333. நானும்
பில்லியும் விமானத்தைவிட்டு இறங்கி இந்தியாவை அடைந்தபோது
ஒரு ஆங்கிலப் பத்திரிகையை நான் படிக்க நேர்ந்தது.
அதில் "பூகம்பம் நின்றுவிட்டிருக்க வேண்டும். பறவைகள் திரும்பி வருகின்றன"
என்ற விவரம் அச்சிடப்பட்டிருந்தது. ஒரு விசித்திரமான
சம்பவம் நிகழ்ந்தது.
334. இந்தியாவில்
நம்மைப்போன்று கம்பிகளினால் செய்யப்பட்ட வேலிகள் கிடையாது. அவர்கள்
அடைப்புக்காகக் கற்பாறைகளை உபயோகிக்கின்றனர். அவர்கள் வீடுகளையும் கற்பாறைகளைக்
கொண்டே கட்டுகின்றனர். இந்தியாவில் எங்கும், எல்லாவிடத்திலும் உஷ்ணமாகவே உள்ளது. ஓ... மலைகளின்
மேல் வசிப்பவரைத் தவிர. கல்கத்தா முழுவதிலும்
ஜனங்கள் தெருக்களில் வாழ்ந்து மரிக்கும் அளவிற்கு பட்டினி கிடக்கின்றனர்.
335. இப்பொழுது,
ஆகவே அவர்கள் மதில்களை வீடுகளின்
பக்கத்தில் சுற்றிலும் கற்பாறைகளினால் கட்டுகின்றனர். ஆடுமாடுகளுக்கென்று அவர்கள் கிணறுகளை வெட்டி,
அதைச் சுற்றிலும் மதில்கள் கட்டுகின்றனர்.
336. ஏதோ
ஒன்று திடீரென்று சம்பவிக்கத் துவங்குகிறது. சிறு பறவைகள் இம்மதில்களில்
காணப்படும் இடைவெளிகளில் கூடுகட்டி குஞ்சு பொறித்து குஞ்சுகளை
வளர்க்கின்றன. ஏதோ ஒன்று சம்பவிக்கத்
துவங்குகிறது.
337. ஒவ்வொரு
நாளும், உஷ்ணம் அதிகமாகும்போது ஆடுமாடுகள்
மதிலின் அருகிலுள்ள கிணறுகளின் கீழ் நிழலுக்காக வந்து
நிற்கும்.
338. அந்தச்
சிறு பறவைகள் யாவும் அந்த
இடங்களில் வசிக்கின்றன. சடுதியாக ஏதோ ஒரு காரணத்தால்
பறவைகள் பறந்துசென்று கூடுகளுக்குத் திரும்புவதில்லை. நான் சிறு பறவைகளைக்
குறித்து அன்று கூறினேன் அல்லவா?
பாருங்கள்? ஏதோ சில காரணங்களால்
அவைகள் பறந்து விடுகின்றன. வெளியே
சென்ற அவைகள் தங்கள் கூடுகளுக்கு
திரும்புவதில்லை. அவை வயல்வெளிகளில் அல்லது
மரங்களில் அமர்ந்துகொள்கின்றன.
339. அதுபோன்று
ஆடுமாடுகளும் வயல்வெளிகளில் சென்று ஒன்றையொன்று தழுவிக்கொண்டு
நிற்கும். அவை தங்கள் ஸ்தலங்களுக்குத்
திரும்புவதில்லை. அதுதான் செய்வதற்கான சரியான
வழியாகும். ஏதோ ஒன்று சம்பவிக்கப்
போகின்றது என்று அவைகளுக்குத் தெரியும்.
340. அப்பொழுது
திடீரென்று பூகம்பம் உண்டாகி, கற்பாறை மதில்கள் பூகம்பத்தினால்
அசைந்து விழுந்து போகின்றன.
341. பூகம்பம்
நின்றவுடன், மூன்று நான்கு நாட்களாக
திரும்பிவராத பறவைகள் தங்கள் கூடுகளுக்குத்
திரும்புகின்றன. ‘அவைகள் கூடுகளுக்குத் திரும்புவதால்
பூகம்பங்கள் நின்று போயிருக்கும்’ என்று
ஜனங்கள் அறிந்துகொள்கின்றனர்.
342. ஏன்?
நோவாவின் காலத்தில் ஆடுமாடுகளையும் பறவைகளையும் பேழைக்குள் போகச் செய்த அதே
தேவன் பாதுகாப்பான ஸ்தலத்துக்கு அவைகளை இன்று பறக்கச்
செய்ய முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்
அல்லவா? (சபையார் ‘ஆமென்’
என்கின்றனர் – ஆசி.)
இரண்டாம்
முத்திரை, மார்ச் 19, 1963 மாலை
~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment