நண்பன் நின்றபடியே, அந்த
அறையைச் சுற்றிலும் நோக்கிப் பார்த்து, ‘ஜிம், நீ நிச்சயமாகவே
திரளான (செல்வத்தைப்) பெற்றிருக்கிறாய்’ என்றான்.
அவன்,
‘நான் உன்னைச் சுற்றிக் காண்பிக்க
விரும்புகிறேன்’ என்றான்.
அவன் அவனை மேல்மாடிக்கு அழைத்துச்
சென்று, வெளியே அதிக அளவு
சூரிய வெளிச்சம் உள்ளே புகுமாறு கட்டப்பட்டிருந்த
அந்த அறையின் (sun porch) ஜன்னல்களைத் திறந்தான்.
‘மார்த்தா
எங்கே?’ என்றான்.
‘ஓ,
அவள் இன்னும் வரவில்லை. அவள்
கடந்த இரவில் வெளியே இருந்தாள்’ என்றான்.
‘ஊ,
நீங்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு - எவ்வாறு நேசிக்கிறீர்கள்?’ என்றான்.
‘ஓ,
அதிகமாக அல்ல. ஜான், நீயும்
கேட்டியும் (Katie)
ஒருவருக்கொருவர் எவ்வாறு நேசிக்கிறீர்கள்?’ என்று
கேட்டான்.
‘அருமையாக
உள்ளது’ என்றான்.
‘ஓ,
அவள் வீட்டிலா இருக்கிறாள்?’ என்று கேட்டான்.
‘ஆம்,
எங்களுக்கு ஏழு குழந்தைகள் உண்டு’ என்றான்.
‘உங்களுக்கு ஏதாவது பிள்ளைகள் இருக்கிறார்களா?’
என்று கேட்டான்.
‘இல்லை.
மார்த்தாளுக்கு எந்த பிள்ளையும் கிடையாது’ என்றான்.
‘எங்களுக்கு எந்த பிள்ளைகளும் இல்லாமல்
இருப்பது நல்லது என்று அவள்
நினைத்தாள்; சமுதாய வாழ்க்கையோடு தலையிடுதல்.
உனக்குத் தெரியும்’ என்று கூறிவிட்டு, திரைகளைப்
பின்னால் உயர்த்தி, ‘இங்கே பார்’ என்றான். ‘அதோ அங்கேயுள்ள அந்த
வங்கியை நீ காண்கிறாயா?’ என்றான்.
அவன்,
‘ஆம்’ என்றான்.
‘நான்
அந்த வங்கியில் தலைமை அதிகாரியாக இருக்கிறேன்’ என்றான்.
‘அந்த இரயில் போக்குவரத்து கம்பெனியை
நீ காண்கிறாயா?’ என்று கேட்டான்.
‘ஆம்.’
‘நான்
அதில் பத்து இலட்சம் டாலர்கள்
பெறுமானமுள்ள பங்குகளைக் (shares) கொண்டிருக்கிறேன்’ என்றான்.
மேலும்
அவன் அங்கே கீழே நோக்கிப்
பார்த்து, மகத்தான தோட்டங்களையும் மற்றும்
ஒவ்வொன்றையும் கண்டான், அது காண்பதற்கு எவ்வளவு
அழகாயிருந்தது. பழமையான ஜான் தன்னுடைய
வைக்கோல் தொப்பியைக் கையில் வைத்துக் கொண்டு,
சுற்றிலும் நோக்கியவாறு நின்று கொண்டிருந்தான். அவன்,
‘ஜிம், அது அருமையானது. நீ
அதைப் பெற்றிருக்கிறாய் என்பதற்காக நான் நிச்சயமாகவே நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
நானும் கேட்டியும் அதிகம் பெற்றிருக்கவில்லை. நாங்கள்
இன்னும் அங்கேயுள்ள சிறிய பழமையான தனித்தனியான
விளம்பர பலகையால் செய்யப்பட்ட வீட்டில் வாழ்ந்து வருகிறோம்’ என்றான். ‘எங்களிடம் அதிகம் கிடையாது, ஆனால்
நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்’ என்றான்.
சிறிது
கழிந்து ஒரு கூட்டம் கிறிஸ்துமஸ்
கேரல் (carol) பாடுபவர்களின்
சத்தம் உள்ளே வரத் தொடங்கியது.
அமைதியான
இரவு, பரிசுத்தமான இரவு,
வாலிப கன்னித்தாயையும் பிள்ளையையும் சுற்றி
எல்லாம்
அமைதியாகவும் பிரகாசமாகவும் உள்ளது,
பரிசுத்தமான
குழந்தை மிகவும் மென்மையாகவும் சாந்தமாகவும்
உள்ளது.
ஜிம் திரும்பி ஜானைப் பார்த்தான்; ஜான்
ஜிம்மை நோக்கிப் பார்த்தான். ‘ஜான், நான் உன்னிடம்
ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நாம்
பையன்களாக இருந்த சமயம் உனக்கு
ஞாபகம் உள்ளதா? நாம் வழக்கமாக
அங்கே அந்த சாலையோரத்திலிருந்த அந்த
சிறிய பழைமையான சிவப்பு நிற சபைக்கு
போய், அவர்கள் பாடுகிற அந்தப்
பழமையான நாட்டுப்புற பாடகர் குழுவின் பாடல்களைக்
கேட்போமே?’ என்றான்.
‘ஆம்’ என்றான்.
‘நீ
இன்னும் அங்கே போகிறாயா?’ என்றான்.
‘ஆம்,
நான் இன்னும் அதைச் சேர்ந்தவனாயிருக்கிறேன்.
இப்பொழுது நான் அங்கே ஒரு
டீக்கனாக இருக்கிறேன். ஜிம், உன்னைக் குறித்து
என்ன? இங்கே உனக்கு எவ்வளவு
சொந்தமாக இருக்கிறது என்பதைக் குறித்து நீ பேசிக் கொண்டிருந்தாய்.
உனக்கு மேலேயுள்ள அந்தப் பாதையில் எவ்வளவு
சொந்தமாக உள்ளது?’ என்றான்.
‘ஜான்,
நான் வருந்துகிறேன், எனக்கு மேலேயுள்ள அப்பாதையில்
எனக்கு சொந்தமாக எதுவும் கிடையாது. ஒருவருடம்
கிறிஸ்துமஸþக்கு சற்று முன்பு,
நமக்கு எந்த காலணியும் இல்லாதிருந்தது
ஞாபகம் உள்ளதா? நாம் கிறிஸ்துமஸிற்காக
கொஞ்சம் பட்டாசுகள் பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வமாய் இருந்தோமே.
கிறிஸ்துமஸிற்காக கொஞ்சம் பட்டாசுகள் வாங்கும்படிக்கு,
நாம் வெளியே சென்று, சில
முயல்களைப் பிடிக்கும்படி கொஞ்சம் பெட்டி கண்ணிகளை
வைத்தோமே. உன்னுடைய பெட்டிக் கண்ணியில் அந்தப் பெரிய காட்டு
முயல்கள் இருந்த அந்த காலை
வேளை உனக்கு ஞாபகம் உள்ளதா?’
என்றான்.
ஜான்,
‘ஆம், எனக்கு ஞாபகம் உள்ளது’ என்றான்.
‘நீ
கொஞ்சம் பட்டாசுகள் வாங்கினாய். நீ சென்று கொஞ்சமானதைப்
பெற்று, அவைகளை எனக்குப் பங்கிட்டுக்
கொடுத்தாயே.’
அவன்,
‘ஆம்’ என்றான்.
‘ஜான்,
நான் பெற்றிருந்த எதையும் உன்னோடு பங்கிட்டுக்
கொள்வேன். ஆனால் நீ ஒரு
காரியத்தை எனக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டுமென நான்
விரும்புகிறேன். நான் அந்த பழமையான
தூசிபடிந்த சாலையில் மீண்டும் அந்த சிறிய பழமையான
சபை மட்டுமாக வெறும்காலுடன் நடந்து, அந்த பாடல்குழுவினர்
பாடி, அந்தப் பழைமை நாகரீகமான
நாட்டுப்புற போதகர் பிரசங்கிக்கும்போது, ஜீவனுள்ள
தேவனுடைய பிரசன்னத்தை உணரக் கூடுமானால், எனக்கு
சொந்தமான எதையும் நான் கொடுத்துவிடுவேன்.
நான் எதையும் கொடுத்துவிடுவேன். நான்
மீண்டும் திரும்பி, நான் அந்த பழமையான
சலையில் நடந்த போது நான்
கொண்டிருந்த அந்த ஆசீர்வதிக்கப்பட்ட சமாதானத்தை
கொண்டிருக்கக் கூடுமானால், எனக்கு சொந்தமான எல்லாவற்றையும்,
இரயில் போக்குவரத்தில் உள்ள ஒவ்வொரு பங்குகளையும்,
வங்கியிலுள்ள எல்லா பாகங்களையும், இந்த
வீட்டையும், எல்லாவற்றையும் கொடுத்து விடுவேன்’ என்றான்.
ஜான் அவனைச் சுற்றிலும் தன்னுடைய
கரங்களைப் போட்டு அவனைப் பற்றிக்
கொண்டான்; அவன், ‘ஐசுவரியமான மூன்று
சாஸ்திரிகள் இருந்தனர். ஒரு சமயத்தில், இயேசு
ஒரு குழந்தையாக இருந்த போது, அவர்கள்
வந்து இயேசுவின் பாதத்தருகே எல்லாவற்றையும் வைத்தனர். அவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு
மன்னிப்பைப் பெற்றுக் கொண்டனர்’ என்றான். அவன், ‘நான், என்றாலும்
நான்... ஜிம், நீ செய்த
இந்த எல்லா காரியங்களிலும் ஆசீர்வாதத்தோடு
வியக்கத்தக்க விதத்தில் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். ஆனால்
சரியாகச் சொன்னால், எனக்கு என்னுடைய மனைவியும்
ஏழு பிள்ளைகளும் இருக்கிறார்கள், (நாங்கள்)
அங்கே வைக்கோல் மெத்தையில் தூங்கி, அதில் ஜீவித்து
வருகிறோம், (அப்படியிருந்தும்) ஜிம், நீ கொண்டிருக்கக்கூடிய
உன்னுடைய எல்லா ஆடம்பரங்களையும் நீ
கொண்டிருப்பதைக் காட்டிலும் என்னுடைய இருதயத்தில் சமாதானத்தைக் கொண்டிருக்கிறேன்’ என்றான்.
அது சரிதான், நண்பர்களே. செல்வ செழிப்பு என்பது
டாலர்களால் அளவிடப்படக்கூடியது அல்ல. செல்வ செழிப்பானது
பெரும் பெயர் புகழால் அளவிடப்படக்கூடியது
அல்ல. செல்வ செழிப்பு என்பது
தேவனுடைய இராஜ்யம் மனுஷ இருதயத்திற்குள் வந்து,
அவனுடைய உணர்ச்சியை மாற்றி, கிறிஸ்து இயேசுவில்
அவனை ஒரு புது சிருஷ்டியாக
உண்டாக்கி, அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும்
போது இருப்பதாகும். அதுதான் பூமியிலேயே அதிக
விலையேறப்பேற்ற காரியமாகும்.
செய்தி:
ஒரே சபையில் ஒரே தேவனின்
ஒருமைப்பாடு, 58-1221 E,
பத்தி எண் 116-142
*****
No comments:
Post a Comment